Showing posts with label Helpline. Show all posts
Showing posts with label Helpline. Show all posts

Friday, April 10, 2020

சாண்டில்யனின் புகழ்பெற்ற  41 நாவல்கள் இலவச டவுண்லோடு செய்ய...!

சாண்டில்யனின் புகழ்பெற்ற 41 நாவல்கள் இலவச டவுண்லோடு செய்ய...!

சாண்டில்யனின் புகழ்பெற்ற  41 நாவல்கள்

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் - ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி.

1929இல் ரங்கநாயகியை மணந்தார்.


கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஒரு சமயம் கல்லூரிப் பெண்கள் சிலர் சாண்டில்யனைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது ஒரு மாணவி, ‘‘சில வேளைகளில் உங்கள் நாவல்களில் அதிகமாகக்கூட (செக்ஸியாக) எழுதிவிடுகிறீர்களே’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘‘எந்த இடத்தில் அதிகம் என்று சொல்ல முடியுமா” என்று வினவியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி, ‘‘அதெப்படி முடியும்? பல இடங்களில் இருக்கின்றன’’ எனச் சொல்ல... ‘‘எந்த இடத்திலும் இலக்கிய வரம்பை மீறி, பண்பாட்டு வரம்பை மீறி, எதுவும் இருக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு. இலக்கியத்துக்கும் அப்படித்தான்’’ என்று பதிலளித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிருபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’, ஹிந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஹிந்துஸ்தான் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார்.

திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன் மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர் புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.

இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள்
 கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர். அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.

இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம். முக்கியமாக ‘குமுதத்தில் இவர் எழுதிய கன்னி மாடம், யவன ராணி, கடல் புறா போன்ற தொடர்கள் வெகு ஜன வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன.  சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார். இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கிய நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின.

நாட்டுடைமை சர்ச்சை

2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் முன்வந்தது. வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, சுந்தர ராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் கண்டனம் தெரிவித்தனர். சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.

கடல் புறா பாகம்-1 93.3 MBகடல் புறா பாகம்-2 115.66 MBகடல் புறா பாகம்-3 168.61 MBயவன ராணி பாகம்-1 60.73 MB


யவன ராணி பாகம்-2 135.79 MB


ஜலதீபம் பாகம்-1 69.75MBஜலதீபம் பாகம்-2 56.68 MBஜலதீபம் பாகம்-3 83.84MBராஜ பேரிகை பாகம்-1 12.53 MB


ராஜ பேரிகை பாகம்-2 12.6 MB


ராஜ பேரிகை பாகம்-3 17.9 MB


ராஜ முத்திரை பாகம்-1 53 MB


ராஜ முத்திரை பாகம்-2 44 MB


ராஜ முத்திரை பாகம்-3 61 MB


விஜய மகாதேவி-1 71MB


விஜய மகாதேவி-2 70 MB


விஜய மகாதேவி-3 117 MB


அவனி சுந்தரி 20.51 MBசந்திரமதி 4.11 MBசேரன் செல்வி 45.64 MBசித்தரஞ்சனி 83.31 MBஇளைய ராணி 19.67 MBஇந்திர குமாரி 67.32 MBஜீவபூமி 13.96MBகடல் வேந்தன்  26.31 MBகடல் ராணி 46.55 MBகன்னி மாடம்  101.7 MBகவர்ந்த கண்கள் 112.88 MBமாதவியின் மனம்  6.07 MBமது மலர் 77.64 MBமலை அரசி 13.31 MBமஞ்சள் ஆறு 112.36 MBமலை வாசல் 92.23 MBமங்கள தேவி 10.67 MB


