1990 ஆம் ஆண்டுகளில் மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான ‘வெள்ளிக்
கிழமை’ விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பி அந்த சிறப்பான கடந்த காலத்தை மீண்டும் நினைவுக்கு
கொண்டுவரும் மீரா சிகைக்காய்
சென்னை, மே 26, 2020: இதற்கு முன்பு ஒருபோதும்
சந்தித்திராத கோவிட்-19 தொற்றுப் பரவலின் இக்கட்டான சூழலில். நாளின் பெரும்பகுதியை
நமது வீடுகளுக்குள்ளேயே செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிற நிலையில் இந்த
நெருக்கடியான, நிச்சயமற்ற தன்மையின் காரணமாக உருவாகிற மன அழுத்தத்தை சமாளிப்பதில் சிரமம்
அதிகமானதாக மாறிவருகிறது.
பாரம்பரியம் என்பது அனைத்தையும்
தனக்குள் உள்ளடக்கியிருக்கிறது என்றும் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும் அது உறுதுணையாக
இருக்கும் என்றும் கவின்கேர் குழுமத்தின் பிரபலமான முதன்மை பிராண்டுகளுள் ஒன்றான மீரா
உறுதியாக நம்புகிறது.
இருகரம் கூப்பி வணக்கம்
என்று சொல்லி வரவேற்பதில் தொடங்கி வெளியிலிருந்து வீட்டிற்குள் வருகிறபோது கைகளையும்,
கால்களையும் சுத்தம் செய்வது வரை நமது பாரம்பரியமான நடைமுறையின் முக்கியத்துவத்தை இந்த
உலகம் மெதுவாக உணர தலைப்படுகிற நிலையில் மற்றொரு மிக முக்கியமான நமது பாரம்பரிய வழக்கம்
ஒன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்த பிராண்ட் மீரா முடிவு செய்திருக்கிறது. சிகைக்காய் (பேச்சு
வழக்கில் சீயக்காய்) பயன்படுத்தி எண்ணெய் தேய்த்து குளிக்கிற வழக்கம்தான் அது.
1990களின் காலகட்டத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்த அந்த இனிய நினைவுகளை மீண்டும் கொண்டுவருவதற்காக
தங்களது மிகப் பிரபலமான ‘வெள்ளிக்கிழமை’ விளம்பர படத்தை மறு ஒளிபரப்பு செய்யவிருப்பதாக
மீரா அறிவித்திருக்கிறது.
ஏறக்குறைய தமிழ்நாட்டில்
உள்ள ஒவ்வொரு இல்லமுமே இந்த விளம்பரப்படம், அதன் அற்புதமான இசை மற்றும் இனிய, பாரம்பரியமான
சடங்குகளோடு வலுவாக தொடர்புபடுத்தி பார்ப்பார்கள் என்பது நிச்சயம். தனது மகளுக்கு ஓர்
அம்மா பாசத்தோடு ரிலாக்ஸ் செய்யும் எண்ணெய் மசாஜ் செய்கிறார் என்பதையும், அதைத் தொடர்ந்து
11 இயற்கையான மூலிகைகளின் கலவையான மீரா மூலிகைப் பொடியின் மூலம் தலைக்கேசத்தை தூய்மையாக்குவதை
எப்படி செய்கிறார் என்பதையும் இனிய இசையோடு கூடிய அந்தக் காட்சி சித்தரிப்பு அழகாக
எடுத்துக்காட்டியிருந்தது. அளவுக்கு அதிகமான உடல்வெப்பமானது, குறிப்பாக சுட்டெரிக்கும்
கோடைக் காலத்தில் தலைவலி, முடி உதிர்வு, முறையான தூக்கம் வராமை போன்ற பல பிரச்னைகளை
விளைவிக்கக்கூடும். மீரா சிகைக்காய் பொடியுடன் உடலுக்கு புத்துயிரூட்டி புத்துணர்வு
தரும் எண்ணெய் மசாஜ் குளியல் இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் வராமல் தடுப்பதோடு எண்ணற்ற
பிற ஆரோக்கிய பலன்களையும் உங்களுக்கு வழங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக