ஸ்மார்ட் முதலீடு – பாதுகாப்பான எதிர்காலம்! 4 அக். 2026, ஈரோடு Sundram MF
“மாதம் ரூ.5,000
முதலீடு செய்ய வேண்டும். ஆனால், எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது
என்று தெரியவில்லை. பங்குச் சந்தை இறங்கினால் என்ன செய்வது?” என்று தோழியிடம் கேட்டார்
அருணா.
“முதலீடு செய்வதற்கு
முன்பு அதன் அடிப்படைகளைத் தெரிந்துகொள். திட்டத்தின் பெயரை மட்டும் பார்த்து முதலீடு
செய்யக்கூடாது” என்றார் தோழி.
இன்றைக்கு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. அதே நேரத்தில்,
எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, சந்தை ஏற்ற இறக்கத்தை
எப்படி எதிர்கொள்வது போன்ற கேள்விகளும் இருக்கின்றன. இந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும்
வகையில், ஈரோட்டில் அக்டோபர் 4, 2026 அன்று ஒரு நாள் கட்டமில்லா இலவச பயிற்சி நிகழ்ச்சி
நடைபெற உள்ளது.
ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி
சுந்தரம் மியூச்சுவல்
நிறுவனம் சார்பில் “ஸ்மார்ட் முதலீடு – பாதுகாப்பான எதிர்காலம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி”
என்ற தலைப்பில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
ஈரோடு ஃபோர்ட்
பகுதியில் உள்ள கோஹினூர் ஹோட்டல்ஸ், 330, மீனாட்சி சுந்தரனார் சாலை என்ற இடத்தில்
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார்
ராமகிருஷ்ணன்..
இதில் சுந்தரம் மியூச்சுவல் நிறுவனத்தின் கிளை மேலாளர்
அரவிந்த் மற்றும் தொழில்முனைவோர், முன்னாள் வங்கி அதிகாரி மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்
ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளனர்.
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
மியூச்சுவல்
ஃபண்ட் என்பது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி, அதற்கென உருவாக்கப்பட்ட
விதிமுறைகளின்படி நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல்
எஸ்டேட் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யும் அமைப்பாகும்.
ஒருவர் தனியாக
பல நிறுவனங்களின் பங்குகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட முதலீட்டு
நோக்கத்தைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
ஆனால் மியூச்சுவல்
ஃபண்ட் முதலீட்டிலும் சந்தை ரிஸ்க் உள்ளது. எனவே, கடந்த காலத்தில் அதிக வருமானம் கிடைத்தது
என்பதற்காக மட்டும் ஒரு திட்டத்தைத் தேர்வு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.
முதலீட்டுக்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை:
முதலீட்டாளர்
முதலில் தனது நிதி இலக்கு, முதலீட்டுக் காலம், ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ளும் திறன் மற்றும்
மாதம் முதலீடு செய்யக்கூடிய தொகை ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக,
குழந்தையின் உயர்கல்விக்கு இன்னும் 15 ஆண்டுகள் இருக்கிறது என்றால், நீண்ட கால முதலீட்டுக்கான
பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களைப் பற்றி ஆராயலாம். அதேபோல், இரண்டு
அல்லது மூன்று ஆண்டுகளில் தேவைப்படும் பணத்தை அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்ட முதலீட்டில்
முழுமையாக வைப்பது பொருத்தமாக இருக்காது.
முதலீட்டாளரின் முக்கியக் கேள்விகள்
|
தெரிந்துகொள்ள வேண்டியது |
ஏன் முக்கியம்? |
|
முதலீட்டின்
நோக்கம் |
எந்த இலக்குக்காக
முதலீடு செய்கிறோம் என்பதைத் தீர்மானிக்க உதவும் |
|
முதலீட்டுக்
காலம் |
குறுகிய
காலமா, நீண்ட காலமா என்பதை அறிய உதவும் |
|
ரிஸ்க் |
எவ்வளவு
ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் |
|
திட்டத்தின்
வகை |
பங்கு, கடன்
அல்லது கலப்பு முதலீடா என்பதைப் புரிந்துகொள்ளலாம் |
|
செலவுகள் |
முதலீட்டுடன்
தொடர்புடைய கட்டணங்களை அறிந்துகொள்ளலாம் |
|
கடந்தகால
செயல்பாடு |
திட்டத்தின்
செயல்பாட்டை ஆய்வு செய்ய உதவும்; எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அல்ல |
எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்யலாமா?
மாதந்தோறும்
ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எஸ்.ஐ.பி. எனப்படுகிறது.
மாத சம்பளம் பெறுபவர்களுக்கு இது முறையான முதலீட்டு பழக்கத்தை உருவாக்க உதவுகிறது.
உதாரணமாக,
மாதம் ரூ.5,000 வீதம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தால், சந்தையின் ஏற்ற இறக்கங்களில்
வெவ்வேறு விலையில் யூனிட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எஸ்.ஐ.பி.யிலும்
சந்தை ரிஸ்க் இருப்பதை முதலீட்டாளர் மறந்துவிடக் கூடாது.
பங்குச் சந்தை இறங்கும்போது என்ன செய்வது?
பங்குச் சந்தை
உயரும்போது முதலீடு செய்வது எளிதாகத் தோன்றும். ஆனால் சந்தை சரியும் நேரத்தில் முதலீட்டாளர்களின்
மனநிலை மாறக்கூடும்.
அந்த நேரத்தில்
பயந்து முதலீட்டை நிறுத்துவது அல்லது அவசரமாக யூனிட்களை விற்பது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு
முன்பு, முதலீட்டின் ஆரம்ப நோக்கத்தையும் கால அளவையும் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
சந்தையின்
தினசரி நகர்வை வைத்து நீண்டகால முதலீட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது முக்கியம்.
பயிற்சி நிகழ்ச்சியின் பயன் என்ன?
மியூச்சுவல்
ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள், தங்களுடைய
முதலீடுகளைப் பற்றி அடிப்படை புரிதலை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு
இதுபோன்ற நேரடி பயிற்சி நிகழ்ச்சிகள் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெறும் வாய்ப்பை வழங்குகின்றன.
குறிப்பாக,
முதலீடு செய்வதற்கு முன்பு “எதில் முதலீடு செய்வது?” என்ற கேள்வியைவிட “எதற்காக
முதலீடு செய்கிறோம், எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கிறோம், எவ்வளவு ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ள
முடியும்?” என்ற கேள்விகளுக்குப் பதில் காண்பது முக்கியம்.
அந்த அடிப்படை
புரிதலுடன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அணுகினால், முதலீட்டு முடிவுகள் மேலும் திட்டமிட்டதாக
அமையக்கூடும்.
நிகழ்ச்சி: 4 அக்டோபர் 2026
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
இடம்: கோஹினூர் ஹோட்டல்ஸ், 330, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு ஃபோர்ட், ஈரோடு
– 638001.