கவின்கேர் நிறுவனத்தின் ‘Cavin’s Walk India’ 11வது
பதிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது— 135 செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டன
திண்டுக்கல், பிப்ரவரி 25, 2026: திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும்
கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு , புதன்கிழமை
ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது. முன்னணி FMCG நிறுவனமான CavinKare, Freedom Trust அமைப்புடன்
இணைந்து, தனது பிரதான சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியான ‘கவின்'ஸ் வாக் இந்தியா
’ திட்டத்தின் 11வது பதிப்பின் கீழ், 135 செயற்கைக் கால்களை வழங்கி
பயனாளிகள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் தங்கள் கால்களில் நடக்கும் வாய்ப்பை உருவாக்கியது.
2015ஆம்
ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மைல்கல் பதிப்பு பத்து வருடங்களுக்கு மேலான சமூக தாக்கத்தைக்
கொண்டாடுகிறது. இந்த ஆண்டின் முகாம் திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்கவும்,
அவர்களுக்கு தேவையான உதவியை அருகிலேயே வழங்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ
வல்லுநர்கள், CavinKare ஊழியர்கள், Freedom Trust ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள்
முன்னிலையில், திரு.ஸ்ரீவத்சன் கிருஷ்ணமூர்த்தி,
பிஸினஸ் ஹெட் – கோல்ட் செயின், கவின்கேர் அவர்களால் செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டன.
“நடமாட்டம்
என்பது மனிதரின் மரியாதை, சுயநிலை மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளின் அடித்தளம். நடமாட்டத்தை
இழப்பது ஒருவரின் உடல் இயக்கத்தை மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரம், தன்னம்பிக்கை மற்றும்
குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கிறது. மாற்றுத்திறனாளிகளை ஆதரித்து, நீடித்த மற்றும்
அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவது CavinKare நிறுவனத்தின் உறுதியான நோக்கமாக உள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் CavinKare Ability Awards, உள்ளடக்கம் மற்றும் வலிமைப்படுத்தலை
முன்னிறுத்தும் எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் வெளிப்பாடாக திகழ்கிறது. ‘Walk
India’ திட்டம் 11 ஆண்டுகளை எட்டும் இந்த நிலையில், எங்கள் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள
பகுதிகளைச் சுற்றிய சமூகங்களில் இருந்து Freedom Trust அமைப்புடன் இணைந்து பயனாளிகள்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எங்களை ஆதரித்து வரும் சமூகங்களுக்கு திருப்பித் தரும்
பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. தொடங்கப்பட்டதிலிருந்து,
Cavin’s Walk India திட்டம் ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், அசாம்,
ஹரித்வார் மற்றும் குவஹாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
பயனாளிகளை
சென்றடைந்துள்ளது. நிறுவனம் செயல்படும் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ளடக்கிய சமூக
மேம்பாட்டை உறுதியாக முன்னெடுத்து வருகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.” என்று
திரு.ஸ்ரீவத்சன் கிருஷ்ணமூர்த்தி, பிஸினஸ் ஹெட் – கோல்ட் செயின், கவின்கேர் கூறினார்.
இதனைத்
தொடர்ந்து, ஃப்ரீடம் டிரஸ்ட் அறங்காவலர், டாக்டர் சுந்தர் சுப்பிரமணியம் கூறுகையில், “2015ஆம் ஆண்டு Walk India திட்டம் தொடங்கியதிலிருந்து,
கவின்கேர்நிறுவனம் ஆண்டுதோறும் எங்களுடன் இணைந்து தொடர்ந்து ஆதரித்து வருகிறது. நம்
நாட்டில் உறுப்பு இழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மறுவாழ்வு உதவியின் தேவைவும்
தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு முகாமில் 100 பயனாளிகளை இலக்காக நிர்ணயிப்போம்.
ஆனால், கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை எப்போதும் அதைவிட அதிகமாக இருக்கும். இந்தாண்டும்
100 பேரை இலக்காக வைத்திருந்த நிலையில், 125 பேரிடம் அளவீடுகள் எடுக்கப்பட்டது. முகாம்
திண்டுக்கல்லில் நடைபெற்றாலும், ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி, மதுரை, நாதம், ஒட்டன்சத்திரம்,
பழனி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில்
இருந்து பயனாளிகள் வந்து பயனடைந்தனர். எங்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து உறுதுணையாக
இருந்து வரும் கவின்கேர் நிறுவனத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,”
என்றார்.
பயனாளிகள்
அனைவரும் விரிவான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர்களுக்கு பொருத்தமான தனிப்பயன்
செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. பலருக்கு இது வேலைக்கு திரும்பவும், கல்வியை தொடரவும்,
தினசரி வாழ்க்கையில் சுயநிலையை மீட்டெடுக்கவும் ஒரு பெரிய ஆதரவாக அமைந்துள்ளது.
திண்டுக்கல்
மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பயனாளர் கூறுகையில்,
“என் காலை இழந்த பிறகு, சிறிய தினசரி செயல்களுக்குக் கூட பிறரை சார்ந்திருந்தேன்.
இன்று நான் மீண்டும் எனது கால்களில் நின்று நடக்கிறேன். இந்த உதவி எனக்கு புதிய நம்பிக்கையையும்
தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது,” என்றார்.
இந்தாண்டு
திண்டுக்கல்லில் இந்த முயற்சியை கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாட்டில் அடித்தள அளவில்
சேவையை விரிவுபடுத்தி, சிறிய மாவட்டங்களிலும் அவசியமான மறுவாழ்வு ஆதரவை வழங்குவதை நிறுவனம்
நோக்கமாகக் கொண்டுள்ளது.
கவின்'ஸ்
வாக் இந்தியா திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாட்டத்தை வழங்கி, மரியாதையுடன் மற்றும்
தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் CavinKare நிறுவனத்தின்
நீண்டகால CSR முயற்சிகளில் ஒன்றாகும்.
About CavinKare:
CavinKare is a diversified FMCG major with business interest in personal care,
professional care, dairy, snacks, foods, beverages & salons. The brand
portfolio consists of Shampoos (CHIK, Meera, Karthika, and Nyle), Hair Wash
Powders (Meera &Karthika), Coconut Oil (Meera), Skin Creams (Fairever &
Spinz), Deodorant; Talc (Spinz), Pickles (Ruchi & Chinni's) and Snacks
(Garden), Hair colors (Indica), Retail Salon Products (Raaga Professional),
Beverages (Maa), Dairy (Cavin's), Beauty Salons (Green Trends & Limelite),
and D2C Personal Care products (Buds and Berries). Most of the brands are clear
winners in their respective product categories. A dedicated R&D center
equipped with the latest equipment and technologies constantly supports the
divisions in their endeavour. CavinKare has achieved significant milestones and
a competitive edge with a sound understanding of mass marketing dynamics and
has established a firm foothold in the national market. CavinKare's success is
based on it being firmly grounded to its corporate mission 'We shall grow significantly
better than the industry by fostering innovation and building preferred brands,
through passionate and delighted employees'.
About Freedom Trust: Freedom Trust is an NGO founded by Dr.
Sunder, M.D. Physical Medicine and Rehabilitation in the year 1997. The mission
of Freedom Trust is to limit the disability of economically backward people
with a desire to improve their quality of life and make them independent.
Freedom Trust identifies physically handicapped persons in association with
local NGOs in villages and provides mobility aids like wheelchairs, artificial
limbs, tricycles & callipers. Since its inception in 1997, over 1000 camps
have been organized and more than 37500 handicapped persons have received
mobility aids free of cost all over. Dr. Sunder has been bestowed with several
recognitions and awards both by the Central & State Governments. The Trust
also offers scholarships to differently abled children in the field of arts and
music and five scholars namely Vidarte, Mehtab Allam, Suvedha, Lokesh &
Aiswarya have bagged the “most creative individual” National award from the
President of India on World Disability Day.
