மொத்தப் பக்கக்காட்சிகள்

சிகைக்காய் பொடியுடன் எண்ணெய் குளியல் எடுப்பதின் முக்கியத்துவம்..!


1990 ஆம் ஆண்டுகளில் மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான ‘வெள்ளிக் கிழமை’ விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பி அந்த சிறப்பான கடந்த காலத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் மீரா சிகைக்காய்

இந்த விளம்பரம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுவது குறித்து பேசிய மீரா பிராண்ட்-ன் மூத்த மேலாளர் – மார்கெட்டிங்,  திருமதி காயத்ரி கபிலன் கூறியதாவது: “நமது சமூகத்தின் பாரம்பரிய நடைமுறைகள் இன்றைய தலைமுறையினராலும் பரவலாக ஆர்வத்தோடு பின்பற்றப்படுவதை நாங்கள் காணத் தொடங்கியிருக்கிறோம். ஆகவே, கடந்த கால பாரம்பரிய வழிமுறையில் மீரா சிகைக்காய்  பொடியுடன் எண்ணெய் குளியல் எடுப்பதின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த இது சரியான நேரமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். மீராவின் ‘வெள்ளிக்கிழமை’ விளம்பரமானது தமிழ்நாடு எங்கும் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்தகால பாரம்பரியத்தோடு இதனையும் சிறப்பாக நுகர்வோர்களால் இணைத்துப்பார்க்க ஏதுவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மனதில் ஆழமான இடம்பிடித்த கிளாசிக் நெடுந்தொடர்கள், 1990-களில் வெளிவந்த திரைப்படங்கள் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு இடையே இந்த விளம்பரமும் ஒளிபரப்பாகிறது. இந்த கடந்தகால பிரபல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான அந்த காலகட்டத்திலும் அதிகமாக விளம்பரம் செய்த பிராண்டாக நாங்கள் இருந்திருப்போம் மற்றும் அதே நிகழ்ச்சிகளை நுகர்வோர்கள் மீண்டும் தொலைக்காட்சியில் பார்க்கும்போது எமது விளம்பரத்தோடு அவர்களால் அதை தொடர்புபடுத்தி பார்க்கவும், அத்தகைய நேரத்தில் இந்த பாரம்பரிய எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை சரியாக உணரவும் முடியும். ஒரு பிராண்டாக மீரா எப்போதுமே தென்னிந்திய நுகர்வோர்களோடும் மற்றும் அவர்களோடு பின்னிப்பிணைந்த சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களோடும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக வலுவான பிணைப்பினை கொண்டு இருக்கிறது. கடந்தகால திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர் நிகழ்ச்சிகளை நுகர்வோர்கள் இப்போது பார்க்கும்போது அந்த உணர்வை முழுமையாக்குவதற்கு மீரா போன்ற கடந்தகால பிரபல விளம்பரங்களைவிட வேறு எது வலு சேர்க்கமுடியும்?”.

இந்தத் தொலைக்காட்சி விளம்பரப்படமானது, சித்தி, மெட்டி ஒலி மற்றும் 1990-களில் பிரபல வெற்றிபெற்ற வேறு பிற நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்படுகிற நேரத்தில் சன் டிவி போன்ற முதன்மையான அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும்.

விளம்பர இணைப்பு: https://youtu.be/ChB2oD6p6CE

சமூக ஊடக இணைப்பு: https://www.instagram.com/worldofmeera/?hl=en
                                  https://www.facebook.com/WorldOfMeera

மீரா குறித்து: ஆரோக்கியமான மற்றும் வலுவான கேசத் உறுதிசெய்கிற செயல்பாட்டில் 28வது ஆண்டில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் மீரா, கவின்கேர் குழுமத்தின் முதன்மையான பிராண்டுகளுள் ஒன்றாகும். தலைமுடி / கேசத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தினை உறுதிசெய்வதற்காக ஷாம்பு, மூலிகைப் பொடி, தேங்காய் எண்ணெய், மூலிகை எண்ணெய், கன்டீஷனர் மற்றும் ஹேர் வாஷ் பேஸ்ட் போன்ற பல தயாரிப்புகளின் தொகுப்பினை மீரா கொண்டிருக்கிறது. 


பாரம்பரியமான இந்திய நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் மீதான ஆழமான புரிதலிலிருந்து இந்த பிராண்ட் தனக்கான பலத்தை பெற்றிருக்கிறது மற்றும் எளிதில் பயன்படுத்தத்தக்க தற்காலத்திய வடிவங்களில் நுகர்வோர்களுக்கு அதை தயாரிப்பு பொருட்களாக வழங்குகிறது. ‘மீரா’ என்ற பிராண்ட், நுகர்வோர்கள் மற்றும் ரீடெய்லர்கள் ஆகிய இரு தரப்பினர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையையும் எழுப்புகிறது. தென்னிந்தியாவில் ஏறக்குறைய அனைத்து குடும்பங்களாலும் முழுமையாக நம்பப்படுகிற பிராண்டுகளுள் ஒன்றாக மீரா திகழ்கிறது.

கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து:

கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள, நொறுக்குத்தீனிகள், உணவுகள் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக் கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள  ஒரு எஃப்.எம்.சி.ஜி (FMCG) பெருநிறுவனமாகும்.

இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும்.

இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்க மையமானது (R&D), இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. கவின்கேர், குறிப்பிடத்தக்க பல மைல்கற்களை எட்டி சாதனைகள் படைத்திருக்கிறது. தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றுவதற்காக மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் இந்நிறுவனம், மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கிறது.

‘வாடிக்கையாளர்களுக்கு மிக அதிக அளவிலான திருப்தியை வழங்குகிற தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் நாங்கள் வளர்ச்சியை எட்டுவோம் மற்றும் இதன்மூலம் ஒரு முன் மாதிரி (ரோல் மாடல்) ஆக திகழ்வோம்’ என்ற இதன் கார்ப்பரேட் செயல்திட்டத்தை வலுவாக சார்ந்தே கவின்கேரின் வெற்றி அமைந்திருக்கிறது.

ஒருவரது வாழ்க்கையில் வெற்றிக்கான தங்களது அளப்பரிய பங்களிப்புக்காக பெண்களை அங்கீகரித்து பாராட்டி மகிழும் நடவடிக்கைகளிலும் கவின்கேர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மத்திய பட்ஜெட் அலசல் கூட்டம் ஜூலை 23 2024 UNION BUDGET 2024

மத்திய பட்ஜெட் அலசல் கூட்டம் ஜூலை 23 2024 UNION BUDGET 2024 ஆடிட்டர் வி முரளி மற்றும் அபிஷேக் முரளி சிறப்புரையாற்றுகிறார்கள் . ANALYSIS OF U...