முதலீட்டு தொகை 5,000 அமெரிக்க டாலர்: சுந்தரம் இந்தியா மிட்கே GIFT திட்டம்..!
பாலாஜி நந்தகோபால், நிறுவனர், www.brightvision.co.in
இந்தியாவின்
நம்பகமான மற்றும் நீண்ட கால அனுபவம் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான சுந்தரம்
அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, உலக முதலீட்டாளர்களுக்காக புதிய வெளிநாட்டு நிதித்
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுந்தரம் இந்தியா மிட்கேப் – GIFT
சுந்தரம்
இந்தியா மிட்கேப் – GIFT (Sundaram India Mid Cap – GIFT) எனப்படும் இந்த திட்டம்,
அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
திட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள கிஃப்ட் சிட்டியின் சர்வதேச நிதிச் சேவை
மையத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்பு மிகுந்த நடுத்தர அளவிலான நிறுவனங்களில் எளிதாக
முதலீடு செய்யலாம்.
இந்த
திட்டம் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யாது. இது ஒரு “பீடர்” (Feeder) வகை
திட்டமாகும். அதாவது, தன்னுடைய பெரும்பாலான முதலீட்டை சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் (Sundaram Mid Cap Fund) இந்திய மியூச்சுவல்
ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும். 23 ஆண்டுகளுக்கும் மேலான செயல்திறன் அனுபவம்
கொண்ட இந்த அடிப்படை திட்டத்தின் வளர்ச்சி பயன்களை உலக முதலீட்டாளர்களுக்கு கொண்டு
சேர்ப்பதே இதன் நோக்கம்.
முதலீட்டு நோக்கம்;
இந்த ஃபண்டின்
முதலீட்டு நோக்கம், நீண்ட காலத்தில் மூலதன உயர்வை பெறுவதாகும். தேவையான அளவு
பணத்தை பணமாக அல்லது குறுகிய கால திட்டமாக வைத்திருக்கவும் அனுமதி உள்ளது. அனைத்து
செயல்பாடுகளும் சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு
நடைபெறும்.
இந்த திட்டத்தின் அடிப்படை முதலீட்டு தொகுப்பு பல முக்கிய
உள்நாட்டு வளர்ச்சி துறைகளில் பரவலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொழிற்துறை
பொருட்கள், வங்கிகள், நிதி சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள்
போன்ற துறைகள் இதில் அடங்கும். இந்தியாவின் உற்பத்தி, கட்டமைப்பு மற்றும் நுகர்வு
வளர்ச்சியை பிரதிபலிக்கும் நிறுவனங்களே இங்கு தேர்வு செய்யப்படுகின்றன.
திட்டத்தின் ஒரு யூனிட்டின் ஆரம்ப விலை 10 அமெரிக்க டாலர்.
குறைந்தபட்ச முதலீட்டு தொகை 5,000 அமெரிக்க டாலர். கூடுதல் முதலீடு செய்ய
விரும்பினால் குறைந்தது 1,000 அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும். இந்த
திட்டம் 16 பிப்ரவரி 2026 முதல் சந்தா பெறத் தொடங்குகிறது.
இந்த திட்டத்தை திரு. சௌரப் கபாடியா நிர்வகிக்கிறார்.
யார் முதலீடு செய்யலாம்?
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டு
குடிமக்கள், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ
முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுடையவர்கள்.
கிஃப்ட் சிட்டி அமைப்பின் மூலம் முதலீடு செய்வதால் சர்வதேச
தரநிலைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு, சில வரிச்சலுகைகள் மற்றும்
எளிய வெளிநாட்டு பரிவர்த்தனை வசதி போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. அமெரிக்க டாலர்
அடிப்படையிலான முதலீடு என்பதால் நாணய மாற்றச் சிக்கல்கள் குறைவாக இருக்கும்.
ஆனால் நடுத்தர அளவிலான பங்குகள் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு
உட்பட்டவை என்பதால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் முன் முதலீட்டாளர்கள்
தங்களின் ரிஸ்க் எடுக்கும் சக்தியை மதிப்பீடு செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
பாலாஜி நந்தகோபால், நிறுவனர், www.brightvision.co.in
கடந்த 20 ஆண்டுகளுக்கும்
மேலாக நிதிச் சேவை அளித்து வரும் செல்வ மேலாண்மை நிறுவனம் பிரைட்விஷன்
(Brightvision) ஆகும். இதன் நிறுவனர் பாலாஜி நந்தகோபால்
ஆவார்.
நிதி
மற்றும் முதலீட்டு ஆலோசனை, கணக்கியல் மற்றும் வரி சேவைகள் உள்ளிட்ட உயர்தர தொழில்முறை
சேவைகளை வழங்கி, குழந்தைகள் கல்வி மற்றும் ஓய்வு கால திட்டமிடலில் வாடிக்கையாளர்களுக்கு
வழிகாட்டி வருகிறார்.
மியூச்சுவல்
ஃபண்ட், ஆயுள் காப்பீடு,பொது காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வரித் திட்டமிடல், முதலீட்டு
மேலாண்மை, பி.எம்.எஸ். (போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை), குழுக் காப்பீடு, நிறுவனங்களுக்கு
உரிய சேவைகள் (Corporate Offering), கடன் சேவைகள் நிலையான வைப்பு (Fixed Deposit) உள்ளிட்ட
சேவைகளை பிரைட்விஷன் வழங்கி வருகிறது.
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் பாலாஜி நந்தகோபால் எழுதிய கட்டுரைகளைப் படிக்க https://bit.ly/4qTxYGB
- 91 9003387104
- 91 7904464373
- Contactus@brightvision.co.in /
balaji@brightvision.co.in /
brightvisioninvestmentservice@gmail.com
- Mutual Fund, Life Insurance, General Insurance
- Health Insurance, Tax Planning,Investment Management
- PMS Service, Group Insurance
- Corporate Offering,Loan,Fixed Deposit
·
Disclaimer:
·
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.