ஸ்மார்ட்டாக ஓய்வு
பெறுங்கள்.. SWP மூலம் தொடர்ந்து பண வரவு பெற்றிடுங்கள்..!
SWP – ஸ்மார்ட்டான
நிதிச் சுதந்திரத்துடன் கூடிய ஓய்வு வாழ்க்கைக்கான திட்டம்
ச.இராமலிங்கம், NISM LUTC Fellow
மூத்த காப்பீட்டு ஆலோசகர் – பொது காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆயுள் காப்பீடு, சர்வதேச பயணக் காப்பீடு &, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
பணி ஓய்வுக் கால
வாழ்க்கை என்பது வேலை இல்லாத காலம் மட்டுமல்ல; அது வருமானம் இல்லாத காலமாக மாறக் கூடாது.
பலர் ஓய்வு பெறும்போது சேமித்த தொகையை வங்கி கணக்கில் வைத்துக் கொண்டு மாத செலவுகளை
நடத்த முயற்சிக்கிறார்கள்.
ஆனால் பணவீக்கம்
என்ற விலைவாசி உயர்வு, குறைந்த வட்டி விகிதம் மற்றும் வரிச்சுமை போன்ற காரணங்களால்,
அந்த தொகை நீண்ட காலத்திற்கு போதாது.
இதற்கான சிறந்த
மாற்று வழி சீரான பணம் எடுக்கும் திட்டம் (Systematic Withdrawal Plan - SWP) ஆகும். இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து மாதம்/காலாண்டு/வருடாந்திர
அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாகப் பெற உதவும் ஒரு திட்டமாகும்.
SWP என்றால் என்ன?
SWP என்பது நீங்கள்
ஏற்கெனவே முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் தொகையில் இருந்து, ஒரு குறிப்பிட்ட
தொகையை நிரந்தர இடைவெளியில் ,உங்களால் தேர்வு செய்யப்பட்ட தேதியில், எடுத்து கொள்ளும்
வசதி ஆகும்.
உதாரணமாக, நீங்கள் ₹ 50 லட்சத்தை கடன் ஃபண்டுகள் அல்லது ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால்,
அதிலிருந்து மாதம் ₹25,000 எடுக்க முடியும். மீதமுள்ள தொகை தொடர்ந்து முதலீட்டில் இருந்து
வளர்ச்சியைப் பெறும்.
SWP எப்படி செயல்படுகிறது?
1. முதலில் ஒரு தொகையை
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.
2. அதன் பிறகு மாதம்
எவ்வளவு தொகை, எடுக்க வேண்டிய தேதி
என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
3. மியூச்சுவல் ஃபண்ட்
யூனிட்கள் விற்கப்பட்டு, அந்தத் தொகை உங்கள் வங்கி கணக்கில் தானாகவே வரத் தொடங்கும்.
4. மீதமுள்ள தொகை பங்குச்
சந்தை மற்றும் கடன் சந்தை வளர்ச்சியுடன் மதிப்பு உயர்வைப் பெறும்.
