நான் தொகுத்துள்ள ஒரு டிரில்லியன் டாலர் கனவு..! (One Trillion Dollar Dream..!) புத்தகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திய தருணம் மறக்க முடியாதது. நூலை உருவாக்க தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர், அமைச்சர் அமைச்சர் அண்ணன் அண்ணன் நக்கீரன் கோபால், சகோதரர் உள்ளிட்டோர் ஊக்கம் தந்தனர். நூலை முதலமைச்சர் வெளியிட சகோதரர் தினேஷ் உதவினார். சக ஊடகவியலாளர்கள் ஈவேரா, இந்திரகுமார் தேரடி உடன் இருந்தனர். அமைச்சர் பெருமக்கள், திரு பூச்சி முருகன் திரு கலை உள்ளிட்ட உடன்பிறப்புக்கள் வாழ்த்தினர். ------- பொருளாதாரம் குறித்து எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக்கவேண்டும் என்று முதல்வர் அவர்கள் பேசுகிறாரே, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றால் என்ன? உலகத்தின் மொத்தப் பொருளாதாரம் எவ்வளவு? இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு? தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சிதான் இந்தப் புத்தகம். -------- ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. உலகத்தின் தற்போதைய பொருளாதாரம் அல்லது ஒட்டுமொத்த GDP 113 டிரில்லியன் டாலர். அமெரிக்காவின் GDP 30 டிரில்லியன் டாலர். இந்தியாவின் GDP 4.19 டிரில்லியன் டாலர். தமிழ்நாட்டின் GDP 0.42 டிரில்லியன் டாலர். ------- ரூபாயில் சொல்வதானால் தற்போது தமிழ்நாட்டின் GDP 35 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதனை 85 லட்சம் கோடி ரூபாய் GDP ஆக 2030 ஆம் ஆண்டுக்குள் உயர்த்துவதே நம் முதல்வரின் குறிக்கோள். 

Poland, Netherlands, Switzerland போன்ற நாடுகளின் பொருளாதாரத்துக்கு இணையாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திட இலக்கு வைத்துள்ளார் நமது அன்பு முதல்வர். 

ச்சும்மா அதிருதுல்ல..! -------- இந்த இலக்கை சாதிப்பதற்கு துறைவாரியாக என்ன பணிகள் நடந்து வருகின்றன? என்ன சவால்கள் உள்ளன? என்பதுபோன்ற தகவல்களை தொகுத்துள்ளேன். ------- மாண்புமிகு துணைமுதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அட்டகாசமான அறிமுக உரையுடன் வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்த தகவல் பெட்டகம். ------- பளபளப்பான காகிதத்தில் வண்ணப் புகைப்படங்களுடன் 160 பக்கங்களில் Hard binding உடன் உருவாக்கப்பட்டுள்ள நூலின் விலை ரூ 200. ஆர்வம் உள்ள நண்பர்கள் 99400 90596 என்ற எண்ணுக்கு Gpay செய்து, அதே வாட்சப் எண்ணுக்கு முகவரி அனுப்பினால் புத்தகம் உங்கள் வீடு தேடிவரும். punnagai.media@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் ---------- விரைவில் நூல் அறிமுகக்கூட்டம் ஏற்பாடு செய்கிறோம். அனைவரும் வருக.
திருஞானம் Founder, Punnagai Educational Magazines Formerly Channel Head, Sun News
There's a new version of this post.