வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமிக்கலாம்
2025 நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய விதி அமலாகிறது
வங்கியில் கணக்கு, லாக் கர் வசதியை பயன்படுத்துபவர்கள் தங்களது வாரிசுதாரராக 4 பேரை நியமிக்கலாம் என்ற புதிய விதி நவம்பர் 1-ந்தேதி முதல் அமலாகிறது.
உரிமை கோராத பணம்
வங்கிகளில் கணக்கு பராம ரிப்பவர்கள் 10 ஆண்டுகள் அல் லது அதற்கு மேல் பரிவர்த்த னைகள் செய்யவில்லையென் றால், அந்த கணக்கில் டெபா சிட் செய்யப்பட்டுள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (டெப்) தானாகவே மாற்றம் செய்யப் பட்டுவிடும். இவ்வாறு கிடைக்கும் நிதியை மக்களிடம் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கல்வி வளர்ச்சிதிட்டங்களுக்காகவும் ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வரு கிறது.
ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் வரையி லான நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளில் ரூ.58 ஆயி ரத்து 330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673
கோடியும் உரிமைகோரப்படா மல் முடங்கியுள்ளது. சம்பந்தப் பட்ட வங்கி கணக்குதாரர் மரணமடைந்து, அவரால் முன் மொழியப்பட்ட வாரிசுதாரர் (நாமினி) பணத்துக்கு உரிமை கோராததுதான் இதற்கு பிரதான காரணமாக கருதப்படு கிறது.
புதிய விதிமுறை
வங்கியில் கணக்கு தொடங் குபவர்கள், லாக்கர்களில் நகை கள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைப்பவர்கள் தனக்கு ஏதாவது விரும்பத்த காத நிகழ்வுகள் நடந்தால், அந்த பணத்துக்கும், லாக்கர்களில் உள்ள உடைமைகளுக்கும் பொறுப்பாக வாரிசுதாரராக ஒருவரை மட்டுமே தற் போது நியமிக்கலாம். இதில், வங்கி திருத்த சட்ட விதிகளின் /படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி வங்கியில் கணக்கு, வங்கிகளில் லாக்கர் வசதியை வைத்திருப்பவர் கள் வாரிசுதாரராக 4 பேரை நியமித்துக்கொள்ளலாம். இந்த வசதி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
உரிமை கோராமல் வங்கி கணக்குகளில் முடங்கும் பணத்தை குறைப்பதற்காகவே இந்தநடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
4 நாமினிகள்
இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, "புதிய விதிகளின்படி, வங்கி யில் கணக்கு பராமரிப்பவர்கள் தாங்கள் விரும்பும் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமித்து, அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் படவேண்டிய தொகையையும் வெளிப்படையாக அறிவிக்க லாம். இதேபோல லாக்கர் வச தியை பயன்படுத்துபவர்களும் வாரிசுதாரர்களாக 4 பேரை நியமிக்கலாம்.
லாக்கர் பராமரிப்பவர்கள் ஒருவேளை மரணம் அடைந் தால், அவருக்கு பின்னர் யார் அதனை கையாளவேண்டும் என்பதையும் தெரிவிக்கலாம். /இதனால் உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறை யும். புதிய விதியை அமல்படுத்த தேவையான நடவடிக்கை களை எடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினர்.