பணவீக்கம்
0.25%; ஆர்.பி.ஐ வட்டியை மேலும் குறைக்குமா?
அக்டோபர் மாத பணவீக்க விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சில்லறை பணவீக்கம்
0.25% ஆக குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின், கடந்த அக்டோபர் மாதம்தன்
இந்த அளவுக்கு சில்லறை பணவீக்கம் குறைந்திருக்கிறது.
ஜி.எஸ்.டி
2.0 சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பணவீக்கம் குறைந்திருக்கிறது.
சமையல் எண்ணெய்,
கொழுப்புகள், காய்கறிகள், பழங்கள், முட்டை, காலணிகள், தானியங்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு
ஆகியவற்றில் பணவீக்கம் குறைந்திருக்கிறது.
உணவுகள் மற்று
பானங்களில் பனவீக்கம் 3.7% குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்
பணவீக்கம் அதிகளவில் இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அக்டோபரில்
பணவீக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது.
ஆக, ஒட்டுமொத்தமாக
பார்த்தால், பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.
இதனால், ஆர்.பி.ஐ வட்டியை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
