கவின்கேர் நிறுவனத்தின் கவின்ஸ் பிராண்ட் பிரீமியம் ஐஸ் க்ரீம் அறிமுகம் CavinKare’s dairy-based offerings
72 வகைகள், 24 சுவைகள், 7 Infusion பிரிவுகள் –
வீட்டிலேயே ஐஸ் க்ரீம் பார்லர் அனுபவம்
சென்னை, 15 ஏப்ரல் 2026: கவின்கேர் நிறுவனம் தனது முக்கிய
பால்வள பிராண்டான கவின்ஸ் மூலம் பிரீமியம் ஐஸ் க்ரீம் பிரிவில் களமிறங்கி, பல்வேறு
புதிய சுவைகளுடன் கூடிய ஐஸ் க்ரீம் வரிசையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கோடை
காலத்தை முன்னிட்டு முதற்கட்டமாக சென்னை நகரில் இந்த தயாரிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வரிசையின் முக்கிய அம்சம் அதன் “infusion”
அணுகுமுறை ஆகும். இயற்கையான பழங்கள், சாக்லேட், குக்கீஸ், பிரீமியம் நட்ஸ் மற்றும்
பாரம்பரிய இந்திய இனிப்புகள் ஆகியவை ஐஸ் க்ரீமின் உட்பகுதியில் கலக்கப்பட்டு,
ஒவ்வொரு முறையும் பல பரிமாணங்கள் கொண்ட சுவை மற்றும் texture அனுபவத்தை
வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டிலிருந்தபடியே ஐஸ்
க்ரீம் பார்லர் அனுபவத்தை எளிதாக பெற முடிகிறது.
இந்த தயாரிப்பு 72 வகைகள், 24 சுவைகள் மற்றும் 7
infusion பிரிவுகளில் (பழங்கள், உலர் பழங்கள், பாரம்பரிய இந்திய
இனிப்புகள்,சாக்லேட், கிளாசிக், சிக்னேச்சர், மிட்டாய்) கிடைக்கிறது.காபி
துகள்களுடன் கூடிய காபி flavour, சாக்லேட் பிரௌனி இணைப்புகள், ராஜ்போக் போன்ற புதுமையான மற்றும் இந்திய சுவைகளும் இதில்
அடங்கும்.
முழுமையான பசும் பால் (cow
milk) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ் க்ரீம், உண்மையான dairy ஐஸ் க்ரீம்
அனுபவத்தை வழங்குகிறது. இதனால் அனைத்து வயதினரும் நம்பிக்கையுடன் சுவைக்கக்கூடிய
ஐஸ் க்ரீம் ஆக இது அமைகிறது. இந்த தயாரிப்பை உருவாக்குவதற்கு 1.5
ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அறிமுகம் குறித்து சி. கே. ரங்கநாதன்,
Chairman & Managing Director, CavinKare, கூறியதாவது: “இன்று ஐஸ் க்ரீம்
பிரிவு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நுகர்வோர் அதிக சுவை, புதுமை மற்றும்
முழுமையான அனுபவத்தை எதிர்பார்க்கின்றனர்.
கவின்ஸ் மூலம் இந்த பிரிவில் நாங்கள் களமிறங்குவது,
அந்த மாற்றத்துக்கு ஏற்ப புதிய அனுபவத்தை உருவாக்கும் முயற்சியாகும். infusion
முறையின் மூலம் ஐஸ் க்ரீம் பார்லர் அனுபவத்தை வீட்டிலேயே வழங்குகிறோம். இது ஒரு
தயாரிப்பு அறிமுகம் மட்டுமல்ல; எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான படியாகவும்
பார்க்கிறோம்.”
ஸ்ரீவத்சன் கிருஷ்ணமூர்த்தி, Business Head – Cold
Chain, CavinKare Pvt. Ltd., கூறியதாவது: “இன்று நுகர்வோர் ஐஸ் க்ரீமில் சுவை மட்டும்
அல்லாமல் texture மற்றும் முழுமையான அனுபவத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதற்கான
பதிலாகவே கவின்ஸ் infusion range உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கையான பொருட்களுடன் கூடிய இந்த தயாரிப்புகள்,
ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தை வழங்கும். சென்னை நகரில் அறிமுகமான இந்த
தயாரிப்பை, அடுத்த ஒரு ஆண்டிற்குள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்த
திட்டமிட்டுள்ளோம்.”
தற்போது இந்த தயாரிப்புகள் சென்னை நகரில் Swiggy
மற்றும் Zomato மூலம் கிடைக்கின்றன. விரைவில் மற்ற ஆன்லைன் மற்றும் retail
சேனல்களிலும் கிடைக்கும். இந்த தயாரிப்பு 100 ml, 500 ml மற்றும் 750 ml அளவுகளில்
ரூ. 89 முதல் கிடைக்கிறது.
About Cavin’s: Cavin’s is the umbrella brand for CavinKare’s
dairy-based offerings. Be it cold chain offerings like UHT, Milk, Curd, Paneer,
and Butter or ambient offerings like Milkshakes, Buttermilk, and Lassi, Cavin’s
has a variety of products. With continuous innovation as Cavin’s bedrock, the
brand has evolved into a dairy brand with offerings of the highest quality
alongside adherence to international quality standards in terms of production.
About CavinKare: CavinKare is a
diversified FMCG major with business interest in personal care, professional
care, dairy, snacks, foods, beverages & salons. The brand portfolio
consists of Shampoos (CHIK, Meera, Karthika, and Nyle), Hair Wash Powders
(Meera &Karthika), Coconut Oil (Meera), Skin Creams (Fairever & Spinz),
Deodorant; Talc (Spinz), Pickles (Ruchi & Chinni's) and Snacks (Garden),
Hair colors (Indica), Retail Salon Products (Raaga Professional), Beverages
(Maa), Dairy (Cavin's), Beauty Salons (Green Trends & Limelite), and D2C
Personal Care products (Buds and Berries). Most of the brands are clear winners
in their respective product categories. A dedicated R&D center equipped
with the latest equipment and technologies constantly supports the divisions in
their endeavour. CavinKare has achieved significant milestones and a
competitive edge with a sound understanding of mass marketing dynamics and has
established a firm foothold in the national market. CavinKare's success is
based on it being firmly grounded to its corporate mission 'We shall grow
significantly better than the industry by fostering innovation and building
preferred brands, through passionate and delighted employees'.