ராஜ்பாரீஸ் - நடிகை ஸ்ருதிஹாசன் பிராண்டு தூதராக நியமனம், ‘ப்ளூ ஜுவெல்’ சொகுசு திட்டம் ஈசிஆரில் தொடக்கம்..! Rajparis
ராஜ்பாரீஸ் புதிய பிராண்டு
அடையாளம் அறிமுகம் – நடிகை ஸ்ருதிஹாசன் பிராண்டு தூதராக நியமனம், ‘ப்ளூ ஜுவெல்’
சொகுசு திட்டம் ஈசிஆரில் தொடக்கம்
---
● 2030-ஆம் ஆண்டுக்குள் ₹500 கோடி
வருவாய் ஈட்டும் இலக்குடன் தனது பொன்விழா நோக்கத்தை ராஜ்பாரிஸ் அறிவித்துள்ளது
சென்னை: ஜுலை 09, 2025: 2030-ம் ஆண்டில் தனது பொன்விழாவை நோக்கி
முன்னேறும், சென்னையின் அதிக மதிப்பிற்குரிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான ராஜ்பாரிஸ், தனது வெற்றிகர பயணத்தில் மேம்பட்ட
வளர்ச்சி தருணத்தைக் குறிக்கும் மூன்று முக்கிய அறிவிப்புகளான - புதுப்பிக்கப்பட்ட
பிராண்ட் அடையாளத்தின் அறிமுகம்,
பிராண்டின் முதன்
முதல் தூதராக பிரபல திரைப்பட நட்சத்திரம் ஸ்ருதிஹாசனின் நியமனம்,
மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் (இசிஆர்) ப்ளூ ஜுவெல் என்ற
பெயரில் சொகுசு வசதிகள் கொண்ட பொட்டிக் குடியிருப்பு திட்டத்தின் தொடக்கம் ஆகியவற்றை இன்று
வெளியிட்டுள்ளது.
Photo caption - L to R - Mr T S Saravanan_Architech-Mr Rajkumar_Director-Mr R Jeyakumar_Managing Director-Mr R Satchidanandam, Chairman, RAJPARIS
இந்த புதுப்பிக்கப்பட்ட அடையாளத்துடன் களமிறங்கியிருக்கும் ராஜ்பாரீஸ், திட்டமிட்ட
விரிவாக்கம், மேம்பட்ட
கட்டுமான மற்றும் வடிவமைப்பு தரநிலைகள் மற்றும் வாடிக்கையாளர்களோடு ஆழமான உறவுகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் வழியாக, ₹500 கோடி வருவாய் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியடைவதை தனது இலக்காக
ராஜ்பாரீஸ் நிர்ணயித்திருக்கிறது. தன்
இணைப்புத் துணை நிறுவனமான ‘ஆனந்தம்’ வழியாக, ராஜ்பாரிஸ் ஏற்கனவே சென்னையில் 1 மில்லியன்
சதுரஅடி உயர்தர நிலங்களை ஒருங்கிணைத்து, வாழ்க்கைமுறை அம்சங்களை
மையமாகக் கொண்டு குடியிருப்பு திட்டங்களுக்கு உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும், வளர்ச்சி
வாய்ப்பு அதிகமுள்ள தமிழகத்தின் பிற பகுதிகளில் விரிவடையும் முயற்சியாக, காஞ்சிபுரம்
மற்றும் மதுரையை தொடக்கமாக கொண்டு தனது அடித்தளத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில்
ஈடுபட்டு வருகிறது.
இந்த
வளர்ச்சி வரலாற்றின் மையமாக பாரம்பரியமும், உணர்வும் இடம்பெற்றிருக்கின்றன. தங்கள் மதிப்பீடுகளை வடிவமைத்த ஆளுமைகளான தங்களது
பெற்றோர்களின் பெயர்களை ஒருங்கிணைத்ததன் வழியாக, ராஜ்பாரீஸ் என்ற பெயரை
பொறியியலாளர்களான இந்நிறுவனத்தின் இரண்டு நிறுவனர்களும் உருவாக்கினர். அன்பு மற்றும் அடையாளமாக தொடங்கிய இது, இன்று இந்த
பிராண்டின் குறிக்கோளை வரையறை செய்யும் ஒரு கோட்பாடாக வளர்ச்சியடைந்திருக்கிறது; ஒவ்வொரு
வாடிக்கையாளரையும் சொந்த குடும்பத்தினரைப் போல கனிவுடனும், மரியாதையுடனும்
நடத்துவது மற்றும் தாங்கள் நேசிக்கும் நபர்களுக்கு தாங்கள் காட்டுகின்ற அதே
அக்கறை மற்றும் நேர்மையுடன் சிறப்பான இல்லங்களை உருவாக்குவது என்பதே இக்கோட்பாடு.
ராஜ்பாரீஸ்
– ன் நிறுவனர்களான அதன் தலைவர் திரு, R சச்சிதானந்தம் மற்றும் நிர்வாக
இயக்குனர் திரு. R.
ஜெயக்குமார், இந்த
முக்கியமான நிகழ்வுகள் குறித்து கூறியதாவது: “எங்களது நிறுவனத்தின் பெயர்தான் எங்கள் வரலாறு. எங்களது பெற்றோர்களின் ஆசிர்வாதங்களும்
மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் எங்கள் சொந்த குடும்பத்தினரைப் போல
நடத்துவோம் என்ற வாக்குறுதியையும் இது கொண்டிருக்கிறது. நாங்கள் உருவாக்கும்
ஒவ்வொரு கட்டுமான செயல்திட்டமும், எங்கள் இதயத்திலிருந்து உருவாகின்ற நம்பிக்கை,
மரியாதை மற்றும் அக்கறை என்ற மதிப்பீடுகளால் வழிநடத்தப்படுகிறது. இந்த மதிப்பீடுகளைக் கொண்டுதான் நாங்கள்
வளர்ந்திருக்கிறோம்.”
கடந்த 45
ஆண்டு காலஅளவின்போது, தரம், நம்பகத்தன்மை மற்றும் பாசமான பிணைப்பு ஆகிய
அம்சங்களோடு உருவாக்கப்பட்ட அழகான இல்லங்களை வழங்கியிருப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான
குடும்பங்களின் ஆழமான நம்பிக்கையை ராஜ்பாரீஸ் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் நிகரற்ற தொழில்நுட்ப
நுணுக்கத்தையும் திறனையும் வழங்குவதற்கு ராஜ்பாரீஸ் – ன் நிறுவனர்களது பொறியியல்
கல்வித்தகுதி பின்புலங்கள் பக்கபலமாக இருக்கின்றன.
போட்டிகள் நிறைந்த ரியல் எஸ்டேட் துறையில் இந்த பிராண்டின் நம்பகத்தன்மையை மேலும்
வலுப்படுத்துவதற்கு இவர்களின் அனுபவமும், செயல்திறனும் உதவியிருக்கிறது.
திரைப்பட
நடிகையும், பன்முகத் திறன் கொண்ட கலைஞருமான ஸ்ருதி ஹாசன் இந்த பிராண்டின்
முகமாக இணைந்திருக்கிறார். உத்வேகத்துடன்
தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் இணைந்திருப்பது
குறிப்பிடத்தக்கது. நளினம், உண்மைத்தன்மை மற்றும்
பன்முக ஸ்டைல் ஆகிய அம்சங்களுக்காக பிரபலமாக அறியப்படும் ஸ்ருதிஹாசன், ராஜ்பாரீஸ்
– ன் குறிக்கோளான நவீன, மேம்பட்ட லைஃப்ஸ்டைலை நேர்த்தியாக பிரதிபலிக்கிறார்.
ராஜ்பாரீஸ்
பிராண்டுடன் தனது ஒத்துழைப்பு கூட்டாண்மை
குறித்துப் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன், , “நம்பிக்கை மற்றும் காலத்தை கடந்து
நிற்கும் மதிப்பிற்காக அறியப்படும் பிராண்டான ராஜ்பாரீஸ் உடன் இணைந்து
செயல்படுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். தரமான,
நேர்த்தியான இல்லங்களை வடிவமைப்பதில் அவர்கள் கொண்டிருக்கும் பேரார்வமானது,
சிந்தனைமிக்க வடிவமைப்பு மற்றும் அர்த்தமுள்ள அனுபவங்கள் மீது நான் கொண்டிருக்கும்
நம்பிக்கையோடு மிக நேர்த்தியாக ஒத்துப்போகிறது.” என்று கூறினார்.
புதிய
தொலைநோக்கு திட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் கிழக்கு கடற்கரை சாலையில்
முட்டுக்காட்டில் அமைதி தவழும் சூழலில், ப்ளூ ஜுவெல் என்ற பெயரில் ஒரு
புதிய சொகுசு குடியிருப்பு திட்டத்தை ராஜ்பாரீஸ் தொடங்குகிறது. 55
குடும்பங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்படும் இத்திட்டத்தில், ஒவ்வொன்றும் 2200
சதுரஅடி பரப்பளவிலான 3BHK இல்லங்கள் இடம்பெறுகின்றன. வங்காள விரிகுடா, முட்டுக்காடு ஏரி மற்றும் வரலாற்று
சிறப்பு மிக்க பக்கிங்ஹாம் கால்வாய் என மூன்று அழகான நீர்நிலைகளை கண்டு ரசிக்கும்
விதத்தில் உருவாகும் இத்திட்டமானது, சென்னையின் மிகச்சிறப்பான வாழ்விட
அனுபவங்களுள் ஒன்றாக இருக்கும் என்பது நிச்சயம்.
நிறுவனத்தின்
எதிர்கால திட்டங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட ராஜ்பாரீஸ் – ன் இயக்குனர் திரு.
ராஜ்குமார் சச்சிதானந்தம் கூறியதாவது: “எமது புதிய அடையாளமும், நடிகை ஸ்ருதி
ஹாசன் எமது பிராண்டு தூதராக இணைந்திருப்பதும் மற்றும் ப்ளூ ஜுவெல் குடியிருப்புத்
திட்டம் தொடங்கப்படுவதன் ராஜ்பாரீஸ் – ன் பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தைக்
குறிக்கிறது. 45 ஆண்டுகளாக எங்களை
வழிநடத்தியிருக்கும் சிறப்பான மதிப்பீடுகளில் ஆழமான வேர்களை கொண்டிருக்கும் அதே
வேளையில், பொட்டிக் சொகுசு குடியிருப்பு திட்டங்களில் புதிய தர அளவுகோல்களை ப்ளூ
ஜுவெல் மூலமாக நாங்கள் நிர்ணயிக்கிறோம். எமது எதிர்கால திட்டத்தைப் பொறுத்தவரை புதுமையான
செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் நேர்த்தி ஆகியவற்றின்
வழியாக சிறப்பான பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”
ராஜ்பாரிஸ் குறித்து: - 1980 ஆம் ஆண்டில் நெருங்கிய
நண்பர்களான இரண்டு தொலைநோக்குப் பார்வை கொண்ட பொறியாளர்கள் திரு. ஆர்.
சச்சிதானந்தம் (எம்.எஸ்., ஐஐடி மெட்ராஸ்) மற்றும் ஆர். ஜெயகுமார் (எம்.இ., சி.இ.ஜி.
கிண்டி) ஆகியோரால் நிறுவப்பட்ட ராஜ்பாரீஸ், சென்னையின்
மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். இந்தப் பெயரே அவர்களின்
பெற்றோருக்கு அவர்கள்
செலுத்தும் அஞ்சலியாகவும், மரபு, அக்கறை மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாகவும் திகழ்கிறது. 111 க்கும்
மேற்பட்ட வெற்றிகரமான திட்டங்களுடன், தரம் மற்றும் உறவுகளுக்கு
முன்னுரிமை அளிக்கும் இல்லங்களை
வழங்குவதற்காக, தொழில்நுட்ப நிபுணத்துவத்தை
இதயப்பூர்வமான மதிப்பீடுகளுடன்
ராஜ்பாரீஸ் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. 2030 ஆம் ஆண்டில்
அதன் பொன் விழா நிகழ்வை நெருங்கும் வேளையில், ராஜ்பாரிஸ்
வெறுமனே வீடுகளை மட்டும் கட்டித் தருவதில்லை;
அதற்கும் மேலாக பல தலைமுறைகள் மகிழ்ச்சியோடு வசிக்கின்ற
வாழ்விடங்களை உருவாக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது.