SIP, HIP, TIP, SWP மூலம் பணத்தையும் வாழ்க்கையையும் திட்டமிடுவது எப்படி?
Rtn பி. கண்ணன்,
நிறுவனர், பி.கே.
ஃபின்சர்வ்,
செல்: 90958 55788, ஏ.ஆர்.என்.: 354988
சென்னையில் பணிபுரியும் ரமேஷ், 35 வயதில் நல்ல சம்பளம் வாங்கி
வந்தார். மாதம் ரூ.80,000 வருமானம். வீட்டுச் செலவு, குழந்தைகளின் பள்ளிக் கூட கட்டணம்,
வீட்டுக் கடன் என அனைத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு நாள் நண்பர் அவரிடம்,
“உனக்கு ஏதாவது எதிர்பாராத மருத்துவச் செலவு வந்தால் என்ன செய்வாய்? உன்னால் வேலை செய்ய
முடியாத நிலை ஏற்பட்டால் குடும்பத்தின் நிலை என்ன? பணி ஓய்வு பெற்ற பிறகு மாதச் செலவுக்கு
என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
அப்போதுதான் ரமேஷூக்கு ஒரு விஷயம் புரிந்தது. வருமானம் இருப்பது
மட்டும் நிதிப் பாதுகாப்பு அல்ல; அந்த வருமானத்தைச் செல்வமாக மாற்றுவதும், ரிஸ்க்களிலிருந்து
குடும்பத்தைப் பாதுகாப்பதும், எதிர்காலத்தில் அந்தச் செல்வத்திலிருந்து வருமானம் பெறுவதும்தான்
முழுமையான நிதித் திட்டமிடல் (Financial Plan).
இதற்கான ஒரு எளிய அணுகுமுறையாக SIP + HIP + TIP + SWP என்ற நான்கு
அம்சங்களைப் பார்க்கலாம்.
SIP – எதிர்காலச் செல்வத்தை உருவாக்கும் வழி:
SIP (Systematic Investment Plan) என்பது
மியூச்சுவல் ஃபண்ட் முறையான முதலீட்டுத் திட்டம் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில்
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்வதே இதன் அடிப்படை.
உதாரணமாக, மாதம் ரூ.5,000 முதலீடு செய்வதை ஒருவர் தொடங்குகிறார்
என்று வைத்துக்கொள்வோம். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பற்றி தினமும் கவலைப்படாமல்,
நீண்ட கால இலக்கை மனதில் வைத்து தொடர்ந்து முதலீடு செய்வது முக்கியம்.
குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், சொந்த வீடு வாங்குதல், கார்,
பணி ஓய்வுக் கால தொகுப்பு நிதி போன்ற நீண்டகால இலக்குகளுக்கு ஏற்ற முதலீட்டு முறையைத்
தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்
முதலீடுகளில் சந்தை ரிஸ்க் இருப்பதால், திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு முதலீட்டின்
காலம், ரிஸ்க்கை ஏற்கும் திறன் மற்றும் நிதி இலக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
HIP– மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாப்பு :
HIP (Health Insurance Plan) என்பது மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம் என்பதைக் குறிக்கிறது.
ஒரு குடும்பம் பல ஆண்டுகள் சேமித்து உருவாக்கிய செல்வத்தை ஒரே
ஒரு பெரிய மருத்துவச் செலவு பாதித்து விடக்கூடும். இதனால் முதலீடு செய்வதுடன், மருத்துவச்
செலவுகளுக்கான பாதுகாப்பையும் காப்பீடு மூலம் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
மருத்துவக் காப்பீடு இருந்தால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும்
வரம்புகளுக்கு உட்பட்டு தகுதியான மருத்துவச் செலவுகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கலாம்.
குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வயது, மருத்துவத் தேவைகள், காப்பீட்டுத் தொகை,
காத்திருப்பு காலம், விலக்குகள் போன்றவற்றைப் பார்த்து திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
TIP – குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்
ஆயுள் காப்பீடு:
TIP (Term Insurance Plan) என்பது காலவரையறை ஆயுள் காப்பீட்டுத்
திட்டம் என்பதைக் குறிக்கிறது.
குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டுபவருக்கு எதிர்பாராத சம்பவம்
ஏற்பட்டால், குடும்பத்தின் அன்றாடச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, வீட்டுக் கடன் போன்ற
நிதிப் பொறுப்புகள் பாதிக்கப்படலாம்.
அத்தகைய சூழ்நிலையில் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும்
நோக்கத்துடன் காலவரையறை ஆயுள் காப்பீடு திட்டமான டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை
தேர்ந்தெடுக்கலாம். காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது தற்போதைய வருமானம், குடும்பச்
செலவுகள், கடன்கள், குழந்தைகளின் எதிர்காலத் தேவைகள் மற்றும் பிற நிதிப் பொறுப்புகளை
கணக்கில் எடுத்துக் கொள்வது முக்கியம்.