மன்னன் மகள் 167.36 MBமண்மலர்


மோகன சிலை 79.39 MB


மோகினி வனம் 19.18 MB


மூங்கில் கோட்டை 188.65 MB


நாக தீபம் 55.62 MB


நாக தேவி 170.12 MB


நங்கூரம் 20.33 MB


நீல ரதி 10.44 MB


நீல வள்ளி 9.11 MB


நீள் விழி  9.23 MB


பல்லவ பீடம் 59.49 MB


பல்லவ திலகம் 33.86 MB


பாண்டியன் பவனி 24.17 MB


ராஜ யோகம் 12.44 MB


ராணா ஹமீர் 37.74 MB


துறவி 16.27 MB


உதய பானு 66.91 MB


இந்துமத நூல்களையும், ஆன்மீகப் பெரியோர்களின் சொற்பொழிவு காணொளிகளையும் பரிமாறிக் கொள்ளவும் HINDUTVA FOLLOWERS முகநூல் குழுவில் கீழ்க்கண்ட தொடுசுட்டியின் மூலம் https://www.facebook.com/groups/368176627454194/ இணைத்திடுங்கள். எங்களது HINDUTVA FOLLOWERS டெலிகிராம் குழுவில் சேர https://t.me/hindutvafollowers மூலம் இணைத்திடுங்கள்.

TLS TAMIL BOOKS BANK Telegram Group:


TLS TAMIL MEDICAL BOOKS BANK Telegram Group: https://t.me/joinchat/HZyPlBOtF5xXE0sOUhELrA

TLS SANSKRIT BOOKS BANK TELEGRAM CHANNEL Invite Link: t.me/TLS_SanskritBooks

TLS AYURVEDA & HOLISTIC MEDICINE BOOKS BANK Telegram Group: https://t.me/joinchat/HZyPlBFsiwzH3CHA5BdtyAWednesday, April 1, 2020

அட சிரிச்சுட்டு போங்கப்பா....!

அட சிரிச்சுட்டு போங்கப்பா....!


 அட சிரிச்சுட்டு போங்கப்பா....!

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

****

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!

அய்யோ...!! அப்பறம்?

சாத்திட்டா

**** 
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....

****
DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

போயும் போயும்v இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!

**** 
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

****

வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

**** 

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"


**** 
ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி
ஏழையாயிடுவாரு…!

 ****
தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

**** ****


Sunday, March 29, 2020

கோவிட்-19 பாசிடிவ் என்று கண்டறியப்பட்டால்  என்ன செய்ய வேண்டும்? - அரசு மருத்துவர் விரிவான விளக்கம்

கோவிட்-19 பாசிடிவ் என்று கண்டறியப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - அரசு மருத்துவர் விரிவான விளக்கம்

Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்,  சிவகங்கை


சகோதர சகோதரிகளே 

கொரோனா - பாசிடிவ்  என்று அறிந்த மாத்திரம் 
ஒரு ஒவ்வாமை 
ஒரு அறுவறுப்புணர்ச்சி 
ஒரு சங்கடம் 
ஒரு பயம் 

எல்லாம் மனதில் வருகிறதல்லவா?? 

இதே உணர்வு தான் 
எச்.ஐ.வி பாசிடிவ் என்று தெரிந்த பின்பும் ஒருகாலத்தில் வந்தது 

இதனால் நாம் அடைந்ததை விட
இழந்ததே அதிகம் 

நேற்று ஒரு இளைஞன் கொரோனா அறிகுறியுடன் இருந்ததால் தனக்கு ஏதோ பெரிய நோய் வந்து விட்டதென்று எண்ணி 
"தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

புதுடில்லியில் கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் முதுகில் குத்தும் செயலாக வீட்டை விட்டு வெளியேறக் கூறினர் வீட்டுக்குச்சொந்தக்காரர்கள் 

இவற்றைத்தான் SOCIAL STIGMA என்போம்

உண்மையில் இந்த கோவிட்-19 பற்றி நாம் புரிந்து கொண்டால் மனதளவில் கூட யாரையும் நாம் அறுவறுக்கத் துணிய மாட்டோம் 

கோவிட்-19 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் 

✅புதிய கொரோனா வைரஸால் பரவும் கோவிட்-19 நோயானது நமக்கு சீசன் நேரங்களில் வரும் ப்ளூ வைரஸ் காய்ச்சலை விட இரண்டு மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டது 

Transmission speed is double than seasonal flu infection 

சீசனல் வைரஸ் காய்ச்சலால் ஆயிரத்தில் ஒருவர் மரணமடைகிறார் என்றால் 
கோவிட்-19 காய்ச்சலால் ஆயிரத்தில் ஏழு முதல் ஐம்பது பேர் வரை மரணமடைய வாய்ப்புள்ளது. 

Mortality rate is seven to fifty times more than seasonal flu infection 

மேற்சொன்ன இரண்டு காரணங்களுக்காகத்தான் நாம் இத்தனை பெரிய தனிமைப்படுத்துதல் முடிவை எடுத்து வீடுகளுக்குள் அடங்கியிருக்கிறோம் 

சரி... 

