மொத்தப் பக்கக்காட்சிகள்

கிரெடிட் ஸ்கோர் : கட்டுக்கதைகளும் உண்மைகளும்


நல்ல கடன் மதிப்பெண்ணைப் பராமரிப்பதன் மூலம்  குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்

முரண்பட்ட தகவல்கள் மற்றும் நல்ல நோக்கத்துடன் கூடிய ஆலோசனைகள் கூட தவறாக மாறக்கூடும். எனவே  கடன் மதிப்பெண்கள் (Credit Score - கிரெடிட் ஸ்கோர்) தொடர்பான பல இட்டுக்கதைகள் (Myths) இருப்பதில் ஆச்சரியம் எதும் இல்லை. இந்த இட்டுக்கதைளில் இரண்டு பகுதிகள் உள்ளன. அவை, கடன் மதிப்பெண் (Credit score) மற்றும் கடன் அறிக்கை (Credit report) ஆகும்.

கடன் மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் அறிக்கையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலான மூன்று இலக்க எண் ஆகும். கடன் மதிப்பெண் என்பது உங்கள் கடன் தகுதியை உறுதிப்படுத்தும் ஓர் எண்.  இந்த மூன்று இலக்க எண்,  வங்கிகளையும் பிற வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனங்களையும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு  உங்களுக்கு எவ்வளவு சாத்தியம் என்பதை மதிப்பீடு செய்ய உதவுகிறது

கடன் மதிப்பெண்கள் பொதுவாக 300 முதல் 850 வரை இருக்கும். இந்தக் கடன் மதிப்பெண் உங்கள் கடன் அறிக்கையின் அடிப்படையில் அமைகிறது. இது வங்கிகள் மற்றும் பிற வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனங்களுக்கு இடர்ப்பாட்டை (risk) முன்னரே அறிவிக்கிறது.

ஆகவே, நாம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் பொதுவான கட்டுக்கதைகளைப் பார்ப்போம்:

கட்டுக்கதை 1 - எந்தவொரு நுண்கடன் நிறுவனங்களிலிருந்தும் (எம்.எஃப்.ஐ) எந்தவொரு தொகையும் / எத்தனை தடவை வேண்டுமானாலும் கடன் வாங்கலாம்.

உண்மை: ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி,
1.    ஒரு எம்.எஃப். கடன் வாங்குபவருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகை ரூ.1.25 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது
2.    ஒரேநேரத்தில்  அதிகபட்சம்  இரண்டு எம்.எஃப். கடன்களை  ஒருவர் பெறலாம்
எனவே, மேற்கூறிய ஏதேனும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், கடன் கிடைக்காது.

கட்டுக்கதை 2 - எம்.எஃப்.ஐ-ல் கடன் வாங்குபவர்களுக்கும் கடன் மதிப்பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை:

உண்மை: எம்.எஃப். துறையின்  தொடர்ச்சியான மாற்றம் மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுடன், கடன் தகவல் நிறுவனங்கள் (Credit bureaus) எம்.எஃப்.ஐ-ல் கடன் வாங்கியவர்களுக்கு கடன் மதிப்பெண்களை உருவாக்குகின்றன. அவை கடன் கணக்குகளின் எண்ணிக்கை, பாக்கியிருக்கும் கடன் தொகை, கடன் வாங்குபவர் அதனை திரும்ப செலுத்த வரலாறு போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
கடனுக்கு வழங்கும்போது, விண்ணப்பம் மற்றும் கடன் ஒப்புதலை மதிப்பீடு செய்வதற்கு எம்.எஃப்..க்களுக்கான அளவீடுகளின்  ஒன்றாக கடன் மதிப்பெண் இருக்கிறது.

கட்டுக்கதை 3 எம்.எஃப்.ஐகள் அபராதம் வசூலிப்பதில்லை. எனவே, நான் ஒழுங்கற்ற முறையில் பணம் செலுத்தலாம் அல்லது எனது  மாதத் தவணையை தாமதப்படுத்தலாம்

உண்மை:   அனைத்து கடன் தகவல் நிறுவனங்களும் (ஈக்விஃபாக்ஸ், சிபில், ஹை மார்க் மற்றும் எக்ஸ்பீரியன்) உங்கள் தாமதமான தவணைகள் போன்ற தகவல்களை பதிவு செய்து பராமரிக்கின்றன. இது கடன் வரலாறு மற்றும் கடன் மதிப்பெண்ணை பாதிக்கும். இதன் அடிப்படையில், பல நிதி நிறுவனங்கள் கடன்  வழங்குவதை நிராகரிக்கக்கூடும்

கட்டுக்கதை 4 - கடனை திரும்பச் செலுத்தும் முறை அல்லது தவணை தவறுதல் போன்றவை கடன் வரலாற்றை பாதிக்க நேரம் எடுக்கும்

உண்மை: கடன் தகவல் நிறுவனங்களுக்கு  கடன் அறிக்கையை அனுப்பும் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, வாடிக்கையாளர் கடன் விவரங்கள் தினமும்  தெரிவிக்கப்படுகின்றன. எனவே, ஒரு தவணை தவறுதல் / கடனை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் கூட கடன் மதிப்பெண் மற்றும் கடன் வரலாறு பாதிக்கப்படும். இருந்தபோதிலும், அத்தகைய தாமதத்திற்கு கடன் வாங்கியவரிடம் நியாயமான காரணங்கள் இருந்தால், அவர் விரைவாக கடனை கட்டுவது மூலம் சரிசெய்யப்படலாம்


கட்டுக்கதை 5 - எனது கடன் மதிப்பெண்ணை சரி செய்ய கமிஷன் முகவர்கள் (Commission agents)  எனக்கு உதவக்கூடும்.

உண்மை: ஒரு நல்ல கடன் மதிப்பெண் மற்றும் கடன் வரலாற்றின் பொறுப்பு உங்களிடம் மட்டுமே உள்ளது. நீங்கள் கடனை திரும்பச் செலுத்துவதில் தவறிழைத்திருந்தால் ஒரு நல்ல கடன் மதிப்பை பெற எந்த கமிஷன் முகவரும் உங்களுக்கு உதவ முடியாது. இருந்தபோதும், உங்கள் கடன்களை அடைப்பதற்கு நீங்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டால் மோசமான கடன் மதிப்பெண் எப்போதும் இருக்காது

கட்டுக்கதை 6 எனது வருமானம், வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகள் எனது கடன் மதிப்பெண்ணை பாதிக்கின்றன

உண்மை: உங்கள் வருமானம், வங்கி கணக்குகள் அல்லது முதலீடுகள் பற்றிய எந்த தகவலும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே அவை உங்கள் கடன் அறிக்கையில் காண்பிக்கப்படாது. மேலும், அவை உங்கள் கடன் மதிப்பெண்ணை பாதிக்காது.

 (இருப்பினும், செலுத்தப்படாத வங்கிக் கட்டணம் போன்றவைகள் காண்பிக்கப்படும்.)

 Credit Score Myths Debunked by Satin(South
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...