SWP – ஓய்வுக்குப் பிறகு முதலீட்டிலிருந்து வருமானம்;
SIP மூலம் பணத்தை நீண்ட காலம் சேர்ப்பது ஒரு பக்கம் என்றால்,
அந்தச் சேமிப்பைத் தேவையான காலத்தில் பயன்படுத்துவது மற்றொரு பக்கம்.
SWP (Systematic Withdrawal Plan) என்பது
முறையான பணம் எடுத்துக்கொள்ளும் திட்டம் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உருவான
தொகையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளும்
முறையாக இது செயல்படுகிறது.
உதாரணமாக, பணி ஓய்வுக்குப் பிறகு ரூ.50 லட்சம் மியூச்சுவல் ஃபண்ட்
முதலீடு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதிலிருந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை
எடுத்துக் கொள்வதன் மூலம் கூடுதல் பணப்புழக்கத்தை உருவாக்க முயற்சி செய்யலாம். ஆனால்
முதலீட்டின் மதிப்பு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால், எவ்வளவு தொகையை
எடுக்க வேண்டும் என்பதை கவனமாகத் திட்டமிட வேண்டும்.
நான்கு திட்டங்களின் நோக்கம் என்ன?
|
திட்டம் |
முக்கிய
நோக்கம் |
எப்போது
பயன்படும்? |
|
SIP |
செல்வத்தை உருவாக்குதல் |
வேலைக் காலத்தில் |
|
HIP |
மருத்துவச் செலவிலிருந்து பாதுகாப்பு |
எந்த வயதிலும் |
|
TIP |
குடும்பத்திற்கு ஆயுள் பாதுகாப்பு |
வருமானம் ஈட்டும் காலத்தில் |
|
SWP |
முதலீட்டிலிருந்து முறையான வருமானம் |
ஓய்வுக் காலத்தில் |
நான்கையும் ஒன்றாகப் பார்ப்பது ஏன் முக்கியம்?
ஒருவர் SIP மட்டும் செய்தால் செல்வம் உருவாகலாம். ஆனால் மருத்துவக்
காப்பீடு இல்லை என்றால் பெரிய மருத்துவச் செலவு அந்தச் சேமிப்பை பாதிக்கலாம். ஆயுள்
காப்பீடு இல்லை என்றால் குடும்பத்தின் எதிர்கால நிதித் திட்டம் ஆபத்தில் சிக்கலாம்.
அதேபோல், ஓய்வுக் காலத்தில் முதலீட்டிலிருந்து எவ்வாறு பணத்தைப் பயன்படுத்துவது என்பதற்கான
திட்டமிடலும் தேவைப்படுகிறது.
அதனால், முதலீடு, பாதுகாப்பு, குடும்பப் பொறுப்பு, ஓய்வுக்கால
வருமானம் ஆகிய நான்கு கோணங்களிலும் நிதித் திட்டத்தை அமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.
நிதிச் சுதந்திரம் என்பது அதிகமாகச் சம்பாதிப்பது
மட்டும் அல்ல!
நிதிச் சுதந்திரம் (Financial Freedom) என்பது பணம் சம்பாதிப்பது,
தொடர்ந்து சேமிப்பது, சரியான இடங்களில் முதலீடு செய்வது, எதிர்பாராத ஆபத்துகளிலிருந்து
பாதுகாப்பை ஏற்படுத்துவது, இறுதியில் உருவாக்கிய செல்வத்திலிருந்து தேவையான வருமானத்தைப்
பெறுவது ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பயன்.
SIP செல்வத்தை உருவாக்க உதவுகிறது; HIP உடல்நலச் செலவுகளிலிருந்து
பாதுகாப்பை வழங்குகிறது;
TIP குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது;
SWP உருவாக்கிய முதலீட்டிலிருந்து திட்டமிட்ட வருமானத்தைப் பெற
உதவுகிறது.
எனவே, “எவ்வளவு சம்பாதிக்கிறோம்?” என்ற கேள்வியுடன், “எவ்வளவு
பாதுகாப்பாக இருக்கிறோம், எவ்வளவு முதலீடு செய்கிறோம், எதிர்காலத்தில் அந்தப் பணத்தை
எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்?” என்ற கேள்விகளையும் கேட்பதே முழுமையான நிதித் திட்டமிடலின்
அடிப்படையாகும்.
கூடுதல் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
Rtn பி. கண்ணன்,
நிறுவனர், பி.கே.
ஃபின்சர்வ்,
ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல்
ஃபண்ட் விநியோகஸ்தர்
வாட்ஸ்அப்: 97 89 55 77 88
செல்: 90958 55788
மின்னஞ்சல்: pkfinservemf@gmail.com
ஏ.ஆர்.என்.: 354988
நாமக்கல்
– 637 408, தமிழ்நாடு


