அன்னிய செலாவணி மோசடி வழக்கு:
அனில் அம்பானி நிறுவனத்தின் 13 வங்கிக்கணக்குகள் முடக்கம்
அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுடெல்லி, டிச.11-
அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்-இன்ப்ரா நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுமான திட்டங்களுக்கான பொது நிதியை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப் பியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நஞ்சாலை ஆணைய
மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்குதுணை ஒப்பந்தம் வழங்குவதாககூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆர்-இன்ப்ரா நிறுவனத் துக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த கணக்குகளில் உள்ள ரூ.54.82 கோடியும் முடக் கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கடந்த மாதம் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.