செயற்கை நுண்ணறிவால்
இயங்கும் உலகின் முதல் பிசினஸ்-டு-டேலண்ட் செயல்தளமான இம்பாக்டீர்ஸ் அறிமுகம்
Photo Caption: L– R (Impacteers Team )- Dr Bala Tanjore, Chief Technical Officer, Mr Krishna Javaji, Founder , Mr Sanjeev Korada, Chief Strategy Officer and Mr Manohar Javvaji, Co Founder
- இந்திய வேர்களைக் கொண்ட உலகளாவிய தொழில்முனைவோரால்
நிறுவப்பட்ட இம்பாக்டீர்ஸ் (Impacteers), முன்னாள் ஆப்பிள் நிறுவன புதுமையாளரின்
வழிகாட்டுதலுடன் ஏஐ பொருளாதாரத்தில் திறமையா ஒரு புள்ளியில் இணைகின்ற வழிமுறையை
மேம்பட மாற்றியமைப்பதை தனது நோக்கமாக கொண்டிருக்கிறது.
- கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்பும்
வகையில் வேலைதேடுவோர்கள் மற்றும் பிசினஸ் நிறுவனங்கள் அவர்களின் தேவையை
நிகழ்நேரத்தில் பூர்த்தி செய்ய இம்பாக்டீர்ஸ் உதவுகிறது.
- இம்பாக்டீர்ஸ், அதன் பொறியியல் துறை
பணியாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவது உட்பட 2026 மார்ச்
மாதத்திற்குள் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 200+ லிருந்து 450+ ஆக உயர்த்தவிருக்கிறது.
- முதல் கட்டமாக, செயற்கை நுண்ணறிவு
பொருளாதாரத்தில் இந்தியாவின் திபணியாளர் சூழலமைப்புக்கு சேவை வழங்குவது மீது
இந்நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தும்
சென்னை, ஆகஸ்ட் 8, 2025: வேலைவாய்ப்பின்
எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் ஒரு மிக முக்கிய தருணமாக உலகின் முதல்
செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு இயங்கும்
பிசினஸ்-டு-டேலண்ட் (B2T) (Business-to-Talent) தளமான 'இம்பாக்டீர்ஸ் (Impacteers), சென்னையிலிருந்து
அதிகாரப்பூர்வமாக தனது செயல்பாட்டை தொடங்கியிருக்கிறது. மனித ஆற்றல் மற்றும் அறிவார்ந்த
பணியாளர்களை மேம்படுத்துகிற அடுத்த சகாப்தத்தை நோக்கிய இந்தியாவின் துணிச்சலான முன்னேற்றத்தை
இந்த தொடக்கம் குறிக்கிறது.
உலகளாவிய பரந்த
கண்ணோட்டம் கொண்ட தொலைநோக்கு சிந்தனையாளரான மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன்
தொழில்முனைவோரான திரு. கிருஷ்ணா ஜவாஜி, இந்த 'இம்பாக்டீர்ஸ்' தளத்தின் நிறுவனராவார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் புத்தாக்க செயற்பாட்டாளராக பணியாற்றிய டாக்டர் பாலா
தஞ்சூர் மற்றும் உலகளாவிய உத்தியை வகுப்பதில் திறன்மிக்க திரு. சஞ்சீவ் கொரடா
ஆகியோர் இத்தளத்தின் வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். இம்பாக்டீர்ஸ் வேலைவாய்ப்பை தேடும்
ஒரு தளம் மட்டுமல்ல; மாறாக, மிக அவசரமான சவால்களுக்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட,
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு முழுமையான அமைப்பாகும்.
இந்தியாவில் 85%-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்கள் திறமைக்குக் குறைவான அல்லது
தொடர்பில்லாத வேலைகளில் இருக்கிறார்கள். அவர்களது திறன்கள் அல்லது நோக்கத்திற்கு இணக்கமானதாக
அவர்களது பணிகள் இருப்பதில்லை. உலகளவில், 30 கோடிக்கும் அதிகமான தொழில்முறை பணியாளர்கள்
தங்கள் பணியில் திருப்தியின்றியே பணியாற்றி வருகின்றனர். மறுபுறம், செயற்கை நுண்ணறிவால்
(AI) மின்னல் வேகத்தில் மாறிவரும் வேலைவாய்ப்பு சந்தையில் மேலும் 120 கோடி இளம் நபர்கள்
நுழையத் தயாராகி வருகின்றனர்.
அடுத்த 24 மாதங்களில் 1 கோடி தனிநபர்களுக்கு தங்களின் பணி வாழ்வில் தெளிவு, நோக்கம் மற்றும்
வளர்ச்சியைக் கண்டறிய உதவுவது என்ற குறிக்கோளுடன் களமிறங்கி உள்ள
'இம்பாக்டீர்ஸ்'
10 லட்சம் தொழில்-வர்த்தக நிறுவனங்களுக்கு எதிர்காலத்திற்கு ஏற்ற திறமையான பணியாளர்களை
வழங்கி, அவற்றை வலுவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
பாரம்பரியமான
வேலைவாய்ப்புத் தளங்கள் போல் இல்லாமல் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் சுயவிவரக்
குறிப்புகளை பணிகளுடன் வெறுமனே பொருத்தி பார்க்காமல், இம்பாக்டீர்ஸ் ஒரு படி மேலே சென்று,
அந்நபர்கள் அவர்களது உண்மையான திறனையும், சரியான பணியையும் கண்டறிய உதவுகிறது. 2 ஆண்டுகளுக்கும்
மேலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணி, 125க்கும் மேற்பட்ட பொறியாளர்களின் உழைப்பு,
மற்றும் அதிநவீன செயற்கை தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இயங்கும்
இம்பாக்டீர்ஸ் வெறும் வேலைவாய்ப்புக்காக நிறுவனங்களைத் பணியாளர்களுடன் இணைக்கும் பணியை
மட்டும் செய்வதில்லை; மாறாக, மாணவர்கள், சுய தொழில்முனைவோர், வல்லுநர்கள், மற்றும்
வழிகாட்டிகள் என குறிக்கோளுடன் இயங்கும் பலரையும் 'கூட்டு உருவாக்க செயல்பாட்டிற்காக
இணைக்கிறது. இதுவே, இம்பாக்டீர்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கும் B2T (பிசினஸ்-டு-டேலண்ட்)
என்ற புதிய வகையினம் தொடங்கப்பட்டிருப்பதற்கான காரணமாகும் உதயமாகும். கல்விக்கும் பணியமர்த்தப்படுதலுக்கான
தகுதிக்கும் இடையே உள்ள 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய இடைவெளியை இம்பாக்டீர்ஸ்-ஆல்
அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயல்தளம் நிரப்பும்.
செயற்கை நுண்ணறிவில்
இயங்கும் முதன்மையான இரு திட்டங்கள்; ஒரு புரட்சிகர தாக்கம்.
1.
சூப்பர் (Xooper) - ஆள்சேர்ப்புக்கான அதிநவீன AI நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதவளத் துறை
(HR) கைமுறையாக மேற்கொள்ளும் பணிகளில் 80%-ஐ தானியக்க செயல்பாடாக ஆக்குகிறது. வெறும்
60 வினாடிகளுக்குள் 10,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை (resumes) பரிசீலிக்கிறது; AI மூலம் மென்திறன்களை
மதிப்பீடு செய்து, கட்டமைக்கப்பட்ட நேர்காணல்களை நடத்துகிறது. ஆள்சேர்ப்புக்கான கால
அளவை 70% வரை குறைக்கிறது. பணிக்கு பொருத்தமானவர்களா என்பதை ஆய்வு செய்து 92% துல்லியத்துடன்
தகுதியான நபர்களின் குறும்பட்டியலை தயாரித்து வழங்குகிறது.
இனிமேல் ஸ்பிரெட்ஷீட்களுக்கோ, அனுமானங்களுக்கோ இடமில்லை.
சரியான திறமையாளர்களை மிக வேகமாக தேர்வு செய்வது முற்றிலும் சாத்தியம்.
2.
குளூப்ளூ (Glueblu) – நிகழ்நேரக் கருத்துக்கணிப்புகள் மூலம், பணியாளர்கள் நிறுவனத்தில்
நீடிப்பதை 45% வரை அதிகரிக்கிற நிறுவனக் கலாச்சாரம் மற்றும் பணியாளர் ஈடுபாட்டிற்கான
ஆற்றல் மையம். அறிவியல் பூர்வமான மதிப்பீடுகளைக் கொண்டு, ஒவ்வொரு பணியாளருக்குமான தனிப்பட்ட
வளர்ச்சி பயணங்களை இது வழங்குகிறது. AI மற்றும் மனித நுண்ணறிவை இணைத்து, அதிக நம்பிக்கையும்,
உயர் செயல்திறனும் கொண்ட கலாச்சாரத்தை உருவாக்குகிறது. 90 நாட்களுக்குள், பணியாளர்கள்
குழுவின் உற்பத்தி/செயல்திறனை 30%-க்கும் மேல் அதிகரிக்கிறது. இது வெறும்
மனிதவளத் தொழில்நுட்பம் மட்டும் அல்ல; இது பரந்த அளவில் நிகழும் ஒரு மாபெரும் மானுட
நிலைமாற்றம்.
“திறமையான
பணியாளர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆனால், திறமையை சரியாக பயன்படுத்துவதற்கான
வாய்ப்புதான் இல்லை" என்கிறார் இம்பாக்டீர்ஸ் Founder திரு. கிருஷ்ணா ஜவாஜி.
