சாமானியர்களும் செல்வந்தர் ஆகலாம்..! நூல் வெளியீட்டு விழா…!
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ப்ட்டிமன்ற பேச்சாளர், ஊக்கப் பேச்சாளர் மற்றும் கல்வியாளர் என பன்முகங்களுடன் இயங்கி வரும் ஈரோடு மகேஷ் அவர்கள், பிரைட்விஷன் செல்வ மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பாலாஜி நந்தகோபால் எழுதிய சாமானியர்களும் செல்வந்தர் ஆகலாம் - பணத்தை பெருக்கும் மந்திரங்கள்..! என்கிற நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். இதற்கான விழா அண்மையில் சென்னையில் நடந்தது. .
| நூலாசிரியரின் துணைவி புஷ்பபாரதி, ஈரோடு மகேஷ், நூலாசிரியர் பாலாஜி நந்தகோபால் |
இந்த நூலில்…
தனிநபர் நிதி மேலாண்மை நிதி விழிப்புணர்வின் அவசியம்..!
உங்கள் நிதி நிலையை அறிந்து கொள்வோம்
குடும்ப பட்ஜெட்: வருமானம், சேமிப்பு, செலவு..!
கடன் மேலாண்மை நல்ல கடன் Vs கெட்ட கடன் வேறுபாடு புரிந்து கொள்ளுங்கள்
கிரெடிட் கார்டு நண்பனா? பகைவனா?
கிரெடிட் ஸ்கோர் & நிதி நம்பகத் தன்மை
கடன் சுமையிலிருந்து வெளியேறும் வழிமுறைகள்..!
அவசர கால நிதி நிதிப் பாதுகாப்பின் முதல் மற்றும் அவசியமான படி..!
அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து காப்பீடுகள்..!
சேமிப்பு, முதலீடு வேறுபாடு: எது அவசியம்?
முதலீடு: ரிஸ்க் & வருமானம்:
சொத்து ஒதுக்கீடு உங்கள் முதலீட்டின் அடித்தளம்..!
கூட்டு வளர்ச்சி பணம், பணம் உருவாக்கும் மாயம்..!
வங்கி சேமிப்பு கணக்கு & நிலையான வைப்பு..!
.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆரம்ப முதலீட்டாளர்களுக்கான முழுமையான
வழிகாட்டி..!
மியூச்சுவல் ஃபண்ட் SIP முக்கிய அம்சங்கள்..!
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் உண்மையும் தவறான நம்பிக்கைகளும்..!
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்ய
வேண்டும்?
தங்க முதலீடு எப்போது? எவ்வாறு?
வெள்ளி முதலீடு எப்போது? எவ்வாறு?
குறுகிய,நடுத்தர, நீண்ட காலம்: தெளிவான நிதி இலக்குகள் செல்வ
உருவாக்கத்தின் முதல் படி
குழந்தைகள் உயர்கல்வி செலவு முதலீட்டுத் திட்டம்..!
குழந்தைகள் கல்யாணச் செலவு முதலீட்டுத் திட்டம்
ஓய்வுக் கால நிதி திட்டமிடல்
ஆகிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
நூலாசிரியர் பாலாஜி நந்தகோபால் பற்றி..!
திரு. பாலாஜி நந்தகோபால் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிச் சேவை அளித்து
வருகிறார். இவரின் மூலம் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செல்வ வளம்
பெற்றிருக்கிறார்கள். மேலும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு நிதி ஆலோசனை வழங்கி
வருகிறார்.
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வருமான வரித் திட்டமிடல், முதலீட்டு
மேலாண்மை, மியூச்சுவல் ஃபண்ட், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ், கடன் சேவை,
ஃபிக்ஸட் டெபாசிட் என அனைத்து வகை நிதிச் சேவைகளையும் இவரின் பிரைட்விஷன் நிறுவனம்
வழங்கி வருகிறது.
விலை .120
பக்கங்கள் 112
வெளியீடு: புஷ்பபாரதி பதிப்பகம்
எண் 78, 19வது மேற்கு
குறுக்கு தெரு,
மகாகவி பாரதி நகர்,
வியாசர்பாடி -600 039
அலைபேசி : 90033
87104, 7904464373
மின்னஞ்சல்: buysiponline@gmail.com