ஐ.டி.ஐ
பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (ITI Business Cycle Fund)
பங்குச்
சந்தை எப்போதும் ஒரே திசையில் இயங்காது. பொருளாதாரம் வளர்ச்சி, மந்தநிலை, மீட்பு,
விரிவாக்கம் போன்ற பல்வேறு கட்டங்களை கடந்து செல்கிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப
முதலீட்டு துறைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவது மிகவும் முக்கியமானது. இந்த
தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமே ஐ.டி.ஐ பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் ஆகும்.
இந்தத்
திட்டம், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு திறந்த வகை (Open-ended)
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதன் முதன்மை நோக்கம் நீண்டகால மூலதன
வளர்ச்சியை உருவாக்குவது. பொருளாதாரத்தின் வணிகச் சுழற்சி எந்தக் கட்டத்தில்
இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ற துறைகள் மற்றும் பங்குகளில்
முதலீடு செய்வதே இதன் முக்கிய முதலீட்டு உத்தியாகும்.
குறைந்தபட்சமாக
ரூ.5,000 தொகையுடன் ஒருமுறை முதலீடு செய்யலாம். மாத முதலீட்டு திட்டம் (SIP) மூலம்
முதலீடு செய்ய விரும்புவோருக்கு ரூ.500 முதல் தொடங்கும் வசதியும் உள்ளது.
இந்த திட்டத்தின் அளவுகோல் (Benchmark) நிஃப்டி 500 டோட்சல்
ரிட்டர்ன் இண்டெக்ஸ் ஆகும்.
அடிப்படையிலான
தீம் (Thematic) திட்டமாக இருப்பதால்,
இதன் ரிஸ்க் நிலை அதிகம். பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தை சரியாக கணிக்க
முடியாவிட்டால், துறை மாற்ற முடிவுகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போகலாம். எனவே
குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது.
இந்தத் திட்டத்தை நிர்வகிப்பவர் அலோக் ரஞ்சன். சந்தை
நிலைமைகளை ஆராய்ந்து, துறை மாறுதல் (Sector Rotation) முறையில் முதலீட்டை
மாற்றுவது இவரது பொறுப்பாகும்.
முதலீட்டை 3 மாதங்களுக்குள் மீட்டெடுத்தால் 0.50%
வெளியேறும் கட்டணம் (Exit Load) விதிக்கப்படும்.
மொத்தத்தில்,
பொருளாதார மாற்றங்களை அடிப்படையாக கொண்டு செயல்படும், அதிக ரிஸ்கை ஏற்கத் தயாராக
இருக்கும் மற்றும் நீண்டகால முதலீட்டு நோக்கம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு இது நல்ல
தேர்வாக இருக்கலாம்.