இ.எம்.ஐ. செலுத்த தவறினால், உங்களது ஸ்மார்ட்போன் 'லாக்' ஆகலாம்..!
ஸ்மார்ட்போன் கலாசாரத்தில், ஸ்மார்ட்போன்களை கூட இ.எம்.ஐ. எனப்படும் மாதாந்திர கடனில்தான் வாங்குகிறார்கள். நுகர்வோர் பொருட்கள் மட்டு மல்ல. ஒரு லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய்... என அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, அப்ளிகேஷன்கள் வாயிலாக டிஜிட்டல் கடன்களும் வழங்கப்பட்டு, அதற்கும் இ.எம்.ஐ. முறையில் பணம் செலுத்தும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
ஆனால், இத்தகைய டிஜிட்டல் ஆப் கடன்களும், நுகர்வோர் பொருள் கடன்களும் முழுமையாக வசூல் ஆவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. நிறைய மக்கள், இ.எம்.ஐ. செலுத்த தவறுவதுடன், அதிலிருந்து தப்பிக்கவே வழி தேடுகிறார்கள். இந்நிலையில்தான், ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் யோசனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால், இ.எம்.ஐ.கட்டத்தவறியவர்களின் ஸ்மார்ட் போன்களை எங்கிருந்து வேண்டுமானாலும் 'லாக்' செய்ய முடியுமாம். கடந்த சில மாதங்களாகவே, இந்த செய்தி வைரலாகி வரும் நிலையில், அதற்கான அதிகாரத்தை வழங்குவதில் ரிசர்வ் வங்கி மிக கவனமாக செயல்படுவதாகவும், கடன் வழங்குபவர், கடன் பெறுபவர்... இருவருக்கும் பாதிக்காத வகையில் புதிய தொரு விதியை விரைவில் அமல்படுத்தும் எனவும் தகவல் பரவி வருகிறது.
அப்படி, ரிசர்வ் வங்கி, புதிய விதியை அமல்படுத்தினால், கடன் வாங்கும்போதே நம்முடைய ஸ்மார்ட்போன்களில் கூடுதலாக ஒரு மென்பொருள் நிறுவப்படும். அது கடன் தொகையை திரும்ப செலுத்தி முடிக்கும் வரை நம் போனிலேயே பராமரிக்கப்படும். ஒருவேளை, இ.எம்.ஐ. கட்டத்தவறினால்,
அவர்களது எச்சரிக்கையை உதாசீனப்படுத்தினால் நம்மு டைய ஸ்மார்ட்போன்களை கடன் வழங்கிய நிறுவனங்கள், 'லாக்' செய்துவிடும். தொலைபேசி அழைப்பு, வாட்ஸ் ஆப்... என எதையும் உபயோகிக்க முடியாத அளவிற்கு, அந்த முடக்கமானது இருக்கும் என தொழில்நுட்ப வல்லு நர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.