நிதி முதலீடு : RBI

Showing posts with label RBI. Show all posts
Showing posts with label RBI. Show all posts

Friday, May 22, 2020

2020, ஆகஸ்ட் 31 வரை  கடன்  இ.எம்.ஐ மேலும் 3 மாதம்  நீடிப்பு...  சக்திகந்த தாஸ் அறிவிப்பு!

2020, ஆகஸ்ட் 31 வரை கடன் இ.எம்.ஐ மேலும் 3 மாதம் நீடிப்பு... சக்திகந்த தாஸ் அறிவிப்பு!


2020, ஆகஸ்ட் 31 வரை  கடன்  இ.எம்.ஐ மேலும் 3 மாதம்  நீடிப்பு... 

சக்திகந்த தாஸ் அறிவிப்பு!ரெப்போ, ரிசர்வ் ரெப்போ 0.40% குறைப்பு ஆர்.பி.ஐ அதிரடி

ரெப்போ, ரிசர்வ் ரெப்போ 0.40% குறைப்பு ஆர்.பி.ஐ அதிரடி

ரெப்போ, ரிசர்வ் ரெப்போ 0.40% குறைப்பு ஆர்.பி.ஐ அதிரடி

குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்

ரெப்போ ரேட் 4.04 % லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது

வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடனுக்கான வட்டி குறையும். கூடவே டெபாசிட்களுக்கான வட்டியும் குறையும். 

Wednesday, August 7, 2019

ரெப்போ விகிதம் 0.35% குறைப்பு- ஆர்.பி.ஐ. நடவடிக்கை

ரெப்போ விகிதம் 0.35% குறைப்பு- ஆர்.பி.ஐ. நடவடிக்கை

ரெப்போ விகிதம் 0.35% குறைப்பு
ஆர்.பி.ஐ. நடவடிக்கை
ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகந்த தாஸ் 

2019 டிசம்பர் முதல் NEFT பணப் பரிமாற்றம் 24 மணி நேரமும் நடக்கும் என ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகந்த தாஸ் தெரிவித்தார்.

விரிவாக படிக்க


Wednesday, February 7, 2018

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது. ..!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது. ..!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்பிஐ), பிப்ரவரி 7, 2018  நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை. ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது.

கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் (சிபிஐ) 5.21% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் மிக அதிகம் என்கிற நிலையில்,  வட்டி விகித அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பட்டியலிடப்பட்ட  பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் மீது நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% (ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு)  விதிப்பு மற்றும் சர்வதேச பிரச்னையால் சந்தை  இறக்கத்தில் ( கரெக்‌ஷன்ல்) இருப்பதால், வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை.ஆர்பிஐ  நிதிக் கொள்கை  முடிவு 

Sunday, October 8, 2017

Wednesday, October 4, 2017

ரெப்போ விகிதம் வெர்சஸ் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம் வெர்சஸ் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம் வெர்சஸ் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்கள் ; சிறு விளக்கம்

ரெப்போ விகிதம்

வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து (ஆர்பிஐ) குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம், ரெப்போ விகிதம் (Repo Rate) எனப்படும்.

 இது 2011 ஜூலையில் 8 சதவிகிதமாக இருந்தது.  தற்போது 2017 அக்டோபரில் 6 சதவிகிதமாக இருக்கிறது.

ரெப்போ விகிதம் அதிகமாக இருந்தால் வங்கிகளின் வட்டி செலவு அதிகரிக்கும். இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டியை வங்கிகள் மேலும் உயர்த்தும்.

ரெப்போ விகிதம்,  குறைவாக  இருந்தால் வங்கிகளின் வட்டி செலவு குறையும். இதனை அடுத்து  வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க தொடங்கும்.

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 

பாரத ரிசர்வ் வங்கி (எஸ்.பி.ஐ), வங்கிகளிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனுக்கான கடனிற்கான வட்டி விகிதம், ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படுகிறது.

 இது 2011 ஜூலையில் 7 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2017 அக்டோபரில்  5.75 சதவிகிதமாக இருக்கிறது.

 இதனால், வங்கிகள் அவற்றின் உபரி நிதியை ஆர்.பி.ஐ - ல் அதிக அளவில் இருப்பு வைக்கும். எனவே, பணப் புழக்கம் குறைய வாய்ப்புள்ளது.ரொக்க இருப்பு விகிதம்  

வங்கிகள் அவற்றால் திரட்டப்படும் டெபாசிட்டுகளில் குறிப்பிட்ட சதவிகித்தை பாரத ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இது ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்) எனப்படும்.

2011 ஜூலையில் ரொக்க இருப்பு விகிதம் 6 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2017 அக்டோபரில்  4 சதவிகிதமாக இருக்கிறது.

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் போது ரொக்க இருப்பு விகிதத்தை ஆர்பிஐ அதிகரிக்கும்.   பணவீக்கம் குறைவாக இருக்கும் போது ரொக்க இருப்பு விகிதத்தை ஆர்பிஐ குறைக்கும். 

https://www.rbi.org.in/

arrow_upward