Showing posts with label Business. Show all posts
Showing posts with label Business. Show all posts

Saturday, April 17, 2021

தைவான் எக்சலன்ஸ்  ஜவுளி உற்பத்திக்கான தீர்வு இணையவழி கருத்தரங்கு..! ·

தைவான் எக்சலன்ஸ் ஜவுளி உற்பத்திக்கான தீர்வு இணையவழி கருத்தரங்கு..! ·

 தைவான் எக்சலன்ஸ் (Taiwan Excellence) “ஜவுளி உற்பத்திக்கான தீர்வு” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை (Webinar) நடத்துகிறது

·     இந்த நிகழ்வு ஜவுளித்துறையின்  நுட்பமான தொழில்நுட்ப தகவல்களை வழங்கும்

·     தைவான் ஜவுளித்துறை,  முக்கிய சர்வதேச பிராண்டுகளால் மிகவும் விரும்பப்படுகிற கூட்டாளராக உள்ளது

·     இந்தியா முழுவதுமிருந்து ஜவுளித்துறை சார்ந்தவர்கள்  இந்நிகழ்வில் பங்கேற்பர்

அயல்நாட்டு வர்த்தக பணியகம் - BOFT, தைவான் (ROC){Bureau of Foreign Trade - BOFT}, தைவான் வெளிவர்த்தக மேம்பாடு கழகத்துடன்  {Taiwan External Trade Development Council - TAITRA (TAITRA, தைவான் எக்சலன்ஸ்-ன் இந்த கருத்தரங்கை நடத்துகிறது இணைந்து “ஜவுளி உற்பத்திக்கான தீர்வு” என்ற தலைப்பிலான  இணையவழி கருத்தரங்கை (Webinar) 29.04.2021, வியாழக்கிழமை  அன்று  நடத்துகிறது.

இந்தியா முழுவதுமிருந்து ஜவுளித்துறை சார்ந்தவர்கள்  பங்கேற்கும் இக்கருத்தரங்கில், இந்தியா  மற்றும் தைவான்  நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த இணையவழி கருத்தரங்கம் 29.04.2021, வியாழக்கிழமை அன்று இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு நடைபெறும். ஜவுளித்துறையின்  நுட்பமான தொழில்நுட்ப தகவல்களையும், தற்போதைய சூழலுக்கு ஏற்ற சிறந்த நடைமுறைகளின் மூலமான வணிக உத்திகளையும் இக்கருத்தரங்கம் வழங்கும்.மேலும் இந்த நிகழ்ச்சி https://www.youtube.com/watch?v=3zmW4OC2HoI என்ற தளத்தின் மூலம் நேரலை செய்யப்படும்.இன்றைய காலகட்டத்தில் தைவான் ஜவுளித்துறை,  சர்வதேச அளவிலான முக்கிய பிராண்டுகளால் மிகவும் விரும்பப்படுகிற கூட்டாளராக (Preferred Partner) உள்ளது. இக்கருத்தரங்கில் தைவான் நாட்டைச் சேர்ந்த தொழில்துறை வல்லுனர்கள், ஜவுளித்துறையில்                  ஏற்ப்பட்டிருக்கும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களின் சாதகங்களையும் அதனால் இந்திய ஜவுளித்துறையில் ஏற்படும் நேர்மறை தாக்கங்களையும் பற்றி எடுத்துரைப்பார்கள்.   கட்டணம் எதுவும் இல்லாத இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள  https://rb.gy/xkdyuk என்ற தளத்தில்      பதிவு செய்யலாம். 

இக்கருத்தரங்கில் பின்வருகிற துறை சார்ந்த அமர்வுகள் நடைபெறும்; (i)சாயத்துறையின் முழுமையான தீர்வு (Dye-House Total Solution)(ii) நவீன பின்னலின் தேவை (Need of Smart Knitting) (iii)புதிய தலைமுறைக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன கன்வேயர் டிரைவ் டையிங் மெஷின் (Intelligent Conveyer Drive Dyeing Machine)   (iv) கயிறு வடிவிலான தொடர் சலவை வீச்சு (Continuous Washing Range in Rope Form).

