தடைகளைத் தாண்டிய திறமைகளை கொண்டாடும் 24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்
2026 – மாற்றத்தை உருவாக்கிய ஊனமுற்ற ஐந்து இந்திய சாதனையாளர்களுக்கு கௌரவம்
Photo Caption- L-R : Mr. Madhan Karky, Lyricist, Lt Gen Arun Ananthanarayan, PVSM, YSM, SM, VSM (Retd), Dr. Vinod Surana, Managing Partner & CEO, Surana & Surana International Attorneys; Mr. CK Ranganathan - Chairman & Managing Director, Cavinkare Pvt Ltd; Ms. Jayshree Raveendran, Founder & Hon. Executive Director, Ability Foundation; Chandra Mouli Dwarapureddy - Winner of CavinKare Ability Mastery Award; Mr. Arivuraja Thangavelu - Winner of CavinKare Ability Mastery Award; CA Sunil Jain - Winner of CavinKare Special Recognition Award; Mr. Shiv Kumar Sharma -Winner of CavinKare Ability Mastery Award; Dr. Jitender Aggarwal - Winner of CavinKare Ability Award of Eminence; Thanya Nathan C - Kerala’s first blind judge; Deepika TC - captain of the World Cup winning blind women’s cricket team and others.
சென்னை, 15 பிப்ரவரி 2026: தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும்
கதைகளை கொண்டாடும் வகையில், கவின்கேர் நிறுவனம் எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன் இணைந்து 24வது
கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026 விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும்
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஊனமுற்ற ஐந்து சிறப்பு நபர்கள் இவ்விழாவில்
கௌரவிக்கப்பட்டனர். இந்த சிறப்பு விழா, உணர்வுகளை மறுபரிசீலனை செய்யச் செய்து,
அர்த்தமுள்ள சமூக மாற்றத்தை உருவாக்கிய நபர்களை முன்னிறுத்தியது.
பல முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து பார்வையற்ற பெண்கள் கிரிக்கெட் உலகக்
கோப்பை வென்ற அணியின் கேப்டன் தீபிகா T.C. மற்றும் கேரளாவின் முதல் பார்வையற்ற
நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள தான்யா நாதன் விழாவில் பங்கேற்று, விருது பெற்றவர்களைப் பாராட்டி,
அனைத்துத் துறைகளிலும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை மீண்டும்
உறுதிப்படுத்தினர்
2023 ஆம் ஆண்டு ‘ச ரி க ம ப’ இசை நிகழ்ச்சியின் வெற்றியாளர் புருஷோத்தமன்
மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய இசைக் கலைஞர் அபிநயா ஷெண்பகராஜ் ஆகியோர் தங்களது
குழுவுடன் வழங்கிய இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. இசை
நிகழ்ச்சியின் போது சைகை மொழி விளக்கமும் வழங்கப்பட்டு, கலை உலகில் முழுமையான
உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
2003 ஆம் ஆண்டு
நிறுவப்பட்ட கவின்கேர் எபிலிட்டி விருதுகள், கடந்த ஆண்டுகளில் நாட்டின் பல
பகுதிகளில் இருந்து சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்புகளை செய்த 100-க்கும்
மேற்பட்ட முன்னுதாரணமான ஊனமுற்றவர்களை அடையாளம் கண்டு கௌரவித்து வருகின்றது.
இரண்டு சிறப்புமிக்க பிரிவுக விகள் விருதுகள் வழங்கப்படுகின்றன. CavinKare Ability
Award for Eminence, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையான தாக்கத்தை
உருவாக்கிய ஒரு நிறுவனத்தை நிறுவிய ஒரு ஊனமுற்ற நபரை கௌரவிக்கும் விருதாகும்.
மற்றும், CavinKare Ability Mastery Awards, தங்களது துறைகளில் சிறப்புத் திறன்,
தனித்துவம் மற்றும் முன்னணித் தலைமையை வெளிப்படுத்திய ஊனமுற்றவர்களை கௌரவிக்கும்
விருதுகளாகும்.
இந்த இரண்டு
பிரிவுகளும் இணைந்து, முன்னோக்கிய
பார்வையுடன் நிறுவனங்களை உருவாக்கிய தலைவர்களையும், தங்களது சாதனைகளின் மூலம்
இந்தியாவில் திறமை மற்றும் சிறப்பைப் பற்றிய பார்வைகளை தொடர்ந்து புதிதாக
வரையறுத்து வரும் ஊனமுற்றவர்களையும் கொண்டாடுகின்றன.
