500-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 80-க்கும்
மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கும் ‘பேர்ப்ரோ 2026’ கண்காட்சி
~ பிப்ரவரி 20 முதல் 3 நாட்கள் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை
வர்த்தக மையத்தில்
‘பேர்ப்ரோ 2026’ கிரெடாய்
சென்னை நடத்துகிறது ~
சென்னை,
பிப். 16- இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின்
கூட்டமைப்பான கிரெடாய் சென்னை, அதன் 18-வது பதிப்பான தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும்
நம்பிக்கைக்குரிய ரியல் எஸ்டேட் கண்காட்சியான 'பேர்ப்ரோ 2026' பிப்ரவரி 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தின் புதிய
கட்டிடத்தில் நடத்த உள்ளது.
இந்த ஆண்டின் கண்காட்சியை முன்பை விட மிகப் பிரம்மாண்டமாக நடத்த கிரெடாய் சென்னை திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள
வீடுகள்,
வணிக வளாகங்கள் மற்றும் வீட்டு மனைகள் என அனைத்தையும் ஒரே
இடத்தில் பார்வையிட,
வீடு வாங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த 'பேர்ப்ரோ 2026' கண்காட்சியின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இந்த
நிகழ்ச்சிக்கு மேலும் கூடுதல் சிறப்பைச் சேர்த்துள்ளது.
இக்கண்காட்சியில் கிரெடாய் சென்னையைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மூன்று நாட்கள்
நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 50,000-க்கும் மேற்பட்ட
பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15 தொழில்முறை கூட்டாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா இந்த கண்காட்சியின் டைட்டில் ஸ்பான்சராக மற்றும் பிரத்யேக வங்கி கூட்டாளராகச் செயல்பட்டு, வீட்டுக் கடன் வசதிகள் மற்றும் உடனடி உதவிகளை வழங்க உள்ளது. மருத்துவப்
கூட்டாளராக அப்பல்லோ மருத்துவமனை இணைந்து, நிகழ்ச்சி நடைபெறும் 3
நாட்களும் அவசர கால மருத்துவ உதவிகளை அளிக்க இருக்கிறது.
இது குறித்து கிரெடாய் சென்னைத் தலைவர் முகமது அலி கூறுகையில், "80-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன், பேர்ப்ரோ தொடர்ந்து
சென்னையின் மிகவும் நம்பகமான சொத்து கண்காட்சியாகத் திகழ்கிறது. பல ஆண்டுகளாக, இது ஒரு கண்காட்சியாக மட்டும் இல்லாமல், சொத்து வாங்குவதில்
நம்பகத்தன்மை,
வெளிப்படைத்தன்மை மற்றும் வாய்ப்புகளுக்கான ஒரு முக்கிய
அடையாளமாக மாறியுள்ளது என்று கூறினார்.
கண்காட்சி ஆலோசகரும், கிரெடாய் சென்னையின் முன்னாள் தலைவருமான எஸ். சிவகுருநாதன் பேசுகையில், "சென்னையில் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. உள்கட்டமைப்பு
வளர்ச்சியும் பல்வேறு பிரிவுகளில் உள்ள தேவையும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
இந்த கண்காட்சியில் சிறந்த அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள்,
மனைகள் மற்றும் வணிக இடங்கள் என அனைத்தும் இடம்பெறுவதால், முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் நம்பிக்கையுடனும், தெளிவுடனும் சரியான முடிவை எடுக்க முடியும்," என்று தெரிவித்தார்.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கே.
மோதிஷ் குமார் கூறுகையில், "மக்களின் வளர்ந்து வரும்
விருப்பங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் புதிய உத்வேகம் ஆகியவற்றால், பேர்ப்ரோ 2026 பார்வையாளர்களின் வருகையிலும், வணிகத்திலும் புதிய
சாதனைகளைப் படைக்கும். ஏராளமான திட்டங்கள், சிறப்புச் சலுகைகள்
மற்றும் ஒரே வங்கி கூட்டாளராக எஸ்பிஐ உள்ளதால், வீடு வாங்க விரும்பும்
அனைவருக்கும் இது ஒரு சிறந்த இடமாக இருக்கும்," என்று குறிப்பிட்டார்.
முன்னணி கட்டுமான
நிறுவனங்கள்,
வங்கிகள் மற்றும் தொழில் கூட்டாளர்கள் அனைவரும் இருப்பதால், பார்வையாளர்கள் சிறந்த சொத்து சலுகைகள் மற்றும் நிதியுதவி விருப்பங்களை ஒரே
இடத்தில் பெற்றுப் பயனடையலாம்.