மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய பட்டயக் கணக்காளர்அமைப்பின் செங்கல்பட்டு மாவட்டக் கிளை - துணை மண்டல மாநில மாநாடு CA


இந்திய பட்டயக் கணக்காளர்அமைப்பின் 

செங்கல்பட்டு மாவட்டக் கிளை :

 துணை மண்டல மாநில மாநாடு


இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் சார்பில் இரண்டு நாள் துணை மண்டல மாநில மாநாடு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி கலையரங்கில் 2023 ஆகஸ்ட் 11 மற்றும் 12 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை)ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பண்டைய தமிழ் புலவர் ஔவையாரை நினைவுகூறும் வகையில் இந்த மாநாட்டிற்கு 'ஆத்திச்சூடி' என்று பெயரிடப்பட்டது.மாநாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளுக்கும், ஆத்திச்சூடி நூலில் இருந்த  பொன்மொழிகள் மேற்கோள் காணப்பட்டுள்ளன.

கருத்தரங்கிற்கு விருந்தினர்களாக சி.ஏ. திரு ஜி.ராமசாமி (இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்),  திரு. ரவி ராமச்சந்திரன் ஐ.ஆர்.எஸ், (சி.ஐ.டி விலக்குகள்) ஆகியோர் தலைமை தாங்கினர்.

செங்கல்பட்டு மாவட்ட கிளையின் தலைவர் சி.ஏ. திரு  சிவகுருநாதன் வரவேற்புரையாற்றினார். இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் மத்திய, பிராந்திய மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் முன்னாள் தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 500-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து பேச்சாளர்களும் தங்கள் துறையில் சிறந்து விளங்கியவர்கள்.  சிறிய மற்றும் நடுத்தர தணிக்கையாளர்களுக்கான தணிக்கை முறை மற்றும் அவற்றின் மறுஆய்வுகளுக்கான நடைமுறை அணுகுமுறை, அறக்கட்டளைகளுக்கான புதிய தணிக்கை அறிக்கை படிவம் -10 பி, கணக்காய்வு அறிக்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகள் - 44 ஏபி, செயற்கை நுண்ணறிவு ஆகிய தலைப்புகளில் சி.ஏ. திரு சின்னசாமி கணேசன், சி.ஏ திரு ஆர். கிருஷ்ணன், சி.ஏ திரு வி. ராம்நாத், திரு பிரசாந்த் கந்தி ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்த்து கொண்டனர்.  

இம்மாநாட்டின் இரண்டாம் நாளில் பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் தீவிர மோசடி விசாரணை ஆகியவற்றின் கீழ் வரும் இரட்டை கட்டுப்பாட்டு நிபந்தனைகள், உற்பத்தி மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் தணிக்கை மற்றும் விசாரணை, முதலீட்டாளர் விழிப்புணர்வு, இந்திய நிறுவனங்கள் சட்டம் அட்டவணை 3 இல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் ஆகியவை குறித்து சி.ஏ. திரு எம்.ஆர்.வெங்கடேஷ், திரு பி.ஜெகன்நாதன், சி.ஏ திரு கே.சிவராஜன், சி.ஏ. திரு ஹிமான்ஷு வி.கிஷ்னத்வாலா ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

மேலும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி போதமயானந்தா, தொழில்முறை நடைமுறையில் தர்மத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளார்.

ஐ.சி.ஏ.ஐ.யின் தென் இந்திய பிராந்திய கவுன்சில் தலைவர் சி.ஏ திரு பன்னராஜ் சிறிகேரி, ஐ.சி.ஏ.ஐ.,யின் முன்னாள் மத்திய கவுன்சில் உறுப்பினர் சி.ஏ. திரு ஜி.சேகர் ஆகியோர் நிறைவு நாள் கூட்டத் தொடரில்  பங்கு வகிக்கின்றனர். விழாவின் முடிவில்  செங்கல்பட்டு மாவட்ட கிளை செயலர் சி.ஏ., சிவ சந்திர ரெட்டி நன்றி உரையாற்றுகிறார்.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...