அட்டவணை: SWP மூலம்
கிடைக்கும் முக்கிய நன்மைகள்:
|
நன்மை |
விளக்கம் |
|
நிலையான பணவரத்து |
பணி ஓய்வுக்கு பிந்தைய காலங்களில் மாதாந்திர
செலவுகளுக்கான உறுதியான வருமானம் கிடைக்கும். |
|
வருமான வரிச் சிக்கனம் |
எடுத்த தொகையில் லாபப் பகுதி மட்டுமே வரிக்குட்படும். முழு
தொகைக்கும் வரி இல்லை. |
|
மூலதன மதிப்பு உயர்வு |
மீதமுள்ள முதலீடு சந்தை வளர்ச்சியால் மதிப்பு பெறும் வாய்ப்பு
உள்ளது. |
|
பணவீக்கம் எதிர்ப்பு |
வங்கி வட்டியை விட அதிக வருமான வாய்ப்பு மூலம் பணவீக்கத்தை
சமாளிக்க முடியும். |
|
நெகிழ்வுத்தன்மை |
தேவைக்கு ஏற்ப எடுக்கும் தொகையை அதிகரிக்க / குறைக்க முடியும். |
ஓர் எளிய கணக்குப்
எடுத்துக்காட்டு
|
ஆரம்ப
முதலீடு |
மாதாந்திர
SWP |
ஆண்டு
வருமானம் (₹) |
சுமார்
8% வருமானத்தில் நீடிக்கும் காலம்* |
|
₹50,00,000 |
₹25,000 |
₹3,00,000 |
12–15 ஆண்டுகள் (சந்தை நிலையை பொறுத்தது) |
|
₹1,00,00,000 |
₹50,000 |
₹6,00,000 |
15+ ஆண்டுகள் |
|
₹1,50,00,000 |
₹75,000 |
₹9,00,000 |
18+ ஆண்டுகள் |
|
₹2,00,00,000 |
₹1,00,000 |
₹12,00,000 |
20+ ஆண்டுகள் |
*இவை கணக்கீட்டு
உதாரணங்கள் மட்டுமே; சந்தை வருமானம் மாறுபடலாம்
.
யாருக்கு SWP பொருத்தமானது?
- நிலையான மாத வருமானம் கிடைக்க விரும்புவர்கள்
- Bank FD வங்கி வைப்பு நிதியைத் தவிர வேறு முதலீட்டுத்
திட்டத்தை நாடுபவர்கள்
- ஒருமுறை கிடைத்த தொகையை (Retirement
Corpus / Property Sale) மாத வருமானமாக மாற்ற விரும்புபவர்கள்
- வருமான வரிச் சுமையை குறைத்து பண வரவை விரும்புபவர்கள்
- ஓய்வுக் காலத்தில் பிறர் உதவியை நாடாமல் நிதிச் சுதந்திரம் பெற விழைபவர்கள்
முக்கிய கவனிக்க
வேண்டியவை
-
முதலீட்டுத் தொகையில் வருட வட்டி 6% மிகாமல் SWP தொகையை தேர்ந்தெடுப்பது நல்லது.
- சரியான ஃபண்ட் தேர்வு முக்கியம் (கடன் / ஹைபிரிட்
/ குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட், மல்டி அசெட் , பாலன்ஸ்ட்
அட்வான்டேஜ் ஃபண்ட்).
- வருடத்திற்கு ஒருமுறை மதிப்பாய்வு அவசியம்.
நிறைவுரை
பணி ஓய்வுக் கால
வாழ்க்கை நிதிச் சுதந்திரத்துடன் அமைதியாக இருக்க வேண்டுமெனில், சேமித்த பணத்தை புத்திசாலித்தனமாக
பயன்படுத்த வேண்டும்.
SWP என்பது “ஒரே
நேரத்தில் பணத்தை எடுத்து செலவழிப்பது” அல்ல; “முதலீட்டை வாழ்நாள் வருமானமாக மாற்றும்
திட்டம்” ஆகும்.
நிலையான பணவரவு,
வருமான வரிச் சிக்கனம் மற்றும் மூலதன வளர்ச்சி ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் பெற விரும்பினால்,
SWP ஒரு ஸ்மார்ட்டான தீர்வாக அமையும்.
ச.இராமலிங்கம்,
NISM LUTC Fellow,
மூத்த காப்பீட்டு ஆலோசகர்(25 வருட அனுபவம்) – பொது காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆயுள் காப்பீடு, சர்வதேச பயணக் காப்பீடு & AMFI cert. மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்( 19 வருட அனுபவம்) ARN No 55553
தொடர்பு எண்:
மின்னஞ்சல் முகவரி:
இணையதளம்:
முகவரி:
12/15, ஜெயா அபார்ட்மெண்ட்ஸ்,
ஜெயராம் அவென்யூ, சாஸ்திரி நகர்,
அடையார், சென்னை – 600020,
தமிழ்நாடு.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக
படிக்கவும்.
