சென்னையில் ‘கிரெடாய் பேர்ப்ரோ 2026’ கண்காட்சி: துணை
முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
3 நாள் கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட
திட்டங்களுடன் 80க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்பு
சென்னை, பிப். 20- 2026: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் புதிய கட்டிடத்தில்
கிரெடாய் சென்னை அமைப்பு சார்பில் நடைபெறும், மிகப் பெரிய ரியல்
எஸ்டேட் கண்காட்சியான 'பேர்ப்ரோ 2026'-ன் 18-வது பதிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் கிரெடாய்
உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த
கண்காட்சி,
22-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு கண்காட்சி மிகவும்
பிரமாண்டமாக நடைபெறுகிறது. வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும்
வீட்டு மனைகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் மக்கள் பார்வையிட இது ஒரு சிறந்த
வாய்ப்பாக அமைவதோடு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த 'பேர்ப்ரோ 2026'
கண்காட்சியின் விளம்பரத் தூதராக உள்ளார்.
இதில் 80க்கும் மேற்பட்ட முன்னணி
கட்டுமான நிறுவனங்கள் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை
காட்சிப்படுத்துகின்றனர். இங்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.15 கோடி வரையிலான விலையில்
அபார்ட்மெண்ட்கள்,
வீட்டு மனைகள், வில்லாக்கள் மற்றும் வணிக
வளாகங்கள் என மொத்தம் 52,586 சொத்துக்கள் 57.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் விற்பனைக்கு உள்ளன. இந்த 3
நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15 தொழில் நிறுவனங்களும்
இதில் பங்கேற்கின்றன.
கண்காட்சியின் முதன்மை ஸ்பான்சரான
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,
இந்த மூன்று நாட்களுக்கு சிறப்பு வட்டி விகிதத்தில் வீட்டுக்
கடன்களை வழங்கி,
சொத்து வாங்குவதை மேலும் எளிதாக்க உள்ளது. இக்கண்காட்சி
நடைபெறும் 3 நாளும் அவசர சிகிச்சை மற்றும் சுகாதார உதவிகளை அப்போலோ மருத்துவமனை
வழங்குகிறது.
கிரெடாய் சென்னை தலைவர்
முகமது அலி கண்காட்சி குறித்து கூறுகையில், இந்தக் கண்காட்சியில் 80
முன்னணி கட்டுமான நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் 52,000க்கும் மேற்பட்ட வீடுகள்/மனைகளை காட்சிப்படுத்த உள்ளன. மக்கள் தங்கள்
பட்ஜெட்டுக்கு ஏற்ப வீடுகளைத் தேர்ந்தெடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இந்த 3 நாட்களில் சுமார் 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என்று
எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
கண்காட்சி ஆலோசகரும், கிரெடாய் சென்னை
முன்னாள் தலைவருமான எஸ். சிவகுருநாதன் கூறுகையில், சென்னையில் உள்கட்டமைப்பு
வளர்ச்சி மற்றும் நகரத்தின் விரிவாக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி
கண்டு வருகிறது. மக்கள் பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, சரியான விலையைத் தெரிந்துகொண்டு வெளிப்படையான முறையில் வீடுகளை வாங்க இந்தக்
கண்காட்சி உதவும் என்று தெரிவித்தார்.
கண்காட்சி
ஒருங்கிணைப்பாளர் மோதிஷ் குமார் கூறுகையில், 80க்கும் மேற்பட்ட
கட்டுமான நிறுவனங்கள்,
15 பங்குதாரர்கள் மற்றும் எஸ்பிஐ வங்கியின் சிறப்பு
வீட்டுக் கடன் சலுகைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. இந்த 3 நாட்களில்
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று நாங்கள்
எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
முன்னணி கட்டுமான நிறுவனங்கள் மற்றும்
வங்கிகள் ஒரே இடத்தில் இருப்பதால், மக்கள் சிறப்பு
சலுகைகளுடன் தங்களுக்குப் பிடித்த வீட்டை எளிதாக வாங்க முடியும்.