2026-ம் ஆண்டில்...
தங்கத்தில் முதலீடு செய்ய எந்த வழிமுறை சிறந்தது..?
வி.ஹரிஹரன்,
தங்கம் விலை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிபுணர், சென்னை.
நீங்கள் செலவழித்து வாங்கும் விலையை விட, விற்கும்போது தங்க நகையின் விலை அதிகமாக இருந்தால் அந்த முதலீடு லாபகர மானதுதான்.
. தங்கப் பத்திரம் (SGB)
மத்திய அரசு ஒவ்வொரு ஆண் டும் வங்கி /அஞ்சல் அலுவலகங் களின் மூலம் தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது. அரசு நிர்ணயிக் கும் விலையில் வாங்கலாம். ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். 8 ஆண்டுகள் முதிர்ச்சி காலம். முடிவில் அந்த நாள் தங்க சந்தை விலைக்கு பணம் கிடைக் கும். பாதுகாப்பு சுமை எதுவும் இல்லை. தங்கப் பத்திரத்தின் மிகப் பெரிய நன்மை, 8 வருட முதலீட்டு லாபத்துடன் முழு வரிவிலக்கு கிடைக்கும். இந்த நன்மை இந்தியா வில் வேறு எந்த தங்க முதலீட்டிலும் கிடையாது.
தற்போது புதிய வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கோல்டு (Digital Gold)
இணையதளங்கள் அல்லது மொபைல் ஆப்களின் மூலம் டிஜிட்டலாக வாங்கப்படும் தங்கம், டிஜிட்டல் கோல்டு எனப்படுகிறது. ரூ.10, ரூ.100 போன்ற சிறிய தொகையிலிருந்தே முதலீடு செய்ய லாம். இதில் தூய தங்க அளவு அதிகமாக இருக்கும். எந்த நேரத்திலும் உடனடியாக வாங்க லாம், விற்கலாம். இதை நாணயமாக மாற்றம் செய்யும் வசதியும் உண்டு. இது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் இன்னும் வராத காரணத்தால், நம்பகமான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
கோல்டு ஈ.டி.எப்
இந்திய பங்குச்சந்தை முதலீட்டா ளர்களிடையே பிரபலமாகி வரக் கூடிய ஒரு முதலீடு இது. அதாவது இந்த முறைகளில் தங்கத்தை சிறு சிறு தொகைகளில் முதலீடு செய்து யூனிட்டுகளாக வாங்கி வைத்துக்கொள்ள முடியும். நாம் நம்முடைய டீமேட் கணக்கிற்கு சென்று கோல்டு ஈ.டி.எப்.களை வாங்கி வைத்துக்கொள்ள முடியும்.
இது பங்குச் சந்தையுடன் இணைக் கப்பட்டது என்பதால் குறிப்பிட்ட அளவு புரோக்கரேஜ் தொகை மற்றும் எக்ஸ்பென்ஸ் ரேஷி யோவை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். மற்றபடி, முதலீட்டிற்கு கோல்டு ஈ.டி.எப். சிறந்தது.
கோல்டு மியூச்சுவல் பண்டுகள்
கோல்டு மியூச்சுவல் பண்ட் திட் டங்களும் தற்போது கிடைக் கின்றன. மியூச்சுவல் பண்டுகளில் நாம் எப்படி யூனிட்களை வாங்கு கிறோமோ அதே போல கோல்டு மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்து யூனிட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
தங்க விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்த யூனிட்டுக்களும் ஏறும், இறங்கும். மியூச்சுவல் பண்டுகளை போலவே, கோல்டு மியூச்சுவல் பண்டு நிறு வனத்திற்கு குறிப்பிட்ட தொகையை நாம் செலுத்த வேண்டும்.
தங்கம் விலை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிபுணர், சென்னை.
-வி.ஹரிஹரன்,