NPS Swasthya என்.பி.எஸ். ஸ்வஸ்தியா –
மருத்துவ செலவுக்கு கைகொடுக்கும் புதிய திட்டம்..!
உமா மகேஸ்வரன், நிறுவனர் – www.silveroakcapital.in
ஓய்வூதியத் திட்டத்துடன் மருத்துவ தேவைகளையும் இணைத்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) “என்.பி.எஸ். ஸ்வஸ்தியா பென்ஷன் திட்டம்” (NPS Swasthya Pension Scheme) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
திட்டத்தின் முக்கிய நோக்கம்
· ஓய்வுக்கால சேமிப்புடன் மருத்துவ பாதுகாப்பையும் இணைத்தல்
· அவசர மருத்துவ செலவுகளுக்கு முன்கூட்டியே நிதி திட்டமிட உதவுதல்
· மருத்துவச் செலவுக்காக தனியாக சேமிப்பு உருவாக்குதல்
திட்டம் அறிமுக நிலை
· தற்போது இது ஒரு சோதனை முயற்சி (Pilot Project) ஆக தொடங்கப்பட்டுள்ளது
· இந்த முயற்சி வெற்றி பெற்ற பின், அனைத்து என்.பி.எஸ். சந்தாதாரர்களுக்கும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்
· விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
யார் யார் இதில் சேரலாம்?
· ஏற்கனவே என்.பி.எஸ். கணக்கு வைத்துள்ள பழைய சந்தாதாரர்கள்
· புதிதாக என்.பி.எஸ். திட்டத்தில் இணைய விரும்புபவர்கள்
· அனைத்து இந்திய குடிமக்களும் இதில் இணையலாம்
· இது ஒரு தன்னார்வ (Voluntary) திட்டம் ஆகும்
வயது வரம்பு மற்றும் முதலீட்டு விதிமுறைகள்
· 40 வயது நிறைவடைந்த சந்தாதாரர்கள் இதில் இணையலாம்
· தங்களது தற்போதைய என்.பி.எஸ். கணக்கில் உள்ள தொகையில்
o அதிகபட்சம் 30% வரை இந்த ஸ்வஸ்தியா கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்
· கூடுதலாக, மருத்துவ தேவைக்காக தனியாகவும் முதலீடு செய்ய முடியும்
குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு
· இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50,000 சேர்ந்தவுடன்
o மருத்துவ செலவுகளுக்காக பணம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
எந்த வகை மருத்துவச் செலவுகளுக்கு பயன்படும்?
· உள்நோயாளி (In-patient) சிகிச்சை செலவுகள்
· புறநோயாளி (Out-patient) சிகிச்சை செலவுகள்
· இரு வகை மருத்துவ தேவைகளுக்கும் நிதி பெறலாம்
பணம் எடுத்துக்கொள்ளும் விதிமுறைகள்
· சந்தாதாரர் தனது சொந்த பங்களிப்பு தொகையில்
o அதிகபட்சம் 25% வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்
· மருத்துவச் செலவு அதிகமாகி
o மொத்த சேமிப்பில் 70% ஐ தாண்டினால்
o முழுத் தொகையையும் எடுத்துக்கொண்டு வெளியேற முடியும்
பணம் செலுத்தும் முறை
· சிகிச்சைக்கான தொகை
o நேரடியாக மருத்துவமனைக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
· மருத்துவ செலவுக்குப் பிறகு மீதமுள்ள தொகை
o மீண்டும் பொதுவான என்.பி.எஸ். கணக்கில் சேர்க்கப்படும்
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
· ஓய்வூதிய சேமிப்பு பாதுகாப்பாக வளர்ந்து கொண்டே இருக்கும்
· அதே நேரத்தில் அவசர மருத்துவ செலவுகளுக்கும் கைகொடுக்கும்
· தனியாக மருத்துவ காப்பீடு இல்லாவிட்டாலும் உதவிகரமானது
· நீண்டகால நிதி திட்டமிடலுக்கு மிகவும் பயனுள்ள திட்டம்
நிறைவாக, ஒரு பக்கம் ஓய்வூதியத்துக்கான சேமிப்பு வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கும் பாதுகாப்பு தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த “என்.பி.எஸ். ஸ்வஸ்தியா பென்ஷன் திட்டம்” நடுத்தர மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் நிதி திட்டமாக அமைந்துள்ளது
மேலும் கூடுதல் விவரங்கள், முதலீட்டுக்கு..
உமா மகேஸ்வரன், நிறுவனர், www.silveroakcapital.in
அனைத்து வகையான கடன்கள், காப்பீடுகள் (மருத்துவம் & ஆயுள்) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்விநியோகம், பாண்டுகள், தேசிய பென்ஷன் திட்டம் (NPS) மேற்கொள்கிறார்.
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் உமா மகேஸ்வரன் எழுதிய கட்டுரைகளைப் படிக்க https://bit.ly/4qfBeuM
சில்வர் ஓக் கேப்பிடல், 5B ராமச்சந்திரா அவென்யூ, சீத்தம்மாள் காலனி 1வது பிரதான சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018
மின் அஞ்சல்: uma.maheshwaran@silveroakcapital.in
அழைப்பு :+91 96294 40355, +91 44 4743 0355