'உங்கள் பணம், உங்கள் உரிமை' இயக்கத்தில் சேருங்கள்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
நாடு முழுவதும் வங்கி டெபாசிட்டுகள், காப்பீட்டு தொகை, லாப ஈவுத்தொகை, பங்குகள், பரஸ்பர நிதி, ஓய்வூதியம் என உரிமை கோரப்படாத பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது. அவற்றை உரிய உரிமையாளர்களிடம் சேர்ப்பதற்காக, 'உங்கள் பணம், உங்கள் உரிமை' என்ற இயக்கத்தை கடந்த அக்டோபர் 4-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது.
இந்நிலையில், இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய வங்கிகளில் நமது மக்களுக்கு சொந்தமான, உரிமை கோரப்படாத ரூ.78 ஆயிரம் கோடி இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.14 ஆயிரம் கோடி, உரிமை கோரப்படாமல் இருக்கிறது. பரஸ்பர நிதி நிறுவனங்களில் ரூ.3 ஆயிரம் கோடி யும், ரூ.9 ஆயிரம் கோடி மதிப்புள்ள லாப ஈவுத்தொகையும் உரிமை கோரப்படாமல் இருக்கின்றன.
'உங்கள் பணம், உங்கள் உரிமை' இயக்கத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் 477 மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட் டன. இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி, உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த இயக்கத்தை வலுப்படுத்த விரும்புகிறோம். ஆகவே, இந்த இயக்கத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்