கோவிட்-19 நோயை ஏன் அறுவறுக்கத்தக்கதாக பார்க்கக் கூடாது??? 

காரணம் 

இந்த நோய் வந்த 80% பேருக்கு ரத்தம் மூலம் முறையான ஆண்ட்டிபாடி 
(ரஸ்க்கு எதிராக நமது எதிர்ப்பு சக்தி மண்டலம் உருவாக்கிய காவல்படை) பரிசோதனை செய்து பார்க்காத வரை 
நமக்கு இந்த நோய் வந்து சென்றது என்பதை நம்மால் அறிய முடியாது. 

அந்த தேவையும் இல்லை. 

ஏனெனில் நோய் பாதித்த 80% பேருக்கு சாதாரண சீசனல் வைரஸ் காய்ச்சல் போல வந்து சென்றுவிடும்.  மரணத்தை உண்டாக்காது.  ஏன்..? மருத்துவமனைக்கு கூட செல்லும் அளவு பிரச்சனையாக கூட உருவெடுக்காது ( இதை ILI என்போம் Influenza Like Illness) 

மீதி உள்ள 20%பேரில் 

15% பேருக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் SARI எனும் தீவிர சுவாசப்பாதை தொற்றாக மாறும் (Severe Acute Respiratory Infection) இவர்களுக்கு ஆக்சிஜன்/ நெபுலைசேசன் ( புகை மூலம் நுரையீரலுக்கு தேவையான மருந்துகளை கொடுக்கும் முறை) தேவைப்படலாம். 

இன்னும் 5% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்
அவர்களுள் 1% பேருக்கு அதி தீவிர சிகிச்சையும் வெண்டிலேட்டர்  போன்ற செயற்கை சுவாசக்கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

இது நம் உலகத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கும் தொற்று நோய் 

இந்த நோய் 
ஆறு அடிக்கு குறைவான தூரத்தில் இருந்து  இருமுவது/ தும்முவது  

வைரஸ்கள் உயிர்ப்புடன் இருக்கும் பொருள்களை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதாலும் தான் பரவுகிறது 

எனவே 

நமது பகுதியில் 
நமது தெருவில் 
நமது அண்டை வீட்டில் 
நமது குடும்பத்தில் யாருக்கேனும் 

கோவிட்-19 பாசிடிவ் என்று கண்டறியப்பட்டால் 

அத்தோடு அவர்கள் வாழ்க்கை முடிந்து போய் விடுவதில்லை. 

கோவிட்-19 பாசிடிவ் என்றவுடனே காலன் கதவைத் தட்டிவிட்டான் என்றும் அர்த்தமில்லை.  

கோவிட்-19 பாசிடிவ் என்று அறிந்தால் 
இதுவரை அம்மை நோய்க்கு நாம் என்ன செய்வோமோ அதையே தான் இதற்கும் செய்கிறோம். 

தனிமைப்படுத்துதல் (ISOLATION) 

அவர்களுடன் தொடர்புடைய குடும்பத்தாரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்துகிறோம் ( QUARANTINE) 

இதைத்தான் நாம் CHICKEN POX (அம்மை) 
நோய்க்கும் செய்வோம் 

அம்மை நோய்க்கு ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தனிமைப்படுத்துவோம்
இந்த கொரோனா வைரஸ்க்கு இருபத்து எட்டு நாட்கள் அவ்வளவே. 

அந்த 28 நாட்கள் முடிந்த பிறகு அவரும் எப்படி அம்மை நோய் தாக்கியவர் குணமாகிவிடுவாரோ அதே போல் குணமாகிவிடுகிறார்.  

அந்த 28 நாட்கள் இந்த வீட்டு மக்களுக்கு தேவையான உணவு / அத்தியாவசியப்பொருட்கள் சார்ந்த உதவிகளை ஆறடி தூர  இடைவெளி விட்டு நாம் தாராளமாக செய்யலாம்செய்ய வேண்டும்..

ஆம்
நாம் தான் செய்ய வேண்டும். 

நம்மையன்றி யார் செய்வார்??? 

உடலால் தூரமானாலும் 
மனதால் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால் 

நம்மால் இந்த வைரஸை எளிதாக முறியடிக்க முடியும். 

நன்றி