புதிய
முதலீட்டு வாய்ப்பு: ஏபிஎஸ்எல் அபெக்ஸ் ஹைபிரிட் லாங் - ஷார்ட் ஃபண்ட் ABSL Apex Hybrid Long-Short Fund
அஜ்மல், நிர்வாக இயக்குநர், www.finwallet.co.in
இந்தியாவில்
மியூச்சுவல் பண்ட் துறையில் புதிய முதலீட்டு வடிவங்கள் தொடர்ந்து அறிமுகமாகி
வருகின்றன. அந்த வகையில், செபி (Securities and
Exchange Board of India SEBI) புதிய சிறப்பு முதலீட்டு ஃபண்ட் (SIF -Specialized Investment Fund) திட்டத்தை அறிமுகப்படுத்தி
உள்ளது.
ஏபிஎஸ்எல் அபெக்ஸ் ஹைபிரிட் லாங் - ஷார்ட்
ஃபண்ட்:
இந்த
கட்டமைப்பின் கீழ் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் (Aditya
Birla Sun Life Mutual Fund - ABSL Mutual Fund) அபெக்ஸ் ஹைபிரிட்
லாங் - ஷார்ட் ஃபண்ட் (Apex Hybrid
Long-Short Fund) என்ற புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் பாரம்பரிய மியூச்சுவல் பண்டுகளிலிருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும். குறிப்பாக, பங்குச் சந்தை ஏற்ற-இறக்கங்களை சமாளித்து ரிஸ்கை கட்டுப்படுத்திய நிலையில் லாபத்தை உருவாக்குவது என்ப
தையே இந்த
திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
NFO காலம் மற்றும் முதலீட்டு விவரம்
இந்த புதிய
திட்டம் புதிய ஃபண்ட் வெளியீடு (New Fund Offer - NFO) முறையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
·
NFO தொடக்கம்: தற்போது திறந்துள்ளது
·
NFO முடிவு:
மார்ச் 18
·
குறைந்தபட்ச முதலீடு: ₹10,00,000
திட்டத்தின் முதலீட்டு உத்தி
இந்தத்
திட்டத்தின் முக்கிய அம்சம் Hybrid Long-Short Strategy ஆகும். அதாவது, ஒரே நேரத்தில் பல்வேறு சொத்து
வகைகளில் முதலீடு செய்வதுடன் பங்குச் சந்தை இயக்கத்தைப் பயன்படுத்தி லாபம் பெற
முயல்கிறது.
இந்தத் திட்டம் முதலீடு செய்யும் சொத்து பிரிவுகள்:
·
பங்குச் சந்தை (Equities)
·
கடன் பத்திரங்கள் (Debt Instruments)
·
டெரிவேட்டிவ்ஸ் (Derivatives)
Long-Short
Strategy என்றால் என்ன?
·
Long Position – எதிர்காலத்தில் விலை உயரும் என்று கருதப்படும்
பங்குகளில் முதலீடு செய்தல்
·
Short Position – விலை குறையும் என்று கருதப்படும் பங்குகளில்
டெரிவேட்டிவ்ஸ் மூலம் லாபம் பெற முயற்சி செய்தல்
இந்த இரு
அணுகுமுறைகளையும் இணைத்து சந்தை திசையைப் பொருட்படுத்தாமல் வருமானம் பெற முயற்சி செய்வதே இந்தத் திட்டத்தின்
மையக் கருத்தாகும்.
திட்டத்தின் நோக்கம்:
“Apex Hybrid
Long-Short Fund” திட்டத்தின் முக்கிய நோக்கம்:
·
பங்குச்
சந்தை வீழ்ச்சியடையும் காலங்களிலும் ரிஸ்கை குறைப்பது
·
பங்குச்
சந்தையின் ஏற்ற-இறக்கங்களை பயன்படுத்தி நிலையான வருமானம் உருவாக்குவது
·
நிறுவனப்
பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும்
டெரிவேட்டிவ்ஸ் ஆகியவற்றை இணைத்து போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்துவது
இதனால், பங்குச்
சந்தை கடுமையாக கீழே சென்றாலும் முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ மீது ஏற்படும்
பாதிப்பை குறைக்க முடியும் என திட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
யாருக்கு இந்தத் திட்டம் ஏற்றது?
கீழ்க்கண்ட
வகை முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றதாக கருதப்படுகிறது:
·
பாரம்பரிய
மியூச்சுவல் ஃபண்டுகளை விட மேம்பட்ட முதலீட்டு உத்திகளை எதிர்பார்ப்பவர்கள்
·
பங்குச்
சந்தை இறக்கத்திலும் ரிஸ்கை குறைத்து வருமானம்
பெற விரும்புவோர்
·
அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் (HNI investors)
·
முதலீட்டு அனுபவம் கொண்ட முதலீட்டாளர்கள்
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இந்த திட்டம்
டெரிவேட்டிவ்ஸ் மற்றும் லாங்-ஷார்ட் உத்திகளை பயன்படுத்துவதால், அது சாதாரண ஈக்விட்டி
ஃபண்டுகள் அல்லது கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் போல எளிமையானதாக இருக்காது.
அதனால் முதலீடு செய்வதற்கு முன்:
·
திட்டத்தின்
ரிஸ்க் நிலை
·
முதலீட்டுக் காலம்
·
உங்கள்
போர்ட்ஃபோலியோ நோக்கம்
இவற்றை
கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
மொத்தத்தில்,
Aditya Birla Sun Life Mutual Fund அறிமுகப்படுத்திய
“Apex Hybrid Long-Short Fund” என்பது இந்திய முதலீட்டு சந்தையில் உருவாகி வரும் Specialized Investment Fund (SIF) பிரிவின் ஒரு புதிய
முயற்சியாகும்.
பங்குச் சந்தை
ஏற்ற-இறக்கங்களை சமாளித்து ரிஸ்கை குறைத்து வருமானம் பெற விரும்பும் அனுபவமுள்ள
மற்றும் உயர்ந்த முதலீட்டுத் திறன் கொண்ட முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு
மாற்று முதலீட்டு வாய்ப்பாக அமையக்கூடும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு
அஜ்மல், நிர்வாக இயக்குநர், www.finwallet.co.in
நாணயம் விகடன் இதழில்
வெளியான அஜ்மல் கட்டுரைகளை படிக்க https://bit.ly/40gwtqn
அஜ்மல். எம்.பி.ஏ (நிதி) பட்டதாரி,
நிதி துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவர் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஃபின்வாலட்
(www.finwallet.co.in) என்கிற
நிதிச் சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுமார் 9,000 மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு
நிதி சார்ந்த பயிற்சி அளித்துள்ளார். சுமார் ரூ. 600 கோடி சொத்தை நிர்வகித்து வருகிறார்.
10,200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சேவை அளித்துள்ளார்.
தொலைபேசி
எண்: 91 95855
38454
மின்னஞ்சல்: info@finwallet.co.in
இணையதளம்: www.finwallet.co.in
Capshell
IMF Pvt. Ltd. (ARN: 340786)
FINWALLET
4/6, Flat
No: 8F, இரண்டாம் மாடி,
Parsn Samrudhi Mahal, Parsn Nagar,
Fatima College-க்கு எதிரில்,
Old Dindugal Road,
மதுரை – 625018
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
