Showing posts with label LOAN - WOMEN. Show all posts
Showing posts with label LOAN - WOMEN. Show all posts

Saturday, June 13, 2020

ஶ்ரீராம் சிட்டி 2020-21 ஆம் ஆண்டில்  எழும் சவால்களை சமாளிக்க அதிரடி திட்டம்

ஶ்ரீராம் சிட்டி 2020-21 ஆம் ஆண்டில் எழும் சவால்களை சமாளிக்க அதிரடி திட்டம்சிறு கடன் வழங்கும் முன்னணி   நிதி நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் சிட்டி -  Shriram City Union Finance Limited -  Shriram City2019-2020 ம் நிதியாண்டின்  நான்காம் காலாண்டு மற்றும் 2019-2020 ம் நிதி ஆண்டிடிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது.


2019-20 ஆம் ஆண்டில்  நிதி ஆண்டில் தனித்த வழங்கப்பட்ட கடன்கள் (Standalone disbursements5.6%, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு  (Assets under Management) 1.7% குறைந்துள்ளன

அதேநேரத்தில்,  எம்.எஸ்.எம். கடன்கன் வழங்குது தொடர்ச்சியான அடிப்படையில் 24.9% வளர்ச்சிக் கண்டிருக்கிறது. தனித்த நிகர லாபம் (Standalone Net Profit) தொடர்  ஊரடங்கு காரணமாக  நான்காம் காலாண்டில் 39.1% குறைந்தது


ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு ஒய்.எஸ்சக்ரவர்த்தி,  (Mr. Y.S. Chakravarti, MD & CEO, Shriram City Union Finance) கூறும் போது “இது மற்றொரு ஏற்ற இறக்க (rollercoaster) ஆண்டாக அமைந்தது. கோவிட் -19 பரவல், நிதியாண்டின் இறுதியில் வணிக மனநிலைகளை (business sentiments) பாதித்திருக்கிறதுஅதேநேரத்தில், 2020-21 ஆம் ஆண்டில்  எழும் சவால்களை சமாளிக்க ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் போதுமான அளவில்  தயாராகி இருக்கிறதுஎங்கள் துணை நிறுவனத்துடன் சேர்ந்து பணப்புழக்கம் மற்றும் மீண்டு வருவதில் (liquidity and recovery) நாங்கள் வலுவாக இருக்கிறோம்இவை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் வெற்றியை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன.” என்றார்.  

ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட்  பற்றி.. (About Shriram City Union Finance Ltd. BSE: SHRMCITY, NSE: SHRIRAMCIT): ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (Shriram City Union Finance Ltd) என்பது 34 ஆண்டுகளாக இயங்கி வரும், சிறு கடன் பிரிவில் நிதிச் சேவை அளிக்கும் நிறுவனமாகும்நாட்டில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் (MSMEs) மற்றும்  இரு சக்கர வாகனக் கடன் வங்கும் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகும்இது பல்வேறு நிதித் திட்டங்களைவர்த்தக வாகனக் கடன்கள்பயணிகள் வாகனக் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வருகிறது.இவை தவிர, தங்க நகை அடமானக் கடன் மற்றும் தனிநபர் நுகர்வோர் கடன்களையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறதுடெபாசிட் ஏற்றுக்கொள்ளும் என்.பி.எஃப்.சி,  ஸ்ரீராம் சிட்டி ரூ. 1 லட்சம் கோடி  மதிப்பு கொண்ட சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் குழுமத்தை (Shriram Groupசேர்ந்ததாகும்.

 


Tuesday, February 11, 2020

கிரெடிட் ஸ்கோர் : கட்டுக்கதைகளும் உண்மைகளும்

கிரெடிட் ஸ்கோர் : கட்டுக்கதைகளும் உண்மைகளும்


நல்ல கடன் மதிப்பெண்ணைப் பராமரிப்பதன் மூலம்  குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்

முரண்பட்ட தகவல்கள் மற்றும் நல்ல நோக்கத்துடன் கூடிய ஆலோசனைகள் கூட தவறாக மாறக்கூடும். எனவே  கடன் மதிப்பெண்கள் (Credit Score - கிரெடிட் ஸ்கோர்) தொடர்பான பல இட்டுக்கதைகள் (Myths) இருப்பதில் ஆச்சரியம் எதும் இல்லை. இந்த இட்டுக்கதைளில் இரண்டு பகுதிகள் உள்ளன. அவை, கடன் மதிப்பெண் (Credit score) மற்றும் கடன் அறிக்கை (Credit report) ஆகும்.

கடன் மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் அறிக்கையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலான மூன்று இலக்க எண் ஆகும். கடன் மதிப்பெண் என்பது உங்கள் கடன் தகுதியை உறுதிப்படுத்தும் ஓர் எண்.  இந்த மூன்று இலக்க எண்,  வங்கிகளையும் பிற வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனங்களையும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு  உங்களுக்கு எவ்வளவு சாத்தியம் என்பதை மதிப்பீடு செய்ய உதவுகிறது

கடன் மதிப்பெண்கள் பொதுவாக 300 முதல் 850 வரை இருக்கும். இந்தக் கடன் மதிப்பெண் உங்கள் கடன் அறிக்கையின் அடிப்படையில் அமைகிறது. இது வங்கிகள் மற்றும் பிற வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனங்களுக்கு இடர்ப்பாட்டை (risk) முன்னரே அறிவிக்கிறது.