இந்த ஆண்டின் விருது பெற்றவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, சட்டம், தொழில்நுட்பம், கலை மற்றும் குடிமக்கள் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதோடு, சமூகப் பார்வைகளையும் சவால் செய்து, சக்திவாய்ந்த மாற்றத் தூதர்களாக உருவெடுத்துள்ளனர்.அனைத்து சவால்களையும் வென்று சாதித்த இவர்களை, பல துறைகளைச் சேர்ந்த சிறப்பு நிபுணர்களைக் கொண்ட மதிப்புமிக்க நடுவர்குழு தேர்வு செய்தது.
இந்த
ஆண்டின் நடுவர்கள்: லெப்டினன்ட் ஜெனரல் அருண் ஆனந்தநாராயணன், PVSM, YSM, SM, VSM
(ஓய்வு);டாக்டர் வினோத் சுரானா, மேனேஜிங் பார்ட்னர் & CEO, Surana &
Surana International Attorneys; டாக்டர் மரியசீனா ஜான்சன், சான்ஸலர், Sathyabama
Institute of Science and Technology;திரு. மதன் கார்க்கி, பாடலாசிரியர் மற்றும்
திரைக்கதை எழுத்தாளர்; மற்றும் திரு. லட்சுமிநாராயணன் துரைசுவாமி, மேனேஜிங்
டைரக்டர், Sundaram Home Finance Limited.
இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்த கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்
மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சி.கே. ரங்கநாதன் கூறுகையில், “ஊனமுற்றவர்கள்
எவ்வாறு எல்லைகளைத் தாண்டி சிறப்பை மறுவிளக்கம் செய்து, தங்களுக்கென புதிய
மைல்கற்களை உருவாக்குகின்றனர் என்பதை காண்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இந்த
விருதுகள் தனிப்பட்ட சாதனைகளை மட்டும் அல்லாமல், சமூகத்தில் பெரிய மாற்ற அலைகளை
உருவாக்கும் பயணங்களையும் கௌரவிக்கின்றன. உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் இந்த
உரையாடலை மேலும் முன்னெடுக்க இது உதவுகிறது. கவின்கேர் எபிலிட்டி விருதுகள் தைரியம்,
உறுதி மற்றும் அபூர்வமான திறமைகளை கொண்டாடுகிறது. பார்வைகளை சவால் செய்து,
சமூகங்களை புதிய கோணத்தில் சிந்திக்க ஊக்குவிக்கும் கதைகளை வெளிச்சமிட்டு
காட்டுவதில் பெருமை கொள்கிறோம். இம்முயற்சியானது,
பார்வைகளால் ஒருபோதும் சாத்தியக்கூறுகள் மட்டுப்படுத்தப்படாத ஒரு சமுதாயத்தை
உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது; மேலும் அனைவரும் உயரங்களை
நோக்கி முனைந்து, தங்கள் திறமையில் சிறந்து விளங்கி, கற்பனைக்குப் புலப்படாத
உயரங்களை எட்ட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.”
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர்
மற்றும் கௌரவ செயல் இயக்குநர் திருமதி ஜெயஸ்ரீ ரவீந்திரன்
கூறுகையில், “24 ஆண்டுகளாக ஊனமுற்றவர்களின் உண்மையான திறனை உலகிற்கு காட்டும் வாய்ப்பு
கிடைத்தது எங்களுக்கு பெருமை. ஒவ்வொரு ஆண்டும் தடைகளை உடைத்து மாற்றத்தை
உருவாக்கும் நபர்களை கௌரவிப்பதன் மூலம் எங்கள் நோக்கத்தின் தாக்கத்தை நேரடியாக அனுபவிக்கிறோம்.
பரிந்துரை முதல் தேர்வு வரை, விருது பெறுநர்களை தேர்ந்து எடுப்பதில் நடுவர் மன்ற
உறுப்பினர்கள் சந்திக்கும் சவால்களே எங்களிடம் வரும் விண்ணப்பங்களின் உயர்தரத்தை
நிரூபிக்கின்றன. ஒவ்வொரு பரிந்துரையும் தனித்துவமான கதையையும், ஊனமுற்றவர்கள்
துறையின் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
எதிர்காலத்திலும், ஊனமுற்றவர்களை அதிகாரமளிப்பதற்கும் மற்றும்
சேர்ப்பதற்கும் எங்கள் உறுதி தொடரும். மேலும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான பாதையை
மென்மையாக்க, கேட்கப்பட வேண்டிய குரல்களை நாம் தொடர்ந்து பெருக்குவோம்.”
