இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்?
சில ஆண்டு ககளில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை கிட்டத் தட்ட 12 ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. தங்கத் தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கும், ஒவ்வொரு நாளும் அதன் விலை மாறு படு வதற்கும் பல கார ணங்கள் உள்ளன.
இந்தியாவில் ஏன் தினமும் தங்கத்தின் விலையில் மாற் றங்கள் நிலவுகிறது?. தொடர்ந்து தங்கத்தின் விலை ஏன் அதிகரிக் கிறது? என்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
* தங்கத்தின் விலையை பாதிக்கும் காரணிகள்
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் அமெரிக்கா டால ரின் மதிப்பும், அமெரிக்க பொருளாதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. 1970-ம் ஆண்டில், அமெரிக்கா ஒரு தந்திரமான சட்ட முன்னெடுப்பை மேற்கொண்டது. அதன்படி, தங்கத்தை டாலரில் மட்டுமே வாங்கக்கூடிய வகையில் அவர்கள் சட்டத்திட்டங்களை இயற்றினர்.
அதன்படி அமெரிக்கா டாலரின் மதிப்பும், அமெரிக்க பொருளாதாரமும் வலுவடையும் போது தங்கத்தின் மதிப்பு குறை யும். டாலரின் மதிப்பு குறையும் போது தங்கத்தின் மதிப்பு உயரும். இன்று வரையிலும் அதுவே கடைப் பிடிக்கப்படுகிறது.
அதேபோல, தேவை மற்றும் விநியோகம், பொருளாதார நிலைகள் மற்றும் புவிசார் அரசியல்
நிலைத்தன்மை உள்ளிட்ட பல காரணிகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் தங்கத்துடன் தொடர்புடையவை. இவைதான், அதற்கான விலையையும் நிர்ண மிக்கின்றன.
தேவை விநியோகத்தை மீறும்போது, தங்கத்தின் விலை உயரும். அதே நேரத்தில் அதிகப்
படியான விநியோகம் விலைகளை குறைக்க வழி வகுக்கிறது.
பணவீக்கம் மற்றும் வட்டி விகி தங்களும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் முதலீட்டாளர்கள் நிலையற்ற பொருளாதார நிலை நிலவும்போது, தொழில்துறை, பங்குச்சந்தை... இவற்றுக்கு மாற் றாக தங்கத்தில் முதலீடு செய்கி றார்கள். அவர்களுக்கு, பொருளா தார மந்தை நிலையில், மற்ற
துறைகளை விட தங்கம் மிகவும் பாதுகாப்பான ஒன்றாக தோன்று வதால், அதில் அதிகப்படியாக முதலீடு செய்கிறார்கள்.
இவை மட்டுமின்றி மத்திய வங்கிக் கொள்கைகள் மற்றும் தங்கத்தின் இருப்பு அளவும் தங் கம் விலையின் ஏற்ற, இறக்கத்தில் பங்கு வகிக்கின்றன.
கூடுதலாக, இறக்குமதி வரிகள். வரிகள் மற்றும் உள்ளூர் சந்தை போக்குகள் இந்தியாவில் தங்கத் தின் விலை எவ்வாறு தீர்மானிக் கப்படுகிறது என்பதை பாதிக் கின்றன.
* தினசரி தங்க விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
உலகளாவிய சந்தை நிலவரம், டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பொருளாதார நிலையின் அடிப்படையில் லண்டன் புல்லியன்
* இப்போது தங்கம் வாங்கலாமா..?
இது தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த நேரம் இல்லை. 100 ஆண்டுகால பொருளாதார தரவுகளின் ஆய்வு அறிக்கையின்படி, 2027 முதல் 2031 காலக்கட் டத்திற்குள் தங்கத்தின் விலை நிச்சயம் வீழ்ச்சி அடையும். அந்தசமயத்தில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இப்போது முதலீட்டிற்கு, வெள்ளி சிறந்தது. ஒரு கிலோ ரூ.2.5 லட்சங்களை தொடுவதற் கும் சாத்தியக்கூறுகள் உண்டு.
பொதுவாக முதலீடுகள், சந்தை மாற்றங்கள் மற்றும் அபாயங்களுக்கு உட்பட் டவை. எனவே முதலீடுகள் செய்யும் முன்பு, நிபுணர் களை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம்.
மார்க்கெட் அசோசியேஷனால் (London Bullion Market Association) தீர்மானிக்கப்படுகிறது.
தினசரி தங்கம் விலை நிர்ண யத்தில், கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் எனப்படும் காமெக்ஸ் (COMEX) தலையீடும் உண்டு. அதேபோல, அமெரிக்காவின் வேலை இல்லாத வர்களின் மதிப்பீடும், நாம் வாங் கக்கூடிய தங்கம் விலையில் சில ஏற்ற இறக்கங்களை உண்டாக்கு கின்றன.
இந்தியாவில், இந்தியன் புல்லி யன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசி யேஷன்ஸ் (Indian Bullion and Jewellers Association) தங்கத் தின் விலையை தீர்மானிக்கிறது
. அவர்களும் சர்வதேச விலை ஏற் றம், நாணய மாற்று விகிதங்கள் மற்றும் உள்ளூர் தேவை-விநி யோக நிலையின் அடிப்படையில் தான் தினசரி தங்க விலையை தீர் மானிக்கிறார்கள். இதுபோக, நம் மாநிலங்களுக்கு ஏற்ப வரிகளும், விலையில் சில மாற்றங்களை உண்டாக்குகின்றன.
-வி.ஹரிஹரன், தங்கம் விலை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிபுணர், சென்னை.