Saturday, April 17, 2021
மல்டி அசெட் மியூச்சுவல் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
பதில் + நிதி சாணக்கியன்
இந்த குவான்டம் மல்டி அசெட் ஃபண்ட்
பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்வதாக இருக்கிறது.
இது அதிக ரிஸ்க் எடுக்க விருப்பாதவர்களுக்கு ஏற்ற ஃபண்ட். அதேநேரத்தில், இதை உங்கள் முதலீட்டுக் கலவையில் 10-15%க்குள் வைத்துக் கொள்வது நல்லது.
Quantum Multi Asset Mutual Fund - One Fund that Combines 3 different Asset Classes
தைவான் எக்சலன்ஸ் ஜவுளி உற்பத்திக்கான தீர்வு இணையவழி கருத்தரங்கு..! ·
தைவான் எக்சலன்ஸ் (Taiwan Excellence) “ஜவுளி உற்பத்திக்கான தீர்வு” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை (Webinar) நடத்துகிறது
· இந்த நிகழ்வு ஜவுளித்துறையின் நுட்பமான தொழில்நுட்ப தகவல்களை வழங்கும்
· தைவான் ஜவுளித்துறை, முக்கிய சர்வதேச பிராண்டுகளால் மிகவும் விரும்பப்படுகிற
கூட்டாளராக உள்ளது
· இந்தியா முழுவதுமிருந்து
ஜவுளித்துறை சார்ந்தவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பர்
அயல்நாட்டு வர்த்தக பணியகம் - BOFT, தைவான் (ROC){Bureau of Foreign Trade - BOFT}, தைவான் வெளிவர்த்தக மேம்பாடு கழகத்துடன் {Taiwan External Trade Development Council - TAITRA (TAITRA, தைவான் எக்சலன்ஸ்-ன் இந்த கருத்தரங்கை நடத்துகிறது
இணைந்து “ஜவுளி உற்பத்திக்கான தீர்வு” என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கை (Webinar) 29.04.2021, வியாழக்கிழமை அன்று நடத்துகிறது.
இந்தியா முழுவதுமிருந்து ஜவுளித்துறை சார்ந்தவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் தைவான் நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான
வழிவகைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்த இணையவழி கருத்தரங்கம் 29.04.2021, வியாழக்கிழமை அன்று இந்திய
நேரப்படி காலை 10 மணிக்கு நடைபெறும். ஜவுளித்துறையின் நுட்பமான தொழில்நுட்ப தகவல்களையும், தற்போதைய சூழலுக்கு
ஏற்ற சிறந்த நடைமுறைகளின் மூலமான வணிக உத்திகளையும் இக்கருத்தரங்கம் வழங்கும்.மேலும்
இந்த நிகழ்ச்சி https://www.youtube.com/watch?v=3zmW4OC2HoI என்ற தளத்தின் மூலம்
நேரலை செய்யப்படும்.
இன்றைய காலகட்டத்தில் தைவான் ஜவுளித்துறை, சர்வதேச அளவிலான முக்கிய பிராண்டுகளால் மிகவும்
விரும்பப்படுகிற கூட்டாளராக (Preferred Partner) உள்ளது. இக்கருத்தரங்கில் தைவான் நாட்டைச்
சேர்ந்த தொழில்துறை வல்லுனர்கள், ஜவுளித்துறையில் ஏற்ப்பட்டிருக்கும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களின்
சாதகங்களையும் அதனால் இந்திய ஜவுளித்துறையில் ஏற்படும் நேர்மறை தாக்கங்களையும் பற்றி
எடுத்துரைப்பார்கள். கட்டணம் எதுவும் இல்லாத
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள
https://rb.gy/xkdyuk என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.
இக்கருத்தரங்கில் பின்வருகிற துறை சார்ந்த அமர்வுகள் நடைபெறும்;
(i)சாயத்துறையின் முழுமையான தீர்வு (Dye-House Total Solution)(ii) நவீன பின்னலின்
தேவை (Need of Smart Knitting) (iii)புதிய தலைமுறைக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன
கன்வேயர் டிரைவ் டையிங் மெஷின் (Intelligent Conveyer Drive Dyeing Machine) (iv) கயிறு வடிவிலான தொடர் சலவை வீச்சு
(Continuous Washing Range in Rope Form).
தைவான் நாட்டைச் சார்ந்த கீழ்க்கண்ட சிறப்பு விருந்தினர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்:
(i)திரு. பிரட் லியாங்க் - லாஜிக் ஆர்ட் ஆட்டோமேசன் (Mr. Fred Liang - Logic Art Automation Co. Ltd),
(ii)திரு. மேசன் சாவோ - பயிலுங்
மெசினரி மில் (Mr. Mason Chao - Pailung Machinery Mill Co. Ltd), (iii)திரு.C.L. சாங்க்
- ACME மெசினரி இண்டஸ்ட்ரி (Mr. C.L.
