குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட், அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்த்துப்
போராட, தமிழ்நாட்டில் உங்கள் டிஜிட்டல் பாதுக்காப்புக்கு மேலும் மேம்படுத்தபட்ட இன்டர்நெட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் தயார்
Quick Heal
சென்னை, 10.07.2025:
சைபர் பாதுகாப்புத் தீர்வுகளை வழங்கும் ஒரு உலகளாவிய நிறுவனமான குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட், இன்று தமிழ்நாட்டில் குயிக் ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த வியூகமான நடவடிக்கை, இம்மாநிலத்தில் சைபர் சம்பவங்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவு அதிகரிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில்நுட்ப மையமாக சென்னையின் அந்தஸ்தையும், இந்தியாவின் தென் தொழில்நுட்ப முதன்மை மாநிலமான தமிழ்நாட்டின் நிலையையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் டிஜிட்டல் முறையில் முன்னேறிய
மக்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சைபர் பாதுகாப்பு சவால்களை குயிக்
ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் கவனத்தில் கொள்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மால்வேர் பகுப்பாய்வு நிறுவனமான செக்ரைட் லேப்ஸ்-இன் ஆராய்ச்சியாளர்களால் மிக்க கவனத்துடன் தயாரிக்கப்பட்ட இந்தியா சைபர் திரெட் ரிப்போர்ட் 2025-ஆனது, தமிழ்நாட்டின் cyber அச்சுறுத்தல் எல்லைகள் பற்றிய புள்ளிவிவரங்களை thelivaga வெளிப்படுத்தியது. செக்ரைட் லேப்ஸில் உள்ள வல்லுனர் குழு, 2024 ஆம் ஆண்டில், 8.44 மில்லியன் வலுவான நிறுவல் கொண்ட ஒரு தளத்தில் 369.01 மில்லியன் கண்டறிதல்களைச்(Detection) செய்தது.
தமிழ்நாடு ஒரு எண்ட்பாயிண்டிற்கு
திகைப்பூட்டும் விதமாக 44.54 கண்டறிதல்களைக் கண்டது(detection’s Found); இது நாடு
முழுவதும் உள்ள அனைத்து மால்வேர் கண்டறிதல்களில் sarasariyaga 11.97% ஆகும். மேலும், இது தமிழ்நாட்டை இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான மால்வேர் கண்டறிதல் கொண்ட மாநிலமாக
மாற்றியது. அதே நேரத்தில், இந்திய அளவில் சென்னை
ஐந்தாவது அதிகபட்ச மால்வேர் கண்டறிதல்களைப் பதிவு செய்தது; இது ஒரு எண்ட்பாயிண்டிற்கு 48.75 கண்டறிதல்கள் மற்றும் நாடு முழுவதும் செய்யப்பட்ட அனைத்து கண்டறிதல்களில் 10.25% ஆகும்.
இச்சூழலானது, தமிழ்நாடு முழுவதும் நவீன, AI-பவர்டு சைபர் பாதுகாப்பு தீர்வுகளுக்கான ஒரு அவசரத் தேவையை உருவாக்குகிறது. இதை அறிந்துகொண்ட குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட், இம்மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோருக்கு குயிக் ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ்-ஐ கிடைக்கச் செய்துள்ளது. இத்தீர்வானது, இந்நிறுவனத்தின் முன்கணிப்பு திரெட் கண்டறிதலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் அதிநவீன மால்வேர்-ஹன்டிங் தொழில்நுட்பமான GoDeep.AI ஆல் திறனூட்டப்படுகிறது.
இது டீப் லேர்னிங், மல்டிலேயேர்டு டிஃபன்ஸ், பிஹேவியரல் detection,
பிரிடிக்டிவ் டிடக்ஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய ஐந்து முக்கிய
கூறுகளை அளிக்கிறது, அறியப்பட்ட மற்றும் ஜீரோ-டே தாக்குதல்கள் ஆகிய இரண்டுக்கும் எதிராக விரிவான பாதுகாப்பை வழங்குவதற்காக
ஒருங்கிணைக்கிறது.
குயிக் ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ்-ஆனது, ஒரு நவீன மால்வேர் கண்டறிதல் மற்றும் நீக்குதலை உள்ளடக்கிய, ஆட்டோமேட்டிக் டேட்டா பேக்கப் திறன்களுடன் கூடிய ரேன்ஸம்வேர் பாதுகாப்பு, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நிகழ்நேர வைரஸ் பாதுகாப்பு, நடவடிக்கைக்குரிய பரிந்துரைகளுடன் செக்யூரிட்டி & பிரைவசி ஸ்கோர், தீங்கிழைக்கும் வலைத்தளங்களுக்கு எதிராக புரௌசிங் பாதுகாப்பு, தரவு திருட்டு முயற்சிகளைத் தடுக்க ஃபிஷிங் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான ஸேஃப் பேங்கிங் அம்சங்கள் உள்ளிட்ட ஒரு விரிவான பாதுகாப்பு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும், இத்தீர்வு, பல சாதனங்களில் பயன்படுத்துகின்ற பாதுகாப்பை வழங்கும் மெட்டாபுரொடெக்ட்
தளத்திற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம், குடும்பங்கள்
தங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை தொலைதூரத்திலும், நிகழ்நேரத்திலும் நிர்வகிக்க உதவும் அதே நேரத்தில், உடனடி அத்துமீறல் எச்சரிக்கைகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட உரிம மேலாண்மை
ஆகியவற்றையும் நிர்வகிக்க இயலச் செய்கிறது.
