பணத்தை சேமிக்க 50/25/25 ...
ஒருவர் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் சில சேமிப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.
அதில், 50/25/25 விதி மிகவும் முக்கியமானது. 50/25/25 சேமிப்பு விதி என்பது நிதிகளை நிர்வகிக்கவும், ஒவ்வொரு மாதமும் போதுமான பணத்தை செலவிடுவதை உறுதி செய்ய வும் பயனுள்ள வழிகாட்டியாகும். உங்கள் வருமானத்தில் பாதியை அத்தியாவசியச் செலவுகளுக்கும், கால் பகுதியை விருப்பச் செலவுகளுக்கும், மற்றொரு கால் பகுதியை சேமிப்பிற்கும் ஒதுக்க வேண்டும் என்று இந்த விதிமுறை அறிவுறுத்துகிறது.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மாத சம்பளமாக ரூ.80 ஆயிரம் பெறுகிறீர்கள் என்றால், 50/25/25 விதியின் படி, நீங்கள் ரூ.40 ஆயிரம் (50 சதவீதம்) வாடகை, பயன்பாடுகள், மளிகைப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள் மற்றும் பிற தவிர்க்க முடியாத செலவுகள் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
அடுத்து, நீங்கள் ரூ.20 ஆயிரம் (25 சதவீதம்) விருப்பச் செலவினங்களுக்காக செலவழிக்கலாம். இதில் ஓய்வு நேர நடவடிக்கைகள், உணவருந்துதல், ஷாப்பிங் செய்தல் மற்றும் பிற அத்தியாவசியமற்ற செலவுகள் ஆகியவை இருக்கும்.
இறுதியாக, மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தை (25 சதவீதம்) சேமிப்பு
ஒதுக்க வேண்டும். இந்தப் பணம் ஓய்வு, கல்வி அல்லது வீடு வாங்குதல் போன்ற பல்வேறு நீண்ட கால நிதி இலக்குகளுக்கு பயன்படுத்தப்படலாம். மருத்துவ செலவு போன்ற எதிர்பாராத செலவுகளுக்க கைக்கொடுக்கும் அவசர நிதியாக அதை ஒதுக்கி வைக் கலாம்.