யூனிஃபை
மியூச்சுவல் ஃபண்ட் ஓராண்டு நிறைவு.. Unifi Mutual Fund
சென்னையை
தலைமையிடமாக கொண்ட யூனிஃபை கேப்பிட்டல் குழுமத்தை சேர்ந்த யூனிஃபை மியூச்சுவல்
ஃபண்ட் (Unifi Mutual Fund) நிறுவனம் ஆரம்பித்து ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதன்
ஆண்டு விழா அண்மையில் நடந்தது. இந்த நிறுவனம் தற்போது சுமார் ரூ.1,580 கோடியை
நிர்வகித்து வருகிறது. ஃபிளெக்ஸிகேப், டைனமிக் அசெட் அலோகேஷன் மற்றும் லிக்விட்
ஃபண்ட் திட்டங்களை கொண்டுள்ளது.
யூனிஃபை
ஏ.எம்.சி சேர்மன் சரத் ரெட்டி:
யூனிஃபை ஏ.எம்.சி நிறுவனத்தின் சேர்மன் சரத் ரெட்டி
பேசும் போது, ‘’ இந்தியாவில் 50 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 3000-க்கும்
மேற்பட்ட திட்டங்களை கொண்டிருக்கும் போது மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
எதற்கு என்கிற கேள்வி வந்தது. யூனிஃபை குழுமம், கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
எங்களின் முதலீட்டுத் தத்துவம் பெரிய முதலீட்டாளர்கள் முதல் சிறிய முதலீட்டாளர்கள்
வரை பலரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அந்த அனுபவத்தையும் அணுகுமுறையையும் சிறு
முதலீட்டாளர்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், நாங்கள் மியூச்சுவல் ஃபண்ட்
துறையில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
இந்தப்
பயணமும் அதே முதலீட்டுத் தத்துவத்தின் அடிப்படையில்தான் அமைந்தது. ஃபிளெக்ஸிகேப், டைனமிக் அசெட் அலோகேஷன் ஃபண்டுகள் அவற்றின் ஃபண்ட்
பிரிவுகளில் முன்னணியில் இருக்க முயற்சி செய்கிறோம்.
முதலீட்டாளர்
கல்வி மூலம் முதலீட்டாளர்களை நீண்ட காலத்துக்கு முதலீட்டை தொடர வைக்கிறோம்.
எங்களின் குழும முதலீட்டாளர்களில் 60%-க்கு மேல் ஐந்தாண்டுகளுக்கு மேல் முதலீட்டை
தொடர்பவர்களாக உள்ளனர். எங்களின் ஃபண்டுகளில் நாங்கள் 25% முதலீடு செய்துள்ளோம்’’
என்றார்.
ரிஸ்க்கை குறைக்கும் வழி..!
யூனிஃபை
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜார்ஜ் அலெக்சாண்டர்,’’ முதலீட்டை
பரவலாக்கம் செய்தல் மற்றும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தல் மூலம் ரிஸ்க்கை
குறைக்கிறோம். விரைவில் அனைத்து சந்தை சூழலிலுக்கும் (Every
Market Season) பொருத்தமாக செயல்படக்
கூடிய ஃபண்டை அறிமுகப்படுத்த உள்ளோம். எங்களின் திட்டங்கள், பதிவு செய்த முதலீட்டு
ஆலோசகர்கள் மூலம் 10%, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மூலம் 32% விற்பனை
செய்யப்படுகிறது.” என்றார்.
வருமான வரி அனுகூலம்:
யூனிஃபை
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சி.ஐ.ஓ ஆன வி.என். சரவணன்,’’எங்களின் டைனமிக்
அசெட் அலோகேஷன் ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் தொடர்ந்து
மேலேறி செல்கிறது. அந்த வகையில், இந்த ஃபண்டில் பரவலாக்கம் வழியாக ரிஸ்க்
குறைப்பதோடு, நல்ல லாபமும் கிடைக்கிறது. இந்த ஃபண்ட் முதலீட்டில் வருமான வரி
அனுகூலம் (Tax Efficiency) உள்ளது. யூனிட்களை இரண்டு ஆண்டுக்குள் விற்பனை
செய்தால், குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு முதலீட்டாளரின் வரி வரம்புக்கு ஏற்ப
வரிக் கட்ட வேண்டும். இதுவே, இரண்டு ஆண்டுகள் கழித்து விற்றால் நீண்ட கால மூலதன
ஆதாயத்துக்கு முதலீட்டாளர் எந்த வரி வரம்பில் வந்தாலும் லாபத்துக்கு 12.5%தான்
வரிக் கட்ட வேண்டும். புதிய பங்கு வெளியீடான ஐ.பி.ஓவின் போது அடிப்படையில் வலுவான
பங்குகளில் ஃபிளேக்ஸிகேப் ஃபண்ட்க்காக முதலீடு செய்கிறோம். இதுவே, பங்கு
பட்டியலிடும் போது லாபம் (Listing Gain) கிடைக்கும் என்றால் டைனமிக் அசெட்
அலோகேஷன் ஃபண்ட்க்காக வாங்குகிறோம்” என்றார்
முதலீடு செய்யும் சுதந்திரம்:
யூனிஃபை
ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் ஏஜாஸ் லக்கானி,’’ ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் திட்டத்தில் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப்
பங்குகளில் எதில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யும் சுதந்திரம் ஃபண்ட்
மேனேஜருக்கு இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டி கொடுக்க முயற்சி
செய்கிறது.” என்றார்.
மாறன் கோவிந்தசாமி
அசெட்
அலோகேஷன் குறித்து யூனிஃபை மியூச்சுவல் ஃபண்ட் டிரஸ்டி போர்டு-ன் இயக்குநர் மாறன்
கோவிந்தசாமி, பிசினஸ்லைன் போர்ஃட்போலியோ எடிட்டர் ஹரி விஸ்வநாத் உடன் உரையாடினார்.
அப்போது
மாறன்,’’பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி
ஃபண்டுகள்), 20%-23% ஏற்ற இறக்கத்தில் நீண்ட காலத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக
12%-15% வருமானம் பெற முடிகிறது. இதுவே அசெட் அலோகேஷன்படி, பங்குகள், கடன்
பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கத்தில் பிரித்து முதலீடு செய்தால் 5%-6% ஏற்ற
இறக்கத்தில் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 11%-12% வருமானம் பெற முடிகிறது.
அதாவது, முதலீட்டை பல்வேறு சொத்து வகைகளில் பிரித்து முதலீடு செய்யும் போது
குறைவான ரிஸ்க்கில் நல்ல வருமானத்தை பெற முடியும்” என்றார்.
முதலீட்டாளர்களின்
சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கமாக பதில் அளிக்க நிகழ்ச்சி இனிதே நிறைவு
பெற்றது.
Unifi Asset Management Pvt. Ltd.
Registered Address: 11, Kakani Towers, 15, Khader Nawaz
Khan Road, Nungambakkam, Chennai – 600006
Corporate Address: 19, Kakani Towers, 3rd Floor, 15, Khader
Nawaz Khan Road, Nungambakkam, Chennai – 600006
CIN: U66309TN2024PTC166661
For Investors
AMC
CAMS
- 1800-419-2267
- enq_ufi@camsonline.com
For Distributors