தேசியப் பங்குச் சந்தையில் (NSE) 24 கோடி என்ற
மைல்கல்லை கடந்திருக்கும் முதலீட்டாளர் கணக்குகள்
சென்னை, நவம்பர் 13,2025 இந்திய தேசிய பங்குச் சந்தை (NSE) மொத்த, தனித்துவமான பங்கு வர்த்தக கணக்குகளில் 24 கோடி என்ற அளவைக் கடந்திருப்பதன் மூலம் 2025 நவம்பர் மாதத்தில் மற்றுமொரு சாதனை மைல்கல்லை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 20 கோடி என்ற அளவை எட்டியதிலிருந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு கால அளவில் இந்த புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
2025 அக்டோபர் 31-ம் தேதி அளவில் பதிவு செய்திருக்கிற
தனித்துவ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 12.2 கோடியாக இருக்கிறது. 2025 செப்டம்பர்
25 அன்று பதிவாகியிருந்த 12 கோடி தனித்துவமான பதிவு செய்த முதலீட்டாளர்கள் என்ற மைல்கல்லை
இது கடந்திருக்கிறது.
பங்குச் சந்தையில் வெவ்வேறு புரோக்கர்களிடம் முதலீட்டாளர்கள் கணக்குகளை வைத்திருக்கலாம்; இதன் காரணமாக ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் குறியீடுகள் இருக்கக்கூடும். இதனடிப்படையில் 4 கோடிக்கும் அதிகமான முதலீட்டாளர் கணக்குகளுடன் (17% பங்கு) மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து உத்திரப்பிரதேஷ் (2.7 கோடி, 11% பங்கு), குஜராத் (2.1 கோடி, 9% பங்கு, மேற்கு வங்கம் (1.4 கோடி 6% பங்கு), மற்றும் ராஜஸ்தான் (1.4 கோடி, 6% பங்கு) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன.
குறிப்பாக, முதன்மையான 5 மாநிலங்கள்
ஒட்டுமொத்த முதலீட்டாளர் கணக்குகளில் ~49% பங்கினைக் கொண்டிருப்பதும் முதன்மையான
10 மாநிலங்களின் பங்கு 73%-க்கும் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்றுக்கு
பிறகு இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களது பங்கேற்பு மிகப்பெரிய வளர்ச்சியை
கண்டிருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கான கல்வி மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது.
2025 செப்டம்பர் 30 அன்று, நேரடி பங்கேற்பாளர்கள் மற்றும் பரஸ்பர நிதி மூலம் முதலீடு
செய்பவர்கள் ஆகிய இரு தரப்பினர் உட்பட தனிப்பட்ட முதலீட்டாளர்கள் NSE-ல் பட்டியலிடப்பட்ட
நிறுவனங்களில் 18.75% பங்கினை கொண்டிருந்தனர். இந்த அளவானது 22 ஆண்டுகள் காலஅளவில்
மிக அதிகமானது. கடந்த ஐந்து ஆண்டுகள் காலஅளவில் நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500 சுட்டெண்கள், முறையே 15% மற்றும் 18% என்ற வலுவான
ஆண்டு ரீதியிலான ஆதாயத்தை உருவாக்கியிருக்கிறது.
சமீப ஆண்டுகளில், முதலீட்டாளர்களைப் பாதுகாக்க பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களது தலைமைத்துவத்தின் கீழ் அரசின் முற்போக்கான கொள்கை நடவடிக்கைகள், டிஜிட்டல் செயல்பாடுகளின் வேகமான வளர்ச்சி, வளர்ச்சியடைந்து வரும் நடுத்தர வகுப்பு மற்றும் தொடர்ந்து நிலையான புத்தாக்க முயற்சிகள் போன்றவை பங்குச் சந்தை மீது மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
என்.எஸ்.இ (NSE), செபி (SEBI) மற்றும் அரசாங்கம்
ஆகிய மூன்றும் இணைந்து, முதலீட்டாளர்
விழிப்புணர்வுக்காகவும் மற்றும்
நிதிசார் உள்ளடக்கத்திற்காகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில
ஆண்டுகளில் முதலீட்டாளர் கல்வி முயற்சிகளை என்.எஸ்.இ தீவிரப்படுத்தியுள்ளது.
