Showing posts with label Books - Business. Show all posts
Showing posts with label Books - Business. Show all posts

Saturday, April 10, 2021

விகடன் பிரசுரம்: பரபரப்பான விற்பனையில் முதலீட்டு புத்தகங்கள்

விகடன் பிரசுரம்: பரபரப்பான விற்பனையில் முதலீட்டு புத்தகங்கள்

 விகடன் பிரசுரம்: 
பரபரப்பான விற்பனையில் 

முதலீட்டு புத்தகங்கள்
நூலாசிரியர்கள்: 
வ.நாகப்பன், 
சி.சரவணன், 
கே.எஸ்.கமாலூதீன் 

Thursday, December 12, 2019

நேச்சுரல்ஸ் குமாரவேல் பரிந்துரைக்கும் பத்துப் புத்தகங்கள்

நேச்சுரல்ஸ் குமாரவேல் பரிந்துரைக்கும் பத்துப் புத்தகங்கள்BOOKs

நேச்சுரல்ஸ் குமாரவேல் தன்னிடம் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேலான ஆடியோ புத்தகங்கள் இருக்கின்றன என்றும், தினமும் 2-3 மணிநேரம் அதைக் கேட்பதில் செலவிடுவதாகவும் கூறுகிறார்.

நேச்சுரல்ஸ் குமாரவேல்  மனைவியுடன் 

அவர் பரிந்துரைக்கும் பத்துப் புத்தகங்கள் கீழே.

1. The magic of thinking big

2. Tough times don’t last. Tough people do.

3. Body and Soul

4. Rich dad, Poor dad

5. The psychology of winning

6. The 7 habits of highly effective people

7. Goals

8. How to make your dreams come true

9. Belief

10. Ennangal (In Tamil)

Sunday, October 13, 2019

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட் - கேம் சேஞ்சர்ஸ்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட் - கேம் சேஞ்சர்ஸ்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட் - கேம் சேஞ்சர்ஸ்

கேம் சேஞ்சர்ஸ்

ஆனந்த விகடனில் தொடராக வந்தது ' கேம் சேஞ்சர்ஸ்'. நம் வாழ்க்கையை மாற்றிய சமகாலத்தின் 35 முக்கிய ஸ்டார்ட்அப்களின் கதைகள் இதிலுண்டு.இந்தப் புத்தகம் முழுக்க 'இன்ஸ்பிரேஷன்' பற்றியது. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (594) தளராத ஊக்கம் உடையவர்களிடம் ஆக்கம் இருக்கும் என்கிறது வள்ளுவனின் வரிகள். அதுமட்டுமல்ல... ஆக்கம் அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார். அப்படி ஊக்கத்தைக் கைவிடாது ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள்தான், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட்... போன்ற ஸ்டார்ட்அப்களை உருவாக்கினார்கள். அவர்கள் தாங்கள் எடுத்த முயற்சியில் முன்னேறியவர்கள் மட்டுமல்ல... வெற்றியின் உச்சத்தைத் தொட்ட மேஜிக்காளர்கள். எப்படி என்கிற கேள்வியில்தான் ஒளிந்திருக்கிறது அந்த மேஜிக். படிப்படியாய் முன்னேற்றத்தில் வரும் தோல்வி, இலக்கை அடையும்போது தோன்றும் சறுக்கல் இவ்விரண்டும் சந்திக்கும் அந்தப் புள்ளி,


மூளையில் ஒளிரும் ஒளிதான் இவர்களை மாத்தி யோசிக்க வைத்திருக்கிறது. இவர்களின் மாற்று யோசனையில் உருவான கண்டுபிடிப்புகள் உலகையே ஆண்டுகொண்டிருக்கின்றன. சட்டென்று உதித்த ஐடியாவை ஆக்கபூர்வ வழியில் செயல்வடிவமாக்கியவைதான், இப்போது உலக மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப்கள். அவை எப்படி உருவாகின என்பதைப் பற்றி ஆனந்த விகடனில் கார்க்கிபவா எழுதிய தொடர் கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது.

கேம் சேஞ்சர்ஸ்
விகடன் பிரசுரம்

https://books.vikatan.com/index.php?bid=2506

விலை: 240இணையத்தில் வாங்க: https://amzn.to/2klyv8tபுத்தகத்துக்காக இதன் ஆசிரியர்  கார்க்கிபவா ட்விட்டரில் எழுதிய  எழுதிய முன்னுரை:

http://iamkarki.blogspot.com/

காலம் ஒருவரை எங்கெல்லாம் இழுத்துச் செல்லுமென்பது எப்போதும் ஆச்சர்யம்தான். 2007ல் வலைப்பூ தொடங்கியபோது அதற்கு ‘சாளரம்’ எனப் பெயரிட்டேன். ‘வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழி காற்று வரத்தான் செய்யும்” என்பது அதன் டேக்லைன். எழுத்தில் எனக்கு ஆர்வமிருந்தாலும் என் வேலை என்பது வேறாக இருந்ததைதான் அப்படி குறிப்பிட்டிருந்தேன். அச்சுப் பத்திரிகைகள் மீது அவ்வளவு ஆர்வம்; ஆனால் வாய்ப்பில்லை. எனவே, வலைப்பூவில் எழுதினேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு வலைப்பூவில் எழுதியவை அச்சுப் பத்திரிகைகளில் வரத் தொடங்கின.

பின்னர், சில பிளாகர்கள் புத்தகம் போடத் தொடங்கினார்கள். எனக்கு வாய்ப்பு வந்தும் அதைத் தவிர்த்தேன். அனுபவங்களை அப்படியே எழுதிவைக்கும் வலைப்பூ (என்) கட்டுரைகளுக்கு அந்தத் தகுதி இல்லையென நம்புகிறேன். அதனால் அப்போது தவிர்த்தேன்.காலம் என் கைப்பிடித்து எங்கெங்கோ கூட்டிப் போனது; சினிமா வரை. இறுதியில் அது என்னை டிராப் செய்த இடம் ஆனந்த விகடன். 2015ல் ஆனந்த விகடனுக்கு நேர்முகத்தேர்வுக்குச் சென்ற நாள் நன்றாக நினைவிலிருக்கிறது. மாதிரி கட்டுரைகளுடன் ஒரு பெரிய ஃபல் எடுத்துச் சென்றிருந்தேன். ஆசிரியர் ரா.கண்ணன் அவர்கள் “உங்க பிளாக் படிச்சிருக்கேன். இன்னைக்கே சேர்ந்துடுங்க” என்றதும் பாரதிராஜா படங்களைப் போல எல்லாமும் அப்படியே நின்றுவிட்டன.

 ஆனந்த விகடன்தான் எனக்கு இதழியலைக் கற்றுத் தந்தது. ’நான் எழுதுறேன்... அத படிங்க’ என்ற சமூக வலைதள போக்கிலிருந்து, வாசகர்கள் விரும்புவதைக் கொடுக்கும் பாணிக்கு என்னை மாற்றியது. ஒரு ஜனரஞ்சக இதழ் வாசகர்கள் மூலம்தான் தன் வடிவத்தை மெருகேற்றிக்கொள்கிறது என்பதை உணர்ந்தேன்.ஆனந்த விகடனில் என் முதல் தொடர் ‘மைல்ஸ் டு கோ’. இயக்குநர் வெற்றி மாறனின் வாழ்க்கையை எழுத்தாக்கும் பொறுப்பு. அதற்கு வந்த வரவேற்பு என் எழுத்து மாறியிருக்கிறது; சரியாகியிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தந்தது. நான் தொழில்நுட்பம் சார்ந்து அதிகம் எழுதிக் கொண்டிருந்ததால் தொடர் பக்கம் அதிகம் வர முடியவில்லை.

ஆனால், ஒருநாள் ஆனந்த விகடனில் எல்லோருக்குமான தொடர் ஒன்றை என்னால் எழுதிவிட முடியுமென ஆசிரியர் ரா.கண்ணன் மட்டும் என்னைவிட அதிகம் நம்பினார். அது நிஜமானது கேம் சேஞ்சர்ஸ் மூலம்தான்.கேம் சேஞ்சர்ஸ் தொடங்கியபோது எனக்குள் பல கேள்விகள்.

இது ஸ்டார்ட்அப்களை அறிமுகம் செய்யும் தொடரா, அல்லது தன்னம்பிக்கைத் தொடரா அல்லது தொழில்நுட்பச் சாத்தியங்களை எளிமையாகச் சொல்லும் தொடரா? ஆரம்பித்த சில வாரங்களிலே வாசகர்கள் தங்கள் கருத்துகளால் கேம் சேஞ்சரைத் தனதாக்கிக் கொண்டார்கள். இந்தத் தொடர் அதன் பிறகு எப்படி அமைய வேண்டுமென்பதை முடிவு செய்ததும் வாசகர்களே. அதனால்தான் 35 வாரங்கள் போனபின்னும் இதை முடிக்க முடியாமல் திணறினேன். சில காலம் கழித்து சீசன் 2 வந்தே ஆக வேண்டுமென அலுவலகத்துக்கே வந்து மிரட்டிச் சென்ற வாசகர் எல்லாம் உண்டு.

கேம் சேஞ்சர்ஸ் புத்தகமாக போடலாம் என முடிவானதும் எனக்கு வலைப்பூ காலம்தான் கண்முன்னால் வந்தது. மீண்டும் ஒருமுறை தொடர் முழுவதும் வாசித்தேன். மெனக்கெடல் இருந்ததை உறுதி செய்துகொண்டேன்.

என்னுடைய முதல் புத்தகம் அரசியல் பேச வேண்டும் அல்லது புனைவாக இருக்க வேண்டுமென்பது என் அப்போதைய ஆசை. புனைவில் தேர்ச்சி போதவில்லை. அரசியலுக்கு வாய்ப்பு வருமென காத்திருக்கிறேன்.இந்தத் தொடர் முழுமையடைய காரணமாகயிருந்த அத்தனை வாசகர்களுக்கும் நன்றி.
கார்க்கிபவா 

உடனிருந்து இதை நேர்த்தியாக்க உதவிய ஆனந்த விகடனின் ஆசிரியர் குழுவிற்கு என் அளவில்லா அன்பும் நன்றியும். ஒவ்வொரு வாரமும் கேம் சேஞ்சர்ஸ்க்காக எழுத்தில் நான் பட்ட மெனக்கெடலைவிட வடிவமைப்பில் பாண்டியன் பட்டது அதிகம்.

 அவருக்கும் நன்றி.சக மனிதனின் வாழ்க்கையை நல்லமுறையில் மாற்றியெழுதும் ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன். இந்தத் தொடரில் நான் எழுதியிருக்கும் பல நிறுவனங்கள் காலப்போக்கில் மாறலாம். வியாபாரத்துக்காக மக்களை ஏமாற்றலாம். அந்த ஆபத்தை உணர்கிறேன்.

ஆனால், ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையை மாற்றியெழுதியவர்கள்; எளிமையாக்கியவர்கள். அந்தப் புள்ளியில்தான் அவர்கள் கேம் சேஞ்சர் ஆகியிருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவதும், அந்தப் புள்ளி நம் வாழ்விலும் வரவேண்டுமென உற்சாகப்படுத்துவதும்தான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்தப் புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். iamkarki@gmail.comx

Wednesday, October 9, 2019

வளர்தொழில் அக்டோபர் 2019-ல் நடத்தும் பயிற்சி வகுப்புகள்

வளர்தொழில் அக்டோபர் 2019-ல் நடத்தும் பயிற்சி வகுப்புகள்


வளர்தொழில் அக்டோபர் 2019-ல் 

நடத்தும் பயிற்சி வகுப்புகள் 


For More details please visit Valar.in

தொழில் முறை அப்பளம் தயாரிப்பது எப்படி? -ஒருநாள் பயிற்சி

One Day Workshop19/10/2019 - Saturday
900.00 810.00
பயிற்சியில் இடம்பெறுபவை:
*உளுந்து தேர்ந்தெடுத்தல்,
*மாவு பிசைதல், மாவு துண்டு போடுதல்,
*தேய்ப்பு முறை,
*உலர வைத்தல்,
*தேவைப்படும் கருவிகள் – ஆட்கள், இடம் பற்றிய விளக்கங்கள்
நாள்: 19-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 06.
பயிற்சிக் கட்டணம்: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
For Registration: 99401 89433
Valar Thozhil October 2019

Wednesday, November 7, 2018

டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் எழுதிய 22 அருமையான நூல்கள்

டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் எழுதிய 22 அருமையான நூல்கள்

வா ... வியாபாரத்தில் வெற்றிபெறுவோம்


வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?


அமுதா பதிப்பகம்
amuthabk74@gmail.com

Wednesday, October 10, 2018

 தொழில் வளர்ச்சிக்கு உதவும் வாடிக்கையாளர்கள் மனநிறைவு வளர்தொழில் அக்டோபர் 2018

தொழில் வளர்ச்சிக்கு உதவும் வாடிக்கையாளர்கள் மனநிறைவு வளர்தொழில் அக்டோபர் 2018


தொழில் வளர்ச்சிக்கு உதவும் 
வாடிக்கையாளர்கள்
 மனநிறைவு 
வளர்தொழில் அக்டோபர் 2018அசையாச் சொத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன?

மதிப்பீட்டாளர் திரு. கதிர்வேல் சிறப்புப் பேட்டி
https://valar.in/
அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் உங்கள் பொருட்கள், புத்தகங்களை விற்பனை செய்வது எப்படி?  ரூ. 700-ல் முழுமையான பயிற்சி

அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் உங்கள் பொருட்கள், புத்தகங்களை விற்பனை செய்வது எப்படி? ரூ. 700-ல் முழுமையான பயிற்சி

அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம்
 உங்கள் பொருட்கள், 
புத்தகங்களை 
விற்பனை செய்வது எப்படி?  
சென்னையில் 
ரூ. 700-ல் முழுமையான பயிற்சி 
(மதிய உணவு , இரு வேளை தேநீர் உட்பட)


அக்டோபர் 14, 2018
ஞாயிறு காலை 9.30 மணி 
முன் பதிவுக்கு 99401 89433, 
044-2829 2390 Friday, September 21, 2018

கணக்குப் பதிவில் இருக்கிறது வணிக வளர்ச்சி

கணக்குப் பதிவில் இருக்கிறது வணிக வளர்ச்சி

கணக்குப் பதிவில் இருக்கிறது வளர்ச்சி


வளர்தொழில் இதழை வாங்க 

https://www.magzter.com/IN/ValarThozhil-Publications/ValarThozhil/Business/

https://valar.in/

Tuesday, June 19, 2018

வளர்தொழில் ஜூன் 2018 இதழ் - பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் அப்சரா

வளர்தொழில் ஜூன் 2018 இதழ் - பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் அப்சரா


வளர்தொழில் ஜூன் 2018 இதழ்

வணிக தமிழ் மாத இதழ்


பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் அப்சரா

Monday, March 26, 2018

வளர்தொழில் மார்ச் 2018 இதழ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் டிஆர்பி-க்கள்

வளர்தொழில் மார்ச் 2018 இதழ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் டிஆர்பி-க்கள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் டிஆர்பி-க்கள்வளர்தொழில் மார்ச் 2018 இதழ்

Wednesday, October 18, 2017

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் செ.கார்த்திகேயன்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் செ.கார்த்திகேயன்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

Category: பிஸினஸ் 
Author: செ.கார்த்திகேயன்
Book Code: 931
Availability:
Out of Stock
  Price: Rs. 150 ( India ) 
  Price: Rs. 380 ( Outside India ) 
இன்றைய தினம் வளம் /  பண  கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய தெளிவு இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர். 
இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. 
இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.
 இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும்.
 இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.

Tuesday, October 17, 2017

பிசினஸ் சீக்ரெட்ஸ் ‘கவின்கேர்’ சி.கே .ரங்கநாதன்

பிசினஸ் சீக்ரெட்ஸ் ‘கவின்கேர்’ சி.கே .ரங்கநாதன்

பிசினஸ் சீக்ரெட்ஸ்


‘பிசினஸா... எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்... அதைப் பற்றி எனக்குத் தெரியாது... எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை...’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. 
முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்... அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. என்ன தொழில் செய்ய வேண்டும்? அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும்? பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்? பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது? அதற்கான திட்டங்கள் என்ன? போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. 
பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்... வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை... வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு... போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சி.கே.ஆர். நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. 
சிறந்த ஆலோசனைகளையும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்... பிசினஸில் வெல்லுங்கள்!

Sunday, October 15, 2017

பிசினஸ் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும்பி - சினஸ் தந்திரங்கள்

பிசினஸ் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும்பி - சினஸ் தந்திரங்கள்

பிசினஸ் தந்திரங்கள்  - பேராசிரியர் ஸ்ரீராம்சுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் வேண்டும், பிசினஸ் பற்றிய புரிதலும் வேண்டும். 

சொந்த பிசினஸ் மட்டுமல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ-வாக, பொது மேலாளராக, மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதில் வெற்றியாளராகத் திகழ்ந்தால்தான் அடுத்தடுத்த உயர்நிலைக்குச் செல்லமுடியும். 

பிசினஸோ, மேலாண்மை செய்யும் பதவியோ அதில் பல ஸ்ட்ராடஜிக்களைக் கையாண்டால்தான் நீங்கள் உங்களை அதில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான அனைத்து தந்திரங்களையும் நடைமுறைச் சம்பவங்களின் மூலம் எடுத்துச் சொல்லி விளக்குகிறது இந்த நூல். உலக அளவில் பரந்து விரிந்த பல நிறுவனங்கள் இன்று காணாமல் போனதற்குக் காரணம், கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளாததுதான் எனச் சொல்லும் நூலாசிரியர், சிறிய முதலீடு, பரந்த சிந்தனையின் மூலம் உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்லியிருக்கிறார்.

பேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப்-களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மல்டி மில்லியனர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் அல்ல, தாங்கள் கண்டுபிடித்ததை, கால மாற்றத்துக்கு ஏற்ப வெற்றிகரமான பிசினஸ் ஆக்கிக்கொண்டார்கள். 

பிசினஸ் செய்வதற்கும் நிர்வாகப் பணியில் வெற்றி காண்பதற்கும் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும் இந்த நூல் உங்களின் பணியிலும் பிசினஸிலும் உங்களை வெற்றியாளராக்கும்!


Vikatan media Services Pvt Ltd.
No 757, Anna Salai,
Chennai
600002
Ph - 91-044-42634283/84
E Mail - books@vikatan.com