பிரயாணிகள் அனுசரிக்கவேண்டிய சில ஒழுக்க விதிகள்
1. ரயில் வண்டிப் பெட்டிகளில் மிகப் பெரிய லக்கேஜ்களை எடுத்துச்செல்ல வேண்டாம். அவைகளினால் பாதைகள் அடைபடுவதுடன் பிரயாணிகள் நடமாடுவதற்கு இடைஞ்சலாக இருக்கும்.
2. கூட்டம் நெரிசலாகவுள்ள பெட்டிகளில் சிகரெட், சுருட்டு முதலிய புகை பிடிக்கக்கூடாது. உங்கள் பக்கத்திலிருக்கும் பிரபாணியின் முகத்தில் நீங்கள் விடும் புகை வீசி அவர் ஆக்ஷேபிக்கக்கூடும்
3. எதிரேயுள்ள பெஞ்சில், உட்காருபிடத்தில் உங்கள் கால்களை ரீட்டாதீர்கள், அங்கு வேறு பாராகிலும் உட்காரவேண்டியிருக்கும்.
4. தரையிலோ, பெஞ்சுகளின் மீதோ வாழைப் பழத் தோல்கள்,குப்பைக் காகிதம் மற்றும் இதர அகத் தங்களை எறியக்கூடாது. இவை இதர பிரயாணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
5. வண்டிப் பெட்டிக்குள் பெட்டிக்குள் எச்சில் துப்பக்கூடாது. அது சுகாதாரக் கேடு நோய்க்கு இடங் கொடுக்கும்
தக்ஷிண ரயில்வே
100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரெயில்வேயின் துண்டு பிரசுரம்.