உதாரணமாக, 2025-26
நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 11,800-க்கும் மேற்பட்ட
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. இதன் மூலம் 6.2 லட்சம் பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், முதலீட்டாளர்களைப்
பாதுகாக்கும் நிதியான (IPF) என்.எஸ்.இ-யின்
பாதுகாப்பு நிதி, அக்டோபர் 2025 நிலவரப்படி ரூ.
2,719 கோடியாக உயர்ந்துள்ளது.
என்.எஸ்.இ-யின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி, திரு ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறியதாவது: "மொபைல் அடிப்படையிலான வர்த்தகத் தீர்வுகளைத் தரப்படுத்துதல், நெறிப்படுத்தப்பட்ட 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' (KYC) செயல்முறை, மற்றும் வலுவான முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு முயற்சிகள் என பல உறுதியான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்திய மூலதனச் சந்தைகள் மீது சில்லறை முதலீட்டாளர்கள் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளனர். மாறிவரும் உலகளாவிய வர்த்தக பாங்குகள் மற்றும் வேகமான புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும், இந்த நடவடிக்கைகள் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் நிலையான பங்களிப்பைத் தக்கவைக்க உதவியுள்ளன.
குறிப்பாக, இரண்டாம், மூன்றாம் மற்றும்
நான்காம் அடுக்கு நகரங்களில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கும் பங்குச் சந்தையில் வர்த்தகத்திற்கான அணுகலை இது மேம்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் தற்போது பங்குகள், கடன் பத்திரங்கள், எக்ஸ்சேஞ்ச்-டிரேடட்
ஃபண்டுகள் (ETFs), ரியல் எஸ்டேட்
இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்கள் (REITs), உள்கட்டமைப்பு இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்கள், அரசின் கடன் பத்திரங்கள் மற்றும்
கார்ப்பரேட் நிறுவனங்களின்
கடன் பத்திரங்கள் எனப் பல்வேறு முதலீட்டுக் கருவிகளை சில்லறை முதலீட்டாளர்கள் அணுக முடிகிறது.
இது, தொழில்நுட்பத்தை
அடிப்படையாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய
ஒரு நிதிச் சூழல் அமைப்பின் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்த முயற்சிகளின்
ஒட்டுமொத்த விளைவாக, இந்த ஆண்டு பங்குச்
சந்தை மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
என்.எஸ்.இ-யில் உள்ள முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் 24 கோடியை கடந்திருக்கிறது.”
இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட் குறித்து (NSE): இந்திய தேசியப் பங்குச் சந்தை (NSE), இந்தியாவிலேயே முதன்முதலில் மின்னணு அல்லது கணினி திரை அடிப்படையிலான வர்த்தகத்தை செயல்படுத்திய பங்குச் சந்தையாகும். இது 1994-ல் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. செபியின் (SEBI) தரவுகளின்படி, 1995-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஈக்விட்டி பங்குகளின் மொத்த மற்றும் சராசரி தினசரி வர்த்தகத்தின் அடிப்படையில் இது இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையாகத் திகழ்கிறது. பங்குகளை சந்தையில் பட்டியலிடுதல், வர்த்தக சேவைகள், தீர்வு மற்றும் செட்டில்மென்ட் சேவைகள், குறியீடுகள் (indices), சந்தைத் தரவு வழங்கல்கள், தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் நிதி கல்வி வழங்கல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட வணிக மாதிரியை NSE கொண்டு இயங்கி வருகிறது.
மேலும், வர்த்தக மற்றும் தீர்வு உறுப்பினர்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகியவை செபி மற்றும் பங்குச் சந்தையின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதையும் NSE கண்காணிக்கிறது. NSE, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் கலாச்சாரத்தின் மூலம் தனது அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை இது உறுதி செய்கிறது. ஃபியூச்சர்ஸ் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் (FIA) பராமரிக்கும் 2024-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி, வர்த்தக அளவின் (ஒப்பந்தங்கள்) அடிப்படையில் NSE உலகின் மிகப்பெரிய டெரிவேடிவ்கள் பரிவர்த்தனை நிலையமாகும்.
உலகப்
பங்குச் சந்தைகளின் கூட்டமைப்பு (WFE) பராமரிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டில் ஈக்விட்டி
பிரிவில் வர்த்தகங்களின் எண்ணிக்கையின் (மின்னணு ஆர்டர் புத்தகம்) அடிப்படையில் உலகில்
2-வது இடத்தை NSE பெற்றுள்ளது.
மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து விஜயம் செய்க: www.nseindia.com
.jpg)