CavinKare Ability Awards 2026 விருது
பெற்றவர்கள்
CavinKare Ability Special Recognition Award:
சுனில் ஜெயின், பெங்களூரு, கர்நாடகா
ASTHA அமைப்பின் founder trustee or நிறுவன ட்ரஸ்டீ மற்றும் Chief Enabler
ஆக செயல்படும் சுனில் ஜெயின், ஊனமுற்றவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பங்கேற்பு, விளையாட்டு
மற்றும் கலை அணுகலை மேம்படுத்தி வருகிறார். Chartered Accountants of India
நிறுவனத்தின் Fellow ஆகவும், இருபதாண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தையும் கொண்டவர்.
போலியோ காரணமான உடல் ஊனத்தால் ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரின் சுய மரியாதை
மற்றும் பங்கேற்பு சார்ந்த பணிக்கு அடித்தளமாக அமைந்தன. 2007 இல் தொடங்கப்பட்ட
ASTHA, இந்திய வீல் சேர டென்னிஸ் டூர் உள்ளிட்ட பல முயற்சிகளை முன்னெடுத்து
வருகிறது. அவரது பணிக்கு கர்மவீர் சக்ரா விருதும் ‘இந்தியா இன்க்ளூஷன் ஃபெல்லோ’
என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளன; மேலும் கல்வி, விளையாட்டு மற்றும் பொது வாழ்வில்
உள்ளடக்கிய சிந்தனையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
CavinKare Ability Award for Eminence:
டாக்டர் ஜிதேந்தர்
அகர்வால், குருகிராம், ஹரியானா
Sarthak Educational Trust அமைப்பின் நிறுவனர் Dr. Jitender Aggarwal
பார்வை இழந்த பிறகு, ஊனமுற்றவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நேரடியாக உணர்ந்தவர்.
கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான தெளிவான பாதைகளை உருவாக்கி,
நிறுவனங்களுடன் இணைந்து உள்ளடக்கிய வேலைவாய்ப்பு முறைகளை உருவாக்கி வருகிறார்.
மாகுலர் டிஜெனரேஷன் காரணமாக தனது பார்வையை இழந்த பிறகு, எவ்வாறு ஊனமுற்றவர்களை
பொதுப் பிரதான வாய்ப்புகளிலிருந்து பல
நேரங்களில் விலக்குகின்றன என்பதை அவர் நேரடியாக உணர்ந்தார். Sarthak அமைப்பின்
மூலம், ஆரம்ப ஆதரவிலிருந்து திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகள் வரை தெளிவான
பாதைகளை உருவாக்க உதவியுள்ளார்; பணி அமர்த்தலை உள்ளடக்கமானதாக மாற்ற நியமனதாரர்களுடன்
நெருக்கமாக பணியாற்றியுள்ளார்; மேலும், பணியிடத்தின் இரு தரப்பினரிடமும்
நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் வலுப்படுத்தியுள்ளார்.
CavinKare Ability Mastery Awards:
அறிவுராஜா தங்கவேலு, காட்டுமன்னார்கோவில், தமிழ்நாடு
அரிவுராஜா தங்கவேலு,
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுபவர்களுக்கு வேலை
வாய்ப்புகளை உருவாக்க பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வரும் ஒரு தொழில்முனைவோர். பாலியோ
காரணமாக ஏற்பட்ட ஊனமுடன் வாழ்ந்து வருகிறார்; இது அணுகல், வேலை மற்றும் சுயநிறைவு
குறித்து அவரின் பார்வையை வடிவமைத்துள்ளது.
MAPe IT Solutions
மூலம், ட்ரோன் சர்வே, மேப்பிங் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் செயல்படும்
தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனத்தை உருவாக்கியதுடன், ஊனமுற்றவர்களுக்கும்
கிராமப்புற இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பில் இணைத்துள்ளார். முன்
அனுபவமின்றி அவரது நிறுவனத்தில் பணியில் இணைந்த பலர் இன்று நடைமுறை திட்டங்கள்,
வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை திறம்பட மேற்கொண்டு
வருகின்றனர். நிலையான வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு மற்றும் பொறுப்புணர்வும்
தன்னம்பிக்கையும் கொண்ட சுயநிறைவு நோக்கி மக்களை முன்னெடுக்கச் செய்வதே அவரது
முக்கிய நோக்கமாக உள்ளது.
சிவ் குமார் சர்மா, சண்டிகர், பஞ்சாப்
சிவ் குமார் ஷர்மா,
சட்ட விழிப்புணர்வு, நாடகம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றின் மூலம் சண்டிகரில்
ஊனமுற்றவர்களின் உரிமைகள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார். மாநில சட்ட சேவை
ஆலோசகராக, ஊனமுற்றவர்களுக்கு சட்டங்கள் மற்றும் அரசின் ஆதரவு திட்டங்களை விளக்கும்
நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அவர் நாடகமும் திரைப்படத்திலும் செயல்பட்டு வருவதுடன்,
இந்தியாவின் முதல் பல்வேறு உள்ளடக்கத்தன்மையைக் கொண்ட இந்தி முழுநீள திரைப்படமான “Rabb
Di Awaaz”-இல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிறப்பு முதல்
பார்வையற்றவரான சிவ், தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் மக்களுடனும் அவர்களின்
பிரச்சனைகளுடன் எளிதாக இணைகிறார்.
அவர் Rotaract Positive Ability Club-இன் இணை நிறுவுநராக இருந்து, “Dinner
in the Dark” போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்; இந்நிகழ்ச்சிகள்
பொதுமக்களுக்கு பார்வையின்மையைப் புரிந்துகொள்ள உதவுவதுடன், பார்வையற்ற
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளுக்கும் ஆதரவு வழங்குகின்றன.
சந்திர மௌலி த்வாரபுரெட்டி, நரசிப்பட்னம் , ஆந்திர பிரதேஷ்
சந்திர மௌலி
த்வாரபுரெட்டி, தனது BTech படிப்பை முடித்திருந்த நிலையில், 21 வயதில் ஏற்பட்ட
மின்சார விபத்தால் இரு கைகளும் கால்களும் இழக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டார்.
அதன் பின்னர் வந்த மாதங்கள் பொறுமை, தைரியம் மற்றும் நிலைத்தன்மையை கோரின. ஆறு
மாதங்களுக்குள் அவர் செயற்கை உறுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கி, கல்வி, வேலை
மற்றும் சுயநிறைவு வாழ்க்கைக்கான புதிய வழிகளை கண்டுபிடித்தார்.
அவர் மீண்டும் கவனத்துடன்
கல்விக்குத் திரும்பி, சட்டப் படிப்பை முடித்தார்; CAT தேர்வில் வெற்றி பெற்று IIM
அகமதாபாத்தில் கல்வி தொடர்ந்தார். அமேசானில் பணியாற்றிய அவர் தற்போது
Accenture-இல் பணியாற்றி வருகிறார். தனது தொழிலுடன் இணைந்து, அவர் ஊனமுற்ற
மாணவர்களும் தொழில்முனைவோர்களும் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தன்னை
முன்னேற்ற உதவிய அம்சங்களை — தெளிவான சிந்தனை, தொடர்ச்சியான முயற்சி, மற்றும்
செயலின் மூலம் தன் வாழ்க்கையை தானே வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கை —
அவர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
About
CavinKare: CavinKare
is a diversified FMCG major with business interest in personal care,
professional care, dairy, snacks, foods, beverages & salons. The brand
portfolio consists of Shampoos (CHIK, Meera, Karthika, and Nyle), Hair Wash
Powders (Meera &Karthika), Coconut Oil (Meera), Skin Creams (Fairever &
Spinz), Deodorant; Talc (Spinz), Pickles (Ruchi & Chinni's) and Snacks
(Garden), Hair colors (Indica), Retail Salon Products (Raaga Professional),
Beverages (Maa), Dairy (Cavin's), Beauty Salons (Green Trends & Limelite),
and D2C Personal Care products (Buds and Berries). Most of the brands are clear
winners in their respective product categories. A dedicated R&D center
equipped with the latest equipment and technologies constantly supports the
divisions in their endeavour. CavinKare has achieved significant milestones and
a competitive edge with a sound understanding of mass marketing dynamics and
has established a firm foothold in the national market. CavinKare's success is
based on it being firmly grounded to its corporate mission 'We shall grow
significantly better than the industry by fostering innovation and building
preferred brands, through passionate and delighted employees'.
About Ability Foundation: Established in 1995, with a
philosophy much ahead of its time, Ability Foundation, headquartered in
Chennai, has established itself as a national cross-disability umbrella
organisation that has incessantly worked across the country towards an
equitable society for every citizen with disability. By emphasizing the
potential of people with disabilities and empowering them through trailblazing
initiatives, Ability Foundation moves steadfastly to bridge the gap between
people with and without disabilities. The Foundation engages in a range of
activities from publishing, employment, media, and culture, to implementation
of policy, legislation, and human rights, to realize the unwavering commitment
towards an equitable civil society. Ability Foundation operates under the tenet
that barriers created by societal attitudes rather than actual disabilities are
what truly hinder people. Given the right opportunities at the right time, so
much more is possible - an open mind is all it takes.