வீல் அகாடமி: நிதி பேச்சு மூலம் உலக சாதனை படைத்த
சிறார்கள்..! Weal Academy
இன்றைய உலகில் கல்வி என்பது பாடப் புத்தக அறிவோடு
மட்டுமே முடிவடைவதில்லை. பணத்தைச் சம்பாதிப்பது, சேமிப்பது, செலவிடுவது, முதலீடு
செய்வது போன்ற நிதி சார்ந்த அடிப்படை அறிவும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு
கற்பிக்கப்பட வேண்டிய அவசியமான வாழ்க்கைத் திறனாக மாறியுள்ளது.
| இடமிருந்து வலம் எஸ்.கார்த்திகேயன், திருமதி. டி.ஸ்வப்னா, நிதி பேச்சில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர், திரு. மதன் (கடைசியாக நிற்பவர்) |
உலகச் சாதனை: நிதி உரையாடல்..!
இதை கருத்தில் கொண்டு, சென்னையை சேர்ந்த வீல் அகாடமி
(Weal Academy) சிறார்களுக்காக உலகச் சாதனை நோக்கில் மிகப் பெரிய நிதி உரையாடல்
(Finance Talkathon) நிகழ்வை சென்னையில் நடத்தியது.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், குழந்தைகள் சிறு
வயதிலிருந்தே பணத்தின் மதிப்பை புரிந்து கொண்டு, பொறுப்பான நிதி பழக்கங்களை
உருவாக்க உதவுவதாகும். அதே நேரத்தில், உலகச் சாதனை முயற்சியில் பங்கேற்கும்
அனுபவம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக அமைந்தது. இந்த நிகழ்வு
குழந்தைகளின் நிதி விழிப்புணர்வை உயர்த்துவதோடு, பொதுமக்கள் முன் பேசும்
திறனையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் சிறப்பான வாய்ப்பாக அமைந்தது.
50
தலைப்புகளில் பேச்சு…!
7 முதல் 17 வயதுக்குட்பட்ட 50 பிள்ளைகள் இந்த உலகச்
சாதனை நிதி உரையாடல் நிகழ்வை நடத்தினர். சேமிப்பு, முதலீடு, செலவு மேலாண்மை,
பணவீக்கம், தங்கம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பாக்கெட் மணி, கடன், தள்ளுபடி
விற்பனை, பங்குச் சந்தை, நிதிப் பழக்கங்கள், உண்டியல், நிதிப் பழக்கங்கள்,
ஆஃபர்கள், நிதி இலக்குகள், பணக்காரர், செல்வம் உள்ளிட்ட மொத்தம் 50 தலைப்புகளில்
பிள்ளைகள் பேசினார். இடைவிடாது தொடர்ந்து 1 மணி 35 நிமிடங்கள் பேசி உலக சாதனை
நடத்தப்பட்டது.
| நாணயம் விகடன் முன்னாள் நிர்வாக ஆசிர்யர் சி.சரவணன் அவர்களை வரவேற்கும் வின்வொர்த் வெல்த் எஸ்.கார்த்திகேயன், அருகில் டி.ஸ்வப்னா உள்ளார். |
இந்தத் தலைப்புகளின் மூலம், பணத்தின் மதிப்பு,
பணவீக்கத்தின் பாதிப்பு, சேமிப்பின் அவசியம், முதலீட்டின் தேவை, தேவைக்கும்
ஆசைக்கும் உள்ள வித்தியாசம், செலவிடும் பழக்கம், நிதி ஒழுக்கம் உள்ளிட்ட அம்சங்களை
பிள்ளைகள் வலியுறுத்தி பேசினார்கள்.
லயனைஸ் வேர்ல்டு
ரெக்கார்ட்ஸ்:
உலக சாதனை படைத்த மாணவர்கள்
இந்தச் சாதனையை லயனைஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (Lionize World Records) அமைப்பு
அங்கீகரித்தது. அதன் சேர்மன் மதன் சந்திரசேகர், நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ்
வழங்கினார்.
‘’இந்த நிகழ்வு மூலம் தன்னம்பிக்கையுடன் மேடையில்
பேசும் திறன், உலகச் சாதனை முயற்சியில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு, நிதி அறிவை
எளிமையாகப் பகிரும் மேடை, குழந்தைகளின் பேச்சுத் திறனை வளர்க்கும் பயிற்சி,
தலைமைத்துவ பண்புகளை ஊக்குவிக்கும் சூழல், எதிர்கால நிதி பொறுப்புணர்வை
உருவாக்கும் செயல்பாடு ஆகிய நன்மைகள் ஏற்பட்டது” என வீல் அகாடமி மற்றும் விண்
வொர்த் வெல்த் நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.கார்த்திகேயன் குறிப்பிட்டார்.
‘’இன்றைய தலைமுறையில் குழந்தைகள் டிஜிட்டல் உலகில்
அதிக நேரம் செலவிடுகின்றனர். ஆனால், பணத்தை நிர்வகிக்கும் திறன், சேமிக்கும்
பழக்கம், நிதி ஒழுங்கு போன்ற வாழ்க்கைத் திறன்கள் பள்ளிக் கல்வியில் முழுமையாக
கற்பிக்கப்படுவதில்லை. அதை நாங்கள் கற்பிக்கிறோம்” என வீல் அகாடமியின் இணை
நிறுவனர் டி. ஸ்வப்னா குறிப்பிட்டார். இவர் குழந்தை உளவியல் நிபுணர், கல்வியாளர்
மற்றும் பெற்றோர் வழிகாட்டி (Parenting Coach) ஆவார்.
இந்த
நிகழ்வில் பங்கேற்றதன் மூலம், பிள்ளைகளுக்கு பணத்தை புத்திசாலித்தனமாக
நிர்வகிக்கும் நிதி அறிவு வளர்ந்தது. மேலும், சிறு வயதிலிருந்தே சேமிப்பின்
அவசியத்தை உணர்ந்து, எதிர்காலத்தைத் திட்டமிடும் சேமிப்பு பழக்கம் உருவானது.
மேடையில் தன்னம்பிக்கையுடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததால், மேடைப் பயம் நீங்கி,
பேச்சுத் திறனும் தன்னம்பிக்கையும் கணிசமாக அதிகரித்தன. குழுவாக செயல்படுதல்,
பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் சரியான நேரத்தில் முடிவெடுப்பது போன்ற
தலைமைத்துவத் திறன்களும் இந்த நிகழ்வின் மூலம் மேம்பட்டன.
அத்துடன்,
உலகச் சாதனை முயற்சியில் பங்கேற்ற அனுபவம், வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்
பெருமையான சாதனையாகவும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை நோக்கிச் செல்லும்
ஊக்கமாகவும் அமைந்தது.
| வின் வொர்த் வெல்த் மற்றும் வீல் அகெடாமி பணியாளர்கள் |
நிதி
கல்வி:
பெரியவர்கள் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடமல்ல
நிதி கல்வி (Finance Education). சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு,
சேமிப்பின் அவசியம், திட்டமிட்ட செலவினம் மற்றும் பொறுப்பான நிதி முடிவுகள்
குறித்து கற்றுக் கொடுத்தால், அவர்கள் எதிர்காலத்தில் நிதி ரீதியாக வலுவான
குடிமக்களாக உருவாக முடியும்.