பசிலிக்கா நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும்
வரலாற்றுப்புகழ் மிக்க புனித தோமையார் மலை தேவாலயம்
• இதைக்
கொண்டாடும் வகையில் புதுமையான முயற்சியான இ-உண்டியல் என்ற திட்டத்தை சவுத் இந்தியன்
வங்கி தொடங்கியிருக்கிறது
சென்னை, ஜூலை 07, 2025: சென்னையிலுள்ள
புனித தோமையார் மலை தேவாலயம், அதிகாரப்பூர்வமாக பசிலிக்கா எனும் புனித நிலைக்கு
2025 ஜூலை 03 அன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் மத, கலாச்சார முக்கியத்துவத்தில்
இது ஒரு வரலாற்று மைல் கல் ஆகும். இப்புனித தருணத்தைக் கொண்டாடும் வகையில் புதுமையான
இ-உண்டியல் திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி, அந்த தேவாலயத்துக்கு வழங்கியிருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களுள் ஒருவரான புனித தாமஸ் (தோமையார்), கி.பி.72 ஆம் ஆண்டில்
உயிர் நீத்த புனிதத் தலம்தான் தோமையார் மலை ஆகும். புனித தாமஸ், மலபார் கடற்கரைப்பகுதிகளில்
கிறித்துவ சமூகங்களை உருவாக்கிவிட்டு, பின்னர் சென்னை மயிலாப்பூருக்கு இடம் பெயர்ந்தார்.
சின்னமலையின் உச்சியில் நம்பிக்கை மற்றும் மதத்தின் அடையாளச் சின்னமாக இந்த தேவாலயம்
வீற்றிருக்கிறது. தற்போது பசிலிக்கா என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் உலகின்
மதிப்புமிகு தேவாலயங்கள் பட்டியலில் இது இடம்பெற்றுவிட்டது. மேலும், பண்பாட்டுக்கும்
பாரம்பரியத்துக்குமான சின்னமாக உருவெடுத்துள்ளது.
“புனித தோமையார் தேவாலயத்துக்குக் கிடைத்திருக்கும் பசிலிக்கா என்ற தகுதி
நிலை, எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம் ஆகும்” என்று தேவாலய நிர்வாகிகள்
தெரிவித்தனர். விசுவாசம் (நம்பிக்கை), புனித யாத்திரை, ஜெபம் ஆகியவற்றைக்கொண்டு நூற்றாண்டுகாலமாக
நாங்கள் இப்புனிதத் தலத்தில் கட்டமைத்த பற்றுறுதிக்கு இது ஒரு நற்சான்று. தற்போது மின்
உண்டியல் (இ-உண்டியல்) இங்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. எமது புனிதமிகு பாரம்பரியம்
இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் தொடர்கிறது என்பதற்கான சான்று இது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
பாரம்பரியமும் புதுமையும் கலந்த கலவையாக உருவெடுத்திருக்கும் இ-உண்டியல்,
சவுத் இந்தியன் வங்கியின் அதிநவீன தொழில்நுட்ப முயற்சி ஆகும். தேவாலயத்தின் குருக்களும், சவுத் இந்தியன் வங்கியின்
சென்னை மண்டல மேலாளரும் துணைப்பொது மேலாளருமான திரு.எஸ். ஈஸ்வரன், தி.நகர் பகுதி தலைவர்
திரு.நாகராஜன், புனித தோமையார் மலை கிளையின் மேலாளர் திருமதி.கிருபா அன்னா தாமஸ், டிஜிட்டல்
ஆர்.எஸ்.ஏ பிரிவைச் சேர்ந்த திரு.சுதீஷ் எஸ்.ஆர், திருமதி. யாஸ்மின், திரு.அருண் குமார்
RSM – CASA முதலிய வங்கியின் முதுநிலை அலுவலர்கள்
முன்னிலையில், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர்
மேதகு நீதிநாதர், புனித தோமையார் மலை ஆலயத்தின் அதிபர் அருள்திரு. மைக்கேல் A D ஆகியோர்
இந்நிகழ்வை கூட்டாக தொடங்கி வைத்தனர். புனித தோமையார் மலை சவுத் இந்தியன் வங்கி கிளையின்
பணியாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இ-உண்டியல் வசதி, பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு டிஜிட்டல் காணிக்கை செயல்முறையை தடையின்றிச் செய்யவும் பாதுகாப்பான பண பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் வகை செய்கிறது. நேரில் வந்து தேவாலயத்தை தரிசிக்க முடியாதவர்களுக்கு இது ஒரு பயனுள்ள வசதியாகும்.
ஆன்மீக காணிக்கை செலுத்துதலை மென்மேலும்
எளிமையானதாக மாற்றுவதில் இந்த முயற்சி ஒரு படி முன்னே நிற்கிறது. நம்பிக்கையையும் நவீனத்தையும் ஒருங்கிணைத்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் பசிலிக்கா
மற்றும் சவுத் இந்தியன் வங்கி ஆகிய இரு அமைப்புகளும் கூட்டாக இணைந்து கொண்டாடியிருக்கின்றன
என்றே சொல்லலாம். இப்புதிய வசதிமூலம், அதிகரித்து வரும் பக்தர்கள் சமூகத்துக்கு
சிறப்பான சேவை கிடைக்கும்.
About South Indian Bank:
South Indian Bank is
a Kerala-based private sector Bank with a nationwide presence. The Bank’s
shares are listed on the Stock Exchange Mumbai (BSE) and the National Stock
Exchange of India Ltd., Mumbai (NSE). South Indian Bank has 948 branches, 5
Ultra Small Branches / Satellite Branches, 1151 ATMs, and 125 CRMs across India
and a representative office in Dubai, UAE. For more information, please log on
to https://www.southindianbank.com/