ஆகவே, நாம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் பொதுவான கட்டுக்கதைகளைப் பார்ப்போம்:

கட்டுக்கதை 1 - எந்தவொரு நுண்கடன் நிறுவனங்களிலிருந்தும் (எம்.எஃப்.ஐ) எந்தவொரு தொகையும் / எத்தனை தடவை வேண்டுமானாலும் கடன் வாங்கலாம்.

உண்மை: ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி,
1.    ஒரு எம்.எஃப். கடன் வாங்குபவருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகை ரூ.1.25 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது
2.    ஒரேநேரத்தில்  அதிகபட்சம்  இரண்டு எம்.எஃப். கடன்களை  ஒருவர் பெறலாம்
எனவே, மேற்கூறிய ஏதேனும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், கடன் கிடைக்காது.

கட்டுக்கதை 2 - எம்.எஃப்.ஐ-ல் கடன் வாங்குபவர்களுக்கும் கடன் மதிப்பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை:

உண்மை: எம்.எஃப். துறையின்  தொடர்ச்சியான மாற்றம் மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுடன், கடன் தகவல் நிறுவனங்கள் (Credit bureaus) எம்.எஃப்.ஐ-ல் கடன் வாங்கியவர்களுக்கு கடன் மதிப்பெண்களை உருவாக்குகின்றன. அவை கடன் கணக்குகளின் எண்ணிக்கை, பாக்கியிருக்கும் கடன் தொகை, கடன் வாங்குபவர் அதனை திரும்ப செலுத்த வரலாறு போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
கடனுக்கு வழங்கும்போது, விண்ணப்பம் மற்றும் கடன் ஒப்புதலை மதிப்பீடு செய்வதற்கு எம்.எஃப்..க்களுக்கான அளவீடுகளின்  ஒன்றாக கடன் மதிப்பெண் இருக்கிறது.

கட்டுக்கதை 3 எம்.எஃப்.ஐகள் அபராதம் வசூலிப்பதில்லை. எனவே, நான் ஒழுங்கற்ற முறையில் பணம் செலுத்தலாம் அல்லது எனது  மாதத் தவணையை தாமதப்படுத்தலாம்

உண்மை:   அனைத்து கடன் தகவல் நிறுவனங்களும் (ஈக்விஃபாக்ஸ், சிபில், ஹை மார்க் மற்றும் எக்ஸ்பீரியன்) உங்கள் தாமதமான தவணைகள் போன்ற தகவல்களை பதிவு செய்து பராமரிக்கின்றன. இது கடன் வரலாறு மற்றும் கடன் மதிப்பெண்ணை பாதிக்கும். இதன் அடிப்படையில், பல நிதி நிறுவனங்கள் கடன்  வழங்குவதை நிராகரிக்கக்கூடும்

கட்டுக்கதை 4 - கடனை திரும்பச் செலுத்தும் முறை அல்லது தவணை தவறுதல் போன்றவை கடன் வரலாற்றை பாதிக்க நேரம் எடுக்கும்

உண்மை: கடன் தகவல் நிறுவனங்களுக்கு  கடன் அறிக்கையை அனுப்பும் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, வாடிக்கையாளர் கடன் விவரங்கள் தினமும்  தெரிவிக்கப்படுகின்றன. எனவே, ஒரு தவணை தவறுதல் / கடனை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் கூட கடன் மதிப்பெண் மற்றும் கடன் வரலாறு பாதிக்கப்படும். இருந்தபோதிலும், அத்தகைய தாமதத்திற்கு கடன் வாங்கியவரிடம் நியாயமான காரணங்கள் இருந்தால், அவர் விரைவாக கடனை கட்டுவது மூலம் சரிசெய்யப்படலாம்


கட்டுக்கதை 5 - எனது கடன் மதிப்பெண்ணை சரி செய்ய கமிஷன் முகவர்கள் (Commission agents)  எனக்கு உதவக்கூடும்.

உண்மை: ஒரு நல்ல கடன் மதிப்பெண் மற்றும் கடன் வரலாற்றின் பொறுப்பு உங்களிடம் மட்டுமே உள்ளது. நீங்கள் கடனை திரும்பச் செலுத்துவதில் தவறிழைத்திருந்தால் ஒரு நல்ல கடன் மதிப்பை பெற எந்த கமிஷன் முகவரும் உங்களுக்கு உதவ முடியாது. இருந்தபோதும், உங்கள் கடன்களை அடைப்பதற்கு நீங்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டால் மோசமான கடன் மதிப்பெண் எப்போதும் இருக்காது

கட்டுக்கதை 6 எனது வருமானம், வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகள் எனது கடன் மதிப்பெண்ணை பாதிக்கின்றன

உண்மை: உங்கள் வருமானம், வங்கி கணக்குகள் அல்லது முதலீடுகள் பற்றிய எந்த தகவலும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே அவை உங்கள் கடன் அறிக்கையில் காண்பிக்கப்படாது. மேலும், அவை உங்கள் கடன் மதிப்பெண்ணை பாதிக்காது.

 (இருப்பினும், செலுத்தப்படாத வங்கிக் கட்டணம் போன்றவைகள் காண்பிக்கப்படும்.)

 Credit Score Myths Debunked by Satin(South