Chang, ACME Machinery Industry Co. Ltd) மற்றும் (iv) திரு அல்பி லின் - ஹிசிங் செங்க் Machinery
(Mr. Alfie Lin - Hsing Cheng Machinery Ind. Co. Ltd.,)
Tuesday, April 13, 2021
தமிழ்நாட்டில் மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய அனுமதி
தமிழ்நாட்டில் மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய அனுமதி அளிக்கபபட்டுள்ளது. அதன்படி, பத்திர பதிவு அலுவலங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
*பதிவுத் துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (ஏப்ரல் 14, 2021) , ஆடிப்பெருக்கு (03.08 .2021) மற்றும் தைப்பூசம் (18- 1- 2022) ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது
மேலும், மங்களகரமான நாள்களில் பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலர்கள் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாள்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு பதிவு சான்றிதழ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் கோரிக்கை வந்தது.
இதன் அடிப்படையில், சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவினை மேற்கொள்ளும் மற்றும் அந்த நாள்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதியும் வழங்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, August 10, 2019
Saturday, June 9, 2018
Tuesday, November 28, 2017
தங்கம், வைர ஆபரணங்கள் வாங்க கடன் வங்கிகள் உதவி
தங்கம் மற்றும் வரை ஆபரணங்கள் வாங்க, தனிநபர் கடனை விட குறைந்த வட்டியில் பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன.
பொதுவாக, வீடு மற்றும் வாகனங்கள் என லட்சக் கணக்கில் செலவு வைக்கும் கடன்களை அதற்குரிய கடன் பிரிவில் உதாரணமாக வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் வாங்குகின்றனர்.
அதேநேரத்தில் இதர தேவைகளான நகை, கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்க பெரும்பாலானவர்கள் பெர்சனல் லோன் என்கிற தனிநபர் கடனையே வாங்கிறார்கள்.
இதற்கான ஆண்டு வட்டி, ஆண்டுக்கு 12- 14%
தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் வாங்க அதற்கென இருக்கும் சிறப்பு திட்டங்கள் மூலம் கடன் வாங்கினால் வட்டி குறைவு. உதாரணமாக, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் வாங்க பெண்களுக்கு 12-15% வட்டியில் கடன் வழங்குகின்றன.
நடைமுறை
மாத சம்பளத்தில் 10 மடங்கு வரை கடன் வாங்கலாம். குறைந்தபட்சமாக ரூ.10,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையிலும் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இதனை திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள்.
இந்தக் கடனை பெற வங்கி வாடிக்கையாளராக இருப்பது மிக அவசியம். ஆபரணத்தின் மதிப்பில் 80 சதவிகிதத்தை கடனாக வழங்குகின்றன.
Saturday, September 9, 2017
கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் - காகித தங்க முதலீட்டு திட்டம்..!
கடந்த 2007 ஆம் ஆண்டில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கோல்டு இ.டி.எஃப். திட்டம், தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவர்களுக்கு யூனிட்கள் கிடைக்கும். இந்த எண்ணிக்கை முதலீடு செய்யும் தேதியில் உள்ள ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை முதலீடு செய்யும் தொகையை வகுப்பதால் கிடைக்கிறது.
இந்த யூனிட்கள் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ)களில் பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே, பங்குகளை போன்று எளிதில் வாங்கலாம். விற்பனை செய்யலாம்.
- Birla Sun Life Gold ETF
- Goldman Sachs Gold ETF
- Religare Invesco Gold ETF
- Quantum Gold Fund
- SBI Gold ETF
- IDBI Gold ETF
- R*Shares Gold ETF
- Axis Gold ETF
- Kotak Gold ETF
- ICICI Prudential Gold ETF
- UTI Gold ETF
- HDFC Gold ETF
- Can Gold ETF
Open-ended - Gold: Funds - Return Five Year - Top 10
Fund | Rating | Category | Launch | Expense Ratio (%) | 5-Year Return (%) | 5-Year Rank | Net Assets (Cr) |
---|---|---|---|---|---|---|---|
HDFC Gold Exchange Traded Fund | Invest Online | Unrated | Aug-2010 | - | -1.66 | 1/23 | 492 | |
IDBI Gold Exchange Traded Fund | Unrated | Nov-2011 | 0.57 | -1.69 | 2/23 | 74 | |
Reliance ETF Gold BeES | Unrated | Mar-2007 | 1.00 | -1.73 | 3/23 | 2,605 | |
UTI Gold Exchange Traded Fund | Unrated | Mar-2007 | - | -1.76 | 4/23 | 451 | |
SBI Exchange Traded Fund Gold | Invest Online | Unrated | Apr-2009 | - | -1.76 | 5/23 | 778 | |
Aditya Birla Sun Life Gold Exchange Traded Fund | Invest Online | Unrated | May-2011 | 0.92 | -1.79 | 6/23 | 71 | |
Invesco India Gold Exchange Traded Fund | Invest Online | Unrated | Mar-2010 | 1.00 | -1.80 | 7/23 | 39 | |
Quantum Gold Fund | Invest Online, Paperless | Unrated | Feb-2008 | 1.02 | -1.83 | 8/23 | 55 | |
ICICI Prudential Gold iWIN Exchange Traded Fund | Invest Now | Unrated | Aug-2010 | 0.89 | -1.89 | 9/23 | 103 | |
Kotak Gold ETF Fund | Invest Online | Unrated | Jul-2007 | 1.00 | -1.91 | 10/23 | 416 |