மொத்தப் பக்கக்காட்சிகள்

எல் அன்ட் டி ஃபைனான்ஸ் லாபம் 17% அதிகரித்து ரூ.696 கோடி L&T Finance

நடப்பு நிதி ஆண்டின் 2 வது காலாண்டில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.696 கோடியாக உயர்வு

-----

பல்வேறு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்பட்ட சில்லறை கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 28 சதவீதம் அதிகரித்து ரூ.88,975 கோடியாக உயர்வு

 

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் தற்போது வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில்

18 சதவீதம் அதிகரிப்பு

 

 சில்லறை கடன் விநியோகத்தை பொறுