மத்திய பட்ஜெட் 2026-27: வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!
ஆர். ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி
| ஆர். ஜெகதீஷ் |
2026–27
நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்புகளில், பொதுமக்கள் அதிகமாக
எதிர்பார்த்தது வருமான வரி தொடர்பான மாற்றங்கள்தான். நடுத்தர வர்க்கத்தினர்,
தொழில்முனைவோர், ஊழியர்கள் என அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல
அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய வருமான வரிச் சட்டம் – ஏப்ரல் 1 முதல் அமல்:
இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அறிவிப்பு, புதிய வருமான வரிச் சட்டம் (New Income Tax Code) வரும் 2026 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகும்.
தற்போதைய வருமான
வரிச் சட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவதால், அதில் விதிமுறைகள்
சிக்கலானதாகவும், பொதுமக்களுக்கு புரிந்துகொள்ள கடினமாகவும் இருந்தது.
புதிய
சட்டத்தின் மூலம்:
·
வருமான
வரி விதிமுறைகள் எளிமைப்படுத்தப்படும்
·
தேவையற்ற
பிரிவுகள் நீக்கப்படும்
·
வரிக்
கணக்குத் தாக்கல் படிவங்கள் (IT Returns) சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கும்
·
வரி
செலுத்தும் நடைமுறை டிஜிட்டல் முறையில் மேலும் எளிதாக்கப்படும்
இதற்கான
முழுமையான விதிமுறைகளும் புதிய வருமான வரி படிவ விவரங்களும் விரைவில்
வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
விபத்துக் காப்பீட்டு இழப்பீட்டிற்கு டி.டி.எஸ் & வருமான வரி இல்லை:
முன்பு, வாகன
விபத்துகளில் கிடைக்கும் காப்பீட்டு இழப்பீடு சில சூழ்நிலைகளில் வருமானமாக
கருதப்பட்டு வருமனா வரி விதிப்புக்கு உட்பட்டிருந்தது. ஆனால் இனி,
வாகன
விபத்துக்காப்பீட்டில் கிடைக்கும் இழப்பீட்டு தொகைக்கு முழுமையான வருமான வரி விலக்கு
வழங்கப்படும். மேலும், மூலத்தில் வரி டி.டி.எஸ் பிடிக்கப்படாது.
இது
விபத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் – காலக்கெடு நீட்டிப்பு:
வருமான வரி
கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்த பிறகு தவறுகள் இருப்பதை பலர் தாமதமாக
உணர்வது வழக்கம். இதற்காக தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட கணக்கிற்கு (Revised
Return) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முன்பு:
·
டிசம்பர்
31 வரை மட்டுமே திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்ய முடிந்தது.
இனி:
·
மார்ச்
31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
·
உதாரணமாக,
2026-27-ம் வரி ஆண்டில் 2027 டிசம்பர் 31 வரை மட்டுமே திருத்தப்பட்ட கணக்கு
தாக்கல் செய்ய முடியும் என இருந்தது. இனி 2028 மார்ச் மார்ச் 31 வரை கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத்
திருத்தத்திற்கான கட்டணம் மிகவும் குறைவாக – பெயரளவிலேயே வசூலிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்துபவர்களுக்கு பெரிய சலுகையாகும்.
வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை:
பலர் எதிர்பார்த்திருந்த முக்கிய விஷயம் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா என்பதே.
ஆனால் இந்த பட்ஜெட்டில், அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதாவது,
தற்போது நடைமுறையில் உள்ள வரி வரம்புகளே தொடரும்.
சிறு தவறுகள் இனி கிரிமினல் குற்றம் அல்ல:
வருமான வரி
சட்டத்தில் இதுவரை சில நிர்வாகத் தவறுகளுக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வந்தன. உதாரணமாக:
·
பணமாக
அல்லாமல் பொருளாக வழங்கப்பட்ட தொகைக்கு சரியான ஆவணங்கள் இல்லாமை
·
TDS
பிடித்தம் செய்யாதது அல்லது தாமதமாக செலுத்தியது
இத்தகைய
தவறுகள் முன்பு கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டன. ஆனால், புதிய விதிமுறைகளின்
படி:
இவை இனி
குற்ற வழக்காக அல்ல – அபராதமாக மட்டுமே கருதப்படும்.
இதனால் சிறு
தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சட்ட ரீதியான அழுத்தம் பெரிதும் குறையும்.
வெளிநாட்டு செலவுகளுக்கான TCS குறைப்பு: வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கான TCS (Tax Collected
at Source) தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
·
வெளிநாட்டு
சுற்றுலா செலவுகளுக்கு TCS – இனி
2% மட்டுமே
·
கல்வி
மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கும் – 2% TCS மட்டுமே
முன்பு இது
அதிகமாக இருந்ததால் மாணவர்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் பெரிதும்
பாதிக்கப்பட்டனர். இந்தக் குறைப்பு நடுத்தர வர்க்கத்துக்கு பயனளிக்கும்
அறிவிப்பாகும்.
மொத்தமாக இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
இந்த பட்ஜெட்
வருமான வரி விதிமுறைகளை கடுமையாக்காமல், எளிமைப்படுத்தும் நோக்கத்துடன்
உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக:
·
வருமான
வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துதல்
·
பொதுமக்களுக்கு
தேவையற்ற சட்ட சிக்கல்களை நீக்குதல்
·
வெளிநாட்டு
செலவுகளுக்கான TCS சுமையை குறைத்தல்
·
திருத்தப்பட்ட
கணக்கு தாக்கல் முறையை நெகிழ்வாக்குதல்
எனப் பல
சீர்திருத்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
முடிவுரை
2026–27
பட்ஜெட், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பெரிய சலுகைகள் அளிக்காவிட்டாலும்,
நடைமுறை சிக்கல்களை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய
வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருவதால் எதிர்காலத்தில் வரி நிர்வாகம் மேலும்
எளிமையாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்களை சரியாகப் புரிந்து கொண்டு, நிதி திட்டமிடலை
மேற்கொண்டால் வரி செலுத்துபவர்கள் அதிக பயன் பெற முடியும்.
கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ள
ஆர்.
ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி
Email id: jjauditcell@gmail.com, ranajegadeesh@yahoo.co.in
Phone: 94433 84627