காப்பீடு மொத்த
பிரீமியத்தில் 70% பாலிசிதாரர்களுக்கு இழப்பீடு..! Insurance
ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன்,
தனிநபர் நிதியியல்
நிபுணர், www.ducatz.in
இந்திய
காப்பீட்டு துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காப்பீடு மீதான மக்களின் நம்பிக்கை
தொடர்ந்து அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகின்றன. குறிப்பாக, 2024–25
நிதியாண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் பெற்ற மொத்த பிரீமியத்தில் 70% அளவிற்கு
பாலிசிதாரர்களுக்கு கிளைம் தொகையாக வழங்கியுள்ளன என்பது முக்கியமான தகவலாகும்.
இந்த தகவல்கள் அனைத்தும் இந்தியாவின் காப்பீட்டு துறையை கட்டுப்படுத்தும் அமைப்பான
இந்திய காப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (Insurance
Regulatory and Development Authority of India- IRDAI) வெளியிட்ட
தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளன.
இந்திய காப்பீட்டு துறை –
2024–25 ஒரு பார்வை
2024–25
நிதியாண்டில் இந்திய காப்பீட்டு துறை மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டில் மொத்தமாக சுமார் 41.84 கோடி பாலிசிகள்
விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது இந்தியர்களின் நிதி பாதுகாப்பு குறித்த
விழிப்புணர்வு அதிகரித்ததை காட்டுகிறது.
இந்த
ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் மொத்தமாக ₹11.93 லட்சம் கோடி அளவிற்கு பிரீமியம்
வசூலித்துள்ளன. அதில் இருந்து ₹8.36 லட்சம் கோடி பாலிசிதாரர்களுக்கு
கிளைம் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதன்
மூலம் காப்பீடு என்பது வெறும் முதலீட்டு திட்டம் மட்டுமல்லாமல், ஒரு நிதி
பாதுகாப்பு அமைப்பு என்ற உண்மை மீண்டும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
FY 2025 – முக்கிய புள்ளிவிவரங்கள்
|
விவரம் |
தொகை
/ எண்ணிக்கை |
|
மொத்த பாலிசிகள் |
41.84 கோடி |
|
மொத்த பிரீமியம் வசூல் |
₹11,93,444 கோடி |
|
மொத்த கிளைம் தொகை |
₹8,35,980 கோடி |
|
கிளைம் செலுத்திய சதவீதம் |
70% |
|
மொத்த AUM (Assets Under Management) |
₹74,43,516 கோடி |
FY
2024 vs FY 2025 – கிளைம் செலுத்தல்
|
நிதியாண்டு |
மொத்த
பிரீமியம் |
கிளைம்
செலுத்திய சதவீதம் |
|
FY 2024 |
- |
68% |
|
FY 2025 |
₹11.93 லட்சம் கோடி |
70% |
இந்தத் தகவல் காப்பீட்டு துறையில் கிளைம் தீர்வு
திறன் மேம்பட்டு வருகிறது என்பதை காட்டுகிறது.
காப்பீட்டு வகைகளின் அடிப்படையில்
கிளைம் செலுத்தல்:
2024–25
நிதியாண்டில் ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகிய
துறைகளின் கிளைம் செலுத்தல் சதவீதத்தில் வேறுபாடு காணப்படுகிறது.
|
காப்பீட்டு
வகை |
கிளைம்
செலுத்திய சதவீதம் |
|
ஆயுள் காப்பீடு (Life Insurance) |
71% |
|
பொது காப்பீடு (General Insurance) |
59% |
|
மருத்துவ காப்பீடு (Health Insurance) |
77% |
இதில் மருத்துவ காப்பீட்டில் அதிக அளவு கிளைம்
செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பீட்டு
துறையின் சொத்து நிர்வாகம் (AUM)
காப்பீட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு
2025-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
|
துறை |
AUM |
|
வாழ்க்கை காப்பீடு |
₹67.79 லட்சம் கோடி |
|
பொது காப்பீடு |
₹6.24 லட்சம் கோடி |
|
மருத்துவ காப்பீடு |
₹41,150 கோடி |
|
மொத்தம் |
₹74.45
லட்சம் கோடி |
2024ஆம் ஆண்டில் இது ₹67.58 லட்சம் கோடி இருந்த நிலையில்,
2025ஆம் ஆண்டில் சுமார் 10% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிளைம் தொகையில் என்னென்ன அடங்கும்?
காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய கிளைம் தொகையில் பின்வரும்
வகைகள் அடங்குகின்றன:
·
இறப்பு
இழப்பீடு கிளைம் (Death Claim)
·
பாலிசி
முதிர்வு தொகை (Maturity Claim)
·
மருத்துவ
காப்பீட்டில் Cashless கிளைம்
·
Reimbursement
கிளைம்
பாலிசிதாரர்களுக்கு இது என்ன செய்தி தருகிறது?
இந்தப்
புள்ளிவிவரங்கள் சில முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
1
காப்பீட்டு
துறையின் நம்பகத்தன்மை
உயர்ந்து வருகிறது
2 காப்பீடு மீது மக்களின் பங்கேற்பு
அதிகரித்து வருகிறது
3 மருத்துவ காப்பீட்டின் அவசியம் மேலும் அதிகரித்துள்ளது
4 காப்பீட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் நிதி
சொத்துகளை நிர்வகிக்கின்றன
2024–25
நிதியாண்டின் தரவுகள் இந்திய காப்பீட்டு துறையின் வலிமையை தெளிவாக காட்டுகின்றன.
மொத்தமாக வசூலிக்கப்பட்ட பிரீமியத்தில் 70% அளவிற்கு கிளைம் தொகை வழங்கப்பட்டிருப்பது,
காப்பீட்டு துறை பாலிசிதாரர்களின் நலனை பாதுகாக்கும் ஒரு முக்கிய நிதி அமைப்பாக
செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும், அதிகரித்து வரும் சொத்து நிர்வாகம் (AUM), அதிகமான
பாலிசி விற்பனை, மற்றும் உயர்ந்த கிளைம் செலுத்தல் ஆகியவை அனைத்தும் சேர்ந்து காப்பீடு
மீது மக்களிடம் நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதை
வெளிப்படுத்துகின்றன.
ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன்,
தனிநபர் நிதியியல்
நிபுணர், www.ducatz.in
சென்னை மற்றும் திருப்பூரில் இயங்கி வரும் Ducatz FinServ இன் நிறுவனர் மற்றும் முதன்மை தனிநபர் நிதியியல் நிபுணர் சீனிவாசன் சுப்ரமணியன். இவர் தனிநபர் நிதி மேலாண்மையில் 15 ஆண்டு கால நிபுணத்துவம் பெற்றவர். தனிநபர் நிதி, நிதித் திட்டமிடல், காப்பீடு, பட்ஜெட், முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
இவர் தற்போது 250-ம் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்களுடைய நிதி மேம்பாட்டிற்கு சேவை செய்து வருகிறார். தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவைக்கு அப்பால், சமூகத்தில் நிதி சார்ந்த விழிப்புணர்வுகளை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறார். கல்லூரி மாணவர்களுக்கு நிதியியல் சார்ந்த பட்டய வகுப்புகளை கல்லூரிகள் மற்றும் தனிப்பட்ட வகுப்புகள் மூலம் நடத்தி வருகிறார்.
நாணயம் விகடன் இதழில் வெளியான ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4r0Mlbp
ஆம்ஃபி பதிவு எண்: 64151
Ducatz
Finserv
ப்ளாக்
எண்: 14, ஃப்ளாட் எண்: G1,
Jain Green Acres, எண் 91, தர்கா ரோடு,
ஜமீன் பல்லாவரம்,
சென்னை – 600 043,
தமிழ்நாடு, இந்தியா.
📞 தொடர்புக்கு: (+91) 995 260 4444
📧 மின்னஞ்சல்: connect@ducatz.in
இணையதளம்: www.ducatz.in