இதன் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின்
தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சால்வி கூறியதாவது,
“இந்தியாவின் மாபெரும் மால்வேர் பகுப்பாய்வு
நிறுவனமான செக்ரைட் லேப்ஸின் ஒப்பிடமுடியாத நுண்ணறிவுகள் ஆதரவுடன், எங்கள் தீர்வுகள் நாட்டையும் அதன் குடிமக்களையும், இன்றைய அதிநவீன சைபர் அச்சுறுத்தல்களை விட ஒரு
படி மேலே வைத்திருக்கின்றன. டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஏற்பு ஆகியவை
வேகமாக வளர்ந்து வரும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், வலுவான மற்றும் புத்திசாலித்தனமான பாதுகாப்பு என்பது இனி விருப்பத்தேர்வுக்கானது
அல்ல;
அது அவசியமான ஒன்றாகும்!
அச்சுறுத்தல் செய்பவர்கள் மேலும் நவீனமாக வளர்ந்து, அடிப்படை பாதுகாப்பை பைபாஸ் செய்து வருவதால், காப்புரிமை பெற்ற AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட ஒரு சூப்பர் ஹீரோவான குயிக் ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸை அறிமுகப்படுத்தியுள்ளோம்; இது எளிமை மற்றும் வலிமையுடன் நிகழ்நேர, தகவமைப்பு பாதுகாப்பை வழங்குகிறது.
ஒரு பொறுப்பான சைபர் பாதுகாப்புத்
தலைவராக,
நாங்கள், தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மற்றும்
கூட்டாளர்கள் தகவலறிந்தவர்களாக இருக்கவும், அவர்களின் டிஜிட்டல் வழமைகளை வலுப்படுத்தவும், அனைவருக்குமான சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சுதந்திரத்தை அடிப்படை உரிமைகளாக மாற்றுவதில்
எங்களுடன் இணையவும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.
இந்த நடவடிக்கையானது குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் நவீன சைபர் பாதுகாப்பை அனைவருக்குமானதாக செய்வதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் நீட்டிப்பாகும். 'சைபர் பாதுகாப்பை அனைவருக்குமான ஒரு அடிப்படை உரிமையாக' மாற்றுவது என்ற அதன் இயக்கத்திற்கேற்ப, இந்நிறுவனம் அதன் நுகர்வோருக்கு மிகவும் நவீன சைபர் பாதுகாப்பு தீர்வுகளை அணுகக்கூடியதாக மாற்றுவதைத் தொடர்ந்து செய்து வருகிறது. சமீபத்தில், இந்நிறுவனம் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மோசடி தடுப்புத் தீர்வான ஆன்டிஃப்ராடு.AI-க்காக ஒரு ஃப்ரீமியம் மாதிரியை வெளியிட்டுள்ளது..
ஆன்டிஃப்ராடு.AI-ஆனது,
புலப்படும் மற்றும் மறைந்திருந்து தீங்கிழைக்கும் பயன்பாடுகளை அடையாளம் காண ஃப்ராடு ஆப் டிடெக்டர், ஃபிஷிங் இணைப்புகள் மற்றும் மோசடி வலைத்தளங்களைத் தடுக்க அதிநவீன நெறிமுறைகளுடன் கூடிய ஸ்கேம் புரொடெக்ஷன், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நிகழ்நேர கண்டறிதலுக்கான ஃப்ராடு பேங்க் அலெர்ட், மோசடி வெளிப்பட்ட நிலைகளை அளவிடுவதற்கான ரிஸ்க் புரொஃபைல் அஸ்ஸெஸ்மென்ட், மேம்பட்ட பாதுகாப்பிற்காக கால் ஃபார்வேர்டிங் அலெர்ட் மற்றும் பேயீ நேம் அனௌன்சர் உள்ளிட்ட
விரிவான மோசடி தடுப்பு திறன்களை வழங்குகிறது.
குயிக் ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ்-ஆனது, ஒரு மையப்படுத்தப்பட்ட கிளவுட் உள்கட்டமைப்பில் ஸ்டோர் செய்யப்பட்டுள்ள காலங்காலமாக மால்வேர் அச்சுறுத்தல்களிலிருந்து தொடர்ந்து கற்றுக் கொள்ளும் ஒரு சுய-விழிப்புணர்வு மால்வேர் ஹன்டிங் தொழில்நுட்பமான GoDeep.AI-ஆல் இயக்கப்படுகிறது. இதன்மூலம் ஜீரோ-டே சுரண்டல்கள் உள்ளிட்ட, இதற்கு முன் நிகழ்ந்திராத தாக்குதல்களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் முன்கணிப்பு கண்டறிதல் திறன்களை செயல்படுத்துகிறது.
இத்தீர்வு
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 11, 10, 8.1 மற்றும் 8 (முற்றிலும் பேட்ச்
செய்யப்பட்ட) ஆகியவற்ril 32-பிட் மற்றும் 64-பிட் ஆகிய
இரு பதிப்புகளிலும் ஆதரிக்கிறது.