தைவான் நாட்டைச் சார்ந்த கீழ்க்கண்ட சிறப்பு விருந்தினர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்: 

(i)திரு. பிரட் லியாங்க் - லாஜிக் ஆர்ட் ஆட்டோமேசன் (Mr. Fred Liang - Logic Art Automation Co. Ltd), 

(ii)திரு. மேசன் சாவோ - பயிலுங் மெசினரி மில் (Mr. Mason Chao - Pailung Machinery Mill Co. Ltd), (iii)திரு.C.L. சாங்க் - ACME மெசினரி இண்டஸ்ட்ரி    (Mr. C.L. Chang, ACME Machinery Industry Co. Ltd) மற்றும் (iv)  திரு அல்பி லின் - ஹிசிங் செங்க் Machinery (Mr. Alfie Lin - Hsing Cheng Machinery Ind. Co. Ltd.,)

Tuesday, March 9, 2021

கோவெஸ்ட்ரோ: குழுமத்தின்  வலுவான   டிவிடெண்ட் பாலிசி ..!

கோவெஸ்ட்ரோ: குழுமத்தின் வலுவான டிவிடெண்ட் பாலிசி ..!

 

கோவெஸ்ட்ரோ, விதிவிலக்கான 2020 ஆம் ஆண்டை வழிநடத்தியது

நிதி ஆண்டு 2020: இரண்டாம் அரையாண்டில் குறிப்பிடத்தக்க மேம்பாடு

·  முக்கிய விற்பனை அளவு 5.6% குறைவு

·   குழும விற்பனை சுமார் 10.7 பில்லியன் யூரோ (–13.7%)

·    எபிட்டா சுமார் 1.5 பில்லியன் யூரோ  (–8.2%) ஆக இருக்கும் என கணிப்பு

·   செயல்பாட்டு பண வரத்து எளிதாகி,  530 மில்லியன் யூரோ  ஆக (+ 12.1%) அதிகரித்துள்ளது

·   புதிய ஈவுத்தொகை கொள்கையின்படி, முன்மொழியப்பட்ட ஈவுத்தொகை 1.30 யூரோ

·   முழுமையாக மாறுவதற்கான வணிக உத்தியின் மறுசீரமைப்பு

·  தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட  2021 நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை / கடலூர், மார்ச், 2021

கோவெஸ்ட்ரோ (Covestro) நிறுவனம்,  விதிவிலக்கான 2020 ஆம் ஆண்டில் வலிமையான நிறைவைக் கண்டது. குறிப்பாக, ஆண்டின் இரண்டாம் பாதியில், அதன் நிலையான நெருக்கடி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் பயனடைந்தது நான்காவது காலாண்டில் மிகவும் வெற்றிகரமாக இருந்தபோதிலும், முதல் ஆறு மாதங்களில் எழுந்த மிகப் பெரிய தொற்றுநோய் பரவல் தொடர்பான பாதிப்பு இந்தக் குழுமத்தால் முழுமையாக செயல்பட முடியவில்லை.

 

2020 ஆம் ஆண்டில், குழுமத்தின் முக்கிய  வணிக அளவுகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.6% குறைந்துவிட்டன. குழும விற்பனையும் குறைந்தது. இது முந்தைய ஆண்டை விட 13.7% குறைந்து சுமார் 10.7 பில்லியன் யூரோவாக இருந்தது.

அதிக செலவு குறைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதன் மூலம், கோவெஸ்ட்ரோவின்  எபிட்டா (EBITDA)  ஆண்டு சரிவை 8.2 சதவிகிதமாகக் குறைக்க முடிந்தது. இது 2020 ஆம் நிதியாண்டில் ஏறக்குறைய 1.5 பில்லியன் யூரோ (முந்தைய ஆண்டு: தோராயமாக யூரோ 1.6 பில்லியன்) ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

நிகர வருமானம் 459 மில்லியன் யூரோ (–16.8%) அடைந்தது. அதே நேரத்தில் சுலப செயல்பாட்டு பண வரத்து (Free Operating Cash Flow - FOCF) 530 மில்லியன் யூரோ ஆக (+ 12.1%) அதிகரித்துள்ளது.

"இந்த விதிவிலக்கான 2020 ஆம் ஆண்டு முழுவதும் நாங்கள் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது மற்றும் எல்லா நேரங்களிலும் செயல்படும் திறனை பராமரித்தோம் எங்கள் பணியாளர்களைப் பாதுகாக்கவும், விநியோகச் சங்கிலிகளை செயல்பட வைக்கவும், எங்கள் வலுவான பண வரத்து நிலையை விரிவுபடுத்தவும் நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்,”என்று முதன்மை செயல் அதிகாரி டாக்டர் மார்கஸ் ஸ்டீல்மேன் (CEO Dr. Markus Steilemann) கூறினார்.

 

"2020 நிதியாண்டில், எங்களது வணிக உத்தி மற்றும் இலக்குகளை நாங்கள் தீவிரமாக தொடர முடிந்தது. டி.எஸ்.எம் (DSM) -ல் இருந்து பிசின்கள் மற்றும் செயல்பாட்டுப் பொருட்கள் வணிகத்தை (Resins & Functional Materials business) கையகப்படுத்தியதன் மூலம் எங்கள் எதிர்கால நோக்கம் முழுமை அடைவதற்கான வழிகளை நாங்கள் வரையறுத்துள்ளோம். முன்னதாக 2020 ஆம் ஆண்டில், கோவெஸ்ட்ரோ முழுமையாக மாறுவதாக அறிவித்தது. இந்த நீண்டகால நோக்கத்தை நிறைவேற்றவும், அதன் வணிக நடவடிக்கைகளின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக உட்பொதிக்கவும், இந்தக் குழுமம் நான்கு அம்சங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தது. மாற்று மூலப்பொருட்கள், புதுமையான மறுசுழற்சி, கூட்டு தீர்வுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் (alternative raw materials, innovative recycling, joint solutions, and renewable energies) ஆகியவை அந்த அம்சங்கள் ஆகும். 

 

நிலையான நடவடிக்கைகள் மூலம் வலுவான பலன்கள்..!  

"ஆரம்பத்தில் நாங்கள் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகள், வலுவான பலன்களை வழங்குவதில் கணிசமாக உதவின. ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து தேவை கணிசமாக மீண்டும் அதிகரித்தது மூலம், ஆண்டின் இரண்டாம் பாதியில் நாங்கள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பினோம். வருவாய் சம்பாதிப்பதில் கிட்டத்தட்ட முந்தைய ஆண்டின் நிலையை எட்டினோம், "என்று முதன்மை நிதி அதிகாரி டாக்டர் தாமஸ் டோஃபர் (CFO Dr. Thomas Toepfer) கூறினார்.

 

"இன்னும் நிச்சயமற்ற தன்மை காணப்பபடும் சூழலில், நாங்கள் செலவை குறைக்கும் செயலில் இருக்கிறோம். மேலும், தொடர்ந்து எங்கள் செயல்திறனை வலுப்படுத்துகிறோம். கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு மதிப்பான சேவை வழங்க கவனம் செலுத்துகிறோம்." 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் பாதிப்பு மற்றும் எளிதில் பணமாக்க கூடிய பண இருப்புகளை வலுவாக நிலைநிறுத்த, கோவெஸ்ட்ரோ கடந்த ஆண்டு பல கூடுதல் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தியது. இதன் விளைவாக,  இந்தக் குழுமம் குறுகிய காலத்தில் மொத்தம் 360 மில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்தியது. 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட செயல்திறன் திட்டம் "பெர்ஸ்பெக்டிவ்"  ("Perspective") 2020 நிதியாண்டில் 130 மில்லியன் யூரோ சேமிப்பில் பங்களித்தது மற்றும் அறிவிக்கப்பட்டபடி ஆண்டு முடிவில் இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

கோவ்ஸ்ட்ரோ நிறுவனம், 2020 ஆம் ஆண்டில் பல்வேறு வகையான நிதி திரட்டும் நடவடிக்கைகளையும் பின்பற்றியது. அவ்வாறு செய்யும்போது, குழுமம் தனது நிதித் திட்டங்களை அதன் நிலைத்தன்மையின் செயல்திறனுடன் சீரமைத்து, சாத்தியமான இடங்களில் அதிக நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை காட்டியதுஉதாரணத்துக்கு, மார்ச் 2020 இல் கையெழுத்திடப்பட்ட யூரோ 2.5 பில்லியன் மொத்த கடன் வசதி, சுற்றுச்சூழல், சமூக அக்கறை, சிறப்பான நிர்வாகம் (Environment, Social, Governance –ESG -.எஸ்.ஜி) மதிப்பீட்டோடு இணைக்கப்பட்டுள்ளது. கோவ்ஸ்ட்ரோவின் சிறந்த ஈ.எஸ்.ஜி செயல்திறன், குறைந்த வட்டியில் கடன் கிடைக்க உதவியது.

வணிக உத்தி மறுசீரமைப்பு: வழிகாட்டும் கொள்கையாக குறிக்கோள் 

 

முழுமையாக மாறுவதற்கான தெளிவான குறிக்கோளுடன் மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக, கோவெஸ்ட்ரோ அதன் குழும  வணிக உத்தியை  இணைத்துள்ளது. இந்த முயற்சி, வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும். நிலையான வளர்ச்சியை பெறவும் மையமாகக் கொண்டுள்ளது. ஜூலை 1, 2021 முதல், கோவெஸ்ட்ரோ வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் இதர நிறுவனங்களை விட குறைவான விலையில் தயாரிப்புகளை வழங்கும் விதமாக சீரமைக்கப்பட்ட ஏழு வணிக நிறுவனங்களைச் சுற்றியுள்ள புதிய, வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பில் தனது வணிகத்தை நிர்வகிக்க இருக்கிறது. முன்னோக்கிச் செல்லும்போது, செயல்திறன் பொருட்கள் (Performance Materials) மற்றும் தீர்வுகள் மற்றும் சிறப்பு வகைகள் (Solutions and Specialties) ஆகிய இரண்டு வணிகப் பகுதிகளை குழுமம் வேறுபடுத்துகிறது.·   செயல்திறன் பொருட்கள்: இந்தப் பகுதி ஒரு தனி வணிக நிறுவனத்தை உருவாக்கும் மற்றும் நிலையான பாலிகார்பனேட்டுகள், ஸ்டாண்டர்ட் யுரேதேன் கூறுகள் மற்றும் அடிப்படை வேதிப் பொருள்கள் (Standard Polycarbonates, Standard Urethane Components, and Basic Chemicals) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

·  தீர்வுகள் மற்றும் சிறப்பு வகைகள்: இந்தப் பகுதியில் டெய்லர்ட் யுரேதேன்ஸ், பூச்சுகள் மற்றும் பசைகள், பொறியியல் பிளாஸ்டிக், சிறப்பு வகைகள் ஃபிலிம்கள், எலாஸ்டோமர்கள் மற்றும் தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன் (Tailored Urethanes, Coatings and Adhesives, Engineering Plastics, Specialty Films, Elastomers, and Thermoplastic Polyurethanes.) ஆகிய ஆறு புதிய வணிக நிறுவனங்கள் இருக்கும்.

 கோவெஸ்ட்ரோ அதன் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்ற தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளில் சீரான சீரமைப்பை  மேற்கொள்வது மூலம் லாபகரமான வழியில் நிலைத்தன்மையை நிறைவேற்றுவதில் இன்னும் கூர்மையான கவனம் செலுத்துகிறது. எதிர்காலத்தில்,  இந்தக் குழும முதலீடுகள், கையகப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நிலைத்தன்மையின் அளவுகோல்களை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்தும்.


சுழற்சி பொருளாதாரத்தை (circular economy) நோக்கிய அதன் மாற்றத்தின் ஒரு பகுதியாக, கோவெஸ்ட்ரோ அதன் சுழற்சி தயாரிப்புகளின்  கலவையை விரிவுபடுத்துகிறது.


"முழு சுழற்சியாக மாறுவதற்கான எங்கள்  குறிக்கோள் எங்கள் குழுமத்தின் புதிய உத்தியின் திசையை காட்டுகிறது. புதிய கட்டமைப்பு எதிர்காலத்திற்கான உகந்த தொடக்க புள்ளியை உருவாக்கி வருகிறது, மேலும் இது கணிசமாக மிகவும் போட்டித் தன்மை உள்ள நிறுவனமாக எங்களை நிலைநிறுத்தும் "என்று ஸ்டீல்மேன் கூறுகிறார்.

 

"இது எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யவும், எங்கள் நிறுவனத்தை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றவும், நிலையான வளர்ச்சியை உருவாக்கவும் உதவும். சுழற்சிப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே முன்னோக்கி செலுத்தி வருகிறோம். "

 

குழுமத்தின்  வருவாயில் வலுவான கவனம் செலுத்தும் புதிய ஈவுத்தொகை கொள்கை (New dividend policy with stronger focus on Group's earnings)

கோவெஸ்ட்ரோ தனது லாப ஈவுத்தொகை கொடுப்பதை (dividend payout) புதிய கொள்கை அடிப்படையில் அமைத்து வருகிறது. லாப ஈவுத்தொகை கொள்கை குழுமத்தின்  வருவாயை அடிப்படையாகக் கொண்டது. ஈவுத்தொகை கொடுக்கும் விகிதம் குழுமம் சம்பாதிக்கும் நிகர வருமானத்தில் 35% முதல் 55% வரை இருக்கும்.

"இந்த லாப ஈவுத்தொகைக் கொள்கை கோவெஸ்ட்ரோவின் ஒட்டுமொத்த நிதி நிலைக்கு மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் வலுவான வருவாய் அதிகரிப்பு,  அதிக ஈவுத்தொகையை வழங்க எங்களுக்கு உதவுகிறது" என்று டோஃபர் கூறினார்.

தற்போதைய செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, கோவெஸ்ட்ரோ 2020 நிதியாண்டில் ஒரு பங்குக்கு 1.30 யூரோ-ஐ  லாப ஈவுத்தொகையாக விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. இது 55% லாப ஈவுத்தொகை விகிதத்தை ஒத்துள்ளது.

 

வழிகாட்டுதல் 2021: நிதியாண்டில் தொற்றுநோய் பாதிப்புக்கு முந்தைய 2019 ஆம் ஆண்டை விட சிறப்பான செயல்பாடு எதிர்பார்ப்பு (Guidance 2021: Fiscal year above pre-pandemic level 2019 expected)

2021 நிதியாண்டில், கோவெஸ்ட்ரோவின் முக்கிய வணிக வளர்ச்சி 10% முதல் 15% வரை இருக்கும் என எதிர்பார்க்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் சுமார் 6 சதவிகிதம் டி.எஸ்.எம் -ல் இருந்து பிசின்கள் மற்றும் செயல்பாட்டு பொருட்கள் (Resins & Functional Materials -RFM - ஆர்.எஃப்.எம்) வணிகத்தை திட்டமிட்டு கையகப்படுத்தியது காரணம் என்று குழுமம் அறிவித்தது. மேலும், கோவெஸ்ட்ரோ எஃப்.ஓ.சி.எஃப் (F.O.C.F) - 900 மில்லியன் யூரோக்கும் 1.4 பில்லியன் யூரோவுக்கும் இடையில் கணித்துள்ளது, ஆர்.ஓ.சி.இ (ROCE) 7% முதல் 12% வரை இருக்கும்.

குழுமத்தின் எபிட்டா 2021 ஆம் ஆண்டில் 1.7  பில்லியன் யூரோவுக்கும் 2.2 பில்லியன் யூரோவுக்கும் இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், எபிட்டா வரம்பு 700 மில்லியன் யூரோவிலிருந்து 780 மில்லியன் யூரோ  ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அனைத்து பிரிவுகளிலும் தேவை மீண்டும் அதிகரிப்பு (Recovery in demand across all segments in second half of 2020)

பாலியூரிதீன் பிரிவில் 2020 ஆம் நிதியாண்டில் முக்கிய வணிக விற்பனை அளவுகள் 6.1% குறைந்துவிட்டன.கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக ஆண்டின் முதல் பாதியில் தேவை வீழ்ச்சியடைந்தது. ஆண்டின் இரண்டாம் பாதியில் தேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது மற்றும் ஒரு சாதகமான போட்டி நிலைமை ஆகியவை முக்கிய பொருள்களின் வணிக அதிகரிப்புக்கு வழிவகுத்தன. முழு ஆண்டில் விற்பனை 13.1% குறைந்து 5.0 பில்லியன் யூரோவாக இருந்தது. முக்கியமாக, ஆண்டின் சராசரி விற்பனை விலை குறைந்தது மற்றும் மொத்த விற்பனையின் சரிவு காரணமாக விற்பனை குறைந்தது. விற்பனை செய்யப்பட்ட அளவுகளின் குறைவு காரணமாக, எபிட்டா 3.5% குறைந்து 625  மில்லியன் யூரோ  ஆக இருந்தது. அதேநேரத்தில், சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக குறைந்த செலவு,  எபிட்டா மீது சாதகமான விளைவைக் கொண்டிருந்தது.

2020 நிதியாண்டில் பாலிகார்பனேட்ஸ் பிரிவின் முக்கிய விற்பனை 3.0% குறைந்தன. தொற்றுநோய் பரவலால் முதல் ஆறு மாதங்களில் தேவை  குறைந்து போனது.  அதேநேரத்தில், ஆண்டின் இரண்டாம் பாதியில், தேவையில் வலுவான மீட்சி உருவானது. முந்தைய ஆண்டு விற்கப்பட்ட முக்கிய  விற்பனைகளை விட அதிகரித்தது. முக்கியமாக, விற்பனை விலை குறைவு மற்றும் மொத்த விற்பனையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, விற்பனை 14.1% குறைந்து 3.0 பில்லியன் யூரோ ஆக இருந்தது.  இதற்கு மாறாக, எபிட்டா  3.2% அதிகரித்து 553 மில்லியன் யூரோ  ஆக மேம்பட்டது. இது முதன்மையாக, மூலப்பொருட்களின் விலை குறைவு மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக சாத்தியமாகி இருக்கிறது.

பூச்சுகள், பசைகள், சிறப்பு (Coatings, Adhesives, Specialties) பிரிவின் முக்கிய விற்பனை 2020 நிதியாண்டில் 8.9% குறைந்துள்ளன. 2020 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தேவை குறைந்து வந்ததால் விற்கப்பட்ட முக்கிய அளவுகள் பெரும்பாலும் குறைந்துவிட்டன. ஆண்டின் இறுதிக்குள், தேவை மீண்டும் அதிகரித்து, 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் விற்கப்பட்ட முக்கிய விற்பனை அளவுகள், முந்தைய ஆண்டின் அளவை விட அதிகமாக இருந்தன.

 மொத்த விற்பனையின் சரிவு மற்றும் சராசரி விற்பனை விலை குறைந்தது ஆகியவற்றால் முழு ஆண்டிற்கான விற்பனை 13.9% குறைந்து 2.0 பில்லியன் யூரோ  ஆக இருந்தது. எபிட்டா 27.3% குறைந்து 341 மில்லியன் யூரோ  ஆக இருந்தது. இதற்கு, விற்கப்பட்ட அளவுகளில் குறைவு, குறைந்த லாப வரம்புகள் மற்றும் ஆர்.எஃப்.எம் (RFM) வணிகத்தை திட்டமிட்ட கையகப்படுத்துதலுக்கான செலவுகள் ஆகியவை காரணமாக இருந்தன. இருப்பினும், சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக வருவாயில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கூடுதலாக, முந்தைய ஆண்டு காலப்பகுதியில் ஜப்பானை தளமாகக் கொண்ட டி.ஐ.சி கோவெஸ்ட்ரோ பாலிமர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை படிப்படியாக கையகப்படுத்தியது மூலம் எபிட்டா வருமானம் சாதகமாக  இருந்தது.

 

2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முந்தைய ஆண்டை விட மேம்பாடு (Fourth quarter of 2020 well over prior-year level)

2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் விற்கப்பட்ட முக்கிய அளவுகள் முந்தைய ஆண்டை விட 1.7% உயர்ந்தன. எனவே அதிக விற்பனை விலைகளின் விளைவாக குழுமத்தின் விற்பனை 5.0% அதிகரித்து 3.0 பில்லியன் யூரோ ஆக அதிகரித்துள்ளது 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முந்தைய ஆண்டை விற்பனை எண்ணிக்கையை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் எபிட்டா 637 மில்லியன் யூரோ ஆக உள்ளது. நிகர வருமானம், முந்தைய ஆண்டின் நான்காம் காலாண்டில் 37 மில்லியன் யூரோ ஆக இருந்தது. அது 2020 நான்காம் காலாண்டில் 312 மில்லியன் யூரோ ஆக உயர்ந்தது. எஃப்.ஓ.சி.எஃப் நான்காவது காலாண்டில் 19.4% அதிகரித்து 394 மில்லியன் யூரோ ஆக அதிகரித்துள்ளது