“இந்தியாவில் 140 கோடி மக்களும், இந்த உலகில் 800 கோடி மக்களும் இருக்கும்போது, திறமை
ஒரு பிரச்சனையல்ல; வாய்ப்புகளை அணுகிப்பெறுவது, திறமைக்குப் பொருத்தமான வேலையில் இருப்பது,
மற்றும் காலத்திற்கேற்ப முன்னேற்றத்தை எட்டுவது ஆகியவற்றில்தான் உண்மையில் பிரச்சனை
இருக்கிறது. இன்று, இந்தியாவில் உள்ள மூன்று பட்டதாரிகளில் ஒருவர், தாங்கள் படித்த
துறையில் பணியமர்த்தப்படுவதற்கு தகுதியற்றவராக இருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு
(AI) முன்னேறி வருவதால், பத்தில் நான்கு பணியாளர்கள் தாங்கள் பின்தங்கிவிடுவோமோ என்று
பயப்படுகின்றனர். இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவே இம்பாக்டீர்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் மக்களை வேலைவாய்ப்புகளுடன் மட்டும் வெறுமனே இணைக்கும் பணியைச் செய்வதில்லை;
மாறாக, அவர்கள் தங்கள் நோக்கத்தைக் கண்டறியவும், திறன்களை வளர்த்துக்கொள்ளவும், எதிர்காலத்தோடு
சேர்ந்து வளரவும் நாங்கள் உதவுகிறோம். பரந்த அளவில் மனித ஆற்றலை வெளிக்கொணர்வதற்கான
எங்களின் அர்ப்பணிப்பின் வெளிப்பாடே இந்த செயல்தளம்” என்று அவர் விளக்கமளித்தார்.
நோக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் ஒரு
தொலைநோக்குப் பார்வை
இம்பாக்டீர்ஸ்-ன் நிறுவனத்தின் Chief
Technology Officer டாக்டர் பாலா தஞ்சூர் கூறியதாவது: “அர்த்தமுள்ள
ஒரு வேலையை நம்பி வாழும் 85% மாணவர்கள், சிறு தொழில்முனைவோர், மற்றும் பணிவாழ்க்கையின்
இடையில் உள்ள வல்லுநர்களுக்காக நாங்கள் இதை உருவாக்குகிறோம். செயற்கை நுண்ணறிவு மூலம்,
திறமையான பணியாளர்களை கண்டறியும் நேரத்தை வருடங்களிலிருந்து நிமிடங்களாக எங்களால் குறைக்க
இயலும்; மேலும் குழப்பத்தைத் தெளிவாக எங்களால் மாற்ற முடியும்.”
இந்நிறுவனத்தின் Co- Founder திரு. மனோகர் ஜவாஜி
பேசுகையில், “நாங்கள் செயற்கை நுண்ணறிவை மனித உள்நோக்கு திறனுடன் இணைக்கிறோம்.
பணிவாழ்க்கை (Career) என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். பணியிடங்கள் மனிதநேயம்
உள்ளதாக இருப்பது அவசியம். இம்பாக்டீர்ஸ், இந்த இரண்டு நோக்கங்களையும் சாத்தியமாக்குகிறது.
எங்களின் தாக்க விளைவை விரிவுபடுத்தும் அதே வேளையில், எங்கள் குழுவையும் நாங்கள் உயர்த்தி
வருகிறோம். மார்ச் 2026-க்குள் எங்கள் பணியாளர் எண்ணிக்கையை தற்போதைய 200+ என்பதிலிருந்து
450+ ஆக உயர்த்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறினார்.
இந்நிறுவனத்தின் Chief Strategy Officer திரு. சஞ்சீவ்
கொரடா கூறியதாவது: “பிசினஸ் செயல்பாடுகளில், திறமையான
பணியாளர்கள் என்பது முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு மாபெரும் ஆற்றலாகும். தரவுகள்,
சரியான வழிகாட்டுதல், மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் கொண்டு அந்த இயக்கப் பொறியை நாங்கள்
இயக்குகிறோம்.”
'அடுத்து என்ன
செய்வது?' என்று யோசிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும், 'என் வளர்ச்சிக்கான வாய்ப்பு இவ்வளவுதான?'
என்று கேட்கும் ஒவ்வொரு தொழில்முறை பணியாளருக்கும், நிறுவனக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்குப்
பதிலாக ஸ்பிரெட்ஷீட் பணிகளில் மூழ்கியிருக்கும் ஒவ்வொரு மனிதவளத்துறை தலைவருக்கும்
ஒரு தீர்வாக, அவர்களின் கேள்விகளுக்கு பதிலாக இம்பாக்டீர்ஸ் இருக்கிறது. இந்தத் தளம்
இப்போது www.impacteers.com என்ற இணையதளத்தில் செயல்பாட்டில் உள்ளது.
தனிநபர்கள், மனிதவளத்துறை தலைவர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் சமூகத்தில்
தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவோர் அனைவரும் இதில் இணையலாம்.