கடன் வழங்கலில் ₹100 கோடியை கடந்து துவாரா இ-டெய்ரி சாதனை
பால் உற்பத்தியில் ஈடுபடும் பெண்களுக்கு
முதல்முறையாக முறைப்படுத்தப்பட்ட நிதி
நிறுவனங்களிலிருந்து கடனுக்கான அணுகுவசதி
சென்னை, இந்தியா, 03 பிப்ரவரி 2026: பால் பண்ணைத் தொழில்துறை மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் வேளாண் நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'துவாரா இ-டெய்ரி', இதுவரை மொத்தத்தில் ₹100 கோடிக்கு மேல் கடன் வழங்கி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதை இன்று பெருமையுடன் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த பால் பண்ணை துறைக்கான ஒரு நிதிவசதி அமைப்பை உருவாக்குவதில் இது
ஒரு மிக முக்கிய முன்னேற்றமாக
கருதப்படுகிறது.
இந்தக் கடனுதவி 700-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்
சேர்ந்த 11,000-க்கும் அதிகமான பெண் பால் உற்பத்தியாளர்களைச்
சென்றடைந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் முதல்முறையாக வங்கி அல்லது நிதி
நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றுள்ளனர். இந்த நிதியுதவி மூலம், விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் எண்ணிக்கையை (சாதாரணமாக 2-3 மாடுகள் என்பதில் இருந்து 3-5 ஆண்டுகளில் 10-20 மாடுகள் வரை) உயர்த்தி, நிலையான வருமானத்தைப் பெறுவது சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர் விளைவாக பால்பண்ணைத்
தொழிலில் ஈடுபடும் பெண்கள் தற்சார்பு பொருளாதார
நிலையை அடைந்து, தொழில்முனைவோர்களாக வளர்ச்சி கண்டிருக்கின்றனர்.
பால் பண்ணைத் தொழில் கிராமப்புறங்களில் மிக முக்கியமான
வாழ்வாதாரமாக இருந்தாலும், சிறு மற்றும் குறு
விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில் நீண்டகாலமாகச் சிக்கல்கள் இருந்து
வருகின்றன. அடமானம் வைக்க நகை அல்லது நிலம் இல்லாமை, சரியான ஆவணங்கள் இல்லாமை மற்றும் கால்நடை மூலம் கிடைக்கும்
வருமானத்தைக் கணக்கிடுவதில் உள்ள சிரமங்கள் போன்றவையே இதற்குக் காரணங்களாகும். பால்பண்ணை விவசாயிகள் எதிர்கொள்ளும் இந்தத் தடைகளையும்,
சிரமங்களையும் நீக்குவதற்காக துவாரா இ-டெய்ரி நிறுவனம் உருவாக்கப்பட்டது. வழக்கமான கடன் கொடுக்கும் தகுதி குறியீடுகளை சார்ந்திராமல்
பால் பண்ணைத் தொழிலின் நடைமுறை எதார்த்தம் மற்றும் அதன்
பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, நவீன நிதி தொழில்நுட்பத்தின்
உதவியுடன் விவசாயிகளுக்கு இந்த நிறுவனம் எளிதான கடன் மதிப்பீடு திட்டங்களை வடிவமைத்திருக்கிறது.
துவாரா இ-டெய்ரியின் இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்கு அடிப்படையாக இருப்பது 'சுரபி' என்ற அதன் சொந்தத் தொழில்நுட்பத் தளமாகும். இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் 'கால்நடை நுண்ணறிவு தளம்’ (Cattle Intelligence Stack)' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பால் பண்ணைக் கடன்கள் மற்றும் காப்பீட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மையும், துல்லியமான மதிப்பீடுகளும் சாத்தியமாகின்றன. வாடிக்கையாளர்களை இணைப்பது முதல், மாடுகளை ஆய்வு செய்வது மற்றும் வீடுகளுக்கே சென்று சரிபார்ப்பது வரை அனைத்தும் 'பிஜிட்டல்' முறையில் எளிமையாக நடைபெறுகிறது.
இது மாடுகளுக்கான ஒரு
பிரத்யேக பயோமெட்ரிக் அடையாளமாகும். மனிதர்களுக்கு ஆதார் அட்டை இருப்பதைப்போல, மாடுகளின் உடல் அடையாளங்களைக் கொண்டு இந்த அடையாள எண் வழங்கப்படுகிறது. பால் ஊற்றியதற்கான ரசீதுகள் போன்ற முறையான
ஆவணங்கள் இல்லாத விவசாயிகளுக்கும், மாட்டின் புகைப்படம், இனம், ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்
திறனைக் கொண்டு அவர்களது வருமான வாய்ப்புகளை இந்தத் தளம் துல்லியமாகக் கணக்கிடுகிறது.
வெறும் காகித ஆவணங்களை மட்டும் நம்பாமல், பால் பண்ணைத் தொழிலின் உண்மையான
பொருளாதார நிலையை ஆராய்ந்து இந்தத் தளம் கடன் முடிவுகளை எடுக்க உதவுகிறது.
இந்த நவீனத் தொழில்நுட்ப அணுகுமுறையின் மூலம், கால்நடைகளை வெறும் விலங்குகளாகப் பார்க்காமல், வருமானம் ஈட்டித் தரும் ஒரு முக்கியப் பொருளாதாரச் சொத்தாக
துவாரா இ-டெய்ரி அங்கீகரிக்கிறது. நிலப் பத்திரங்கள் போன்ற பாரம்பரிய
ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் சிக்கல்கள் இல்லாததால், கடன் வழங்கும் நடைமுறை மிக விரைவாக நடைபெறுகிறது. முறையான
வங்கிச் சேவைகள் சென்றடையாத கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும், மிகவும் பொறுப்பான முறையில் கடன் வழங்கும் முடிவுகளை எடுக்க இது
உதவுகிறது.
இது குறித்து துவாரா இ-டெய்ரியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. பாலாஜி
லட்சுமணன் கூறுகையில்: "கடன் வினியோகத்தில் ₹100 கோடி என்ற அளவைக் கடந்திருப்பது எங்களின் நிறுவன வளர்ச்சியைக்
காட்டுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான பால் பண்ணை
குடும்பங்கள், குறிப்பாக முதன்முறையாகக் கடன்
பெறுபவர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு
ஏற்ற நிதி உதவியை எளிதாகப் பெற உதவியிருப்பதுதான் எங்களின் உண்மையான வெற்றியாகும். நிதி
பகுப்பாய்வைப் பயன்படுத்தி, நீண்டகாலமாக முறை சார்ந்த நிதிவசதி பெறாத
பிரிவினருக்கு நவீன நிதிதொழில்நுட்பத்தின் மூலம் இந்த கடன் வசதியை எமது நிறுவனம்
வழங்கி வருகிறது.”
இணை நிறுவனர்
மற்றும் தலைமை இயக்க அதிகாரி ஜான் வின்சென்ட் கூறுகையில், “களப்பணியாளர்களின் நேரடி
ஈடுபாடு மற்றும் நவீனத் தொழில்நுட்பம் ஆகிய இரண்டையும் இணைப்பதே எங்களது முக்கிய
நோக்கம். ‘சுரபி’ போன்ற தளங்கள் எங்களது களப்பணியாளர்களுக்கு மிகவும் பொறுப்பான மற்றும்
சரியான நிதி முடிவுகளை எடுக்க உதவுகின்றன. பால் விவசாயிகள் பெறும் இந்த கடன் உதவி கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், பால் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளுக்கு ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்யவும் நேரடி ஆதரவை வழங்குகிறது.”
துவாரா இ-டெய்ரி, தனது சேவைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, இன்னும் அதிகமான கிராமங்களுக்குச் சென்று தனது சேவையை
நிலைநிறுத்துவதிலும், களப்பணிகளை வலுப்படுத்துவதிலும்
நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நவீன நிதித் தொழில்நுட்பக் கட்டமைப்பு மூலம், முறையான வங்கி வசதிகள் கிடைக்காத கடைக்கோடி விவசாயிகளுக்கும்
நிலையான முறையில் பால் பண்ணைக் கடன்களைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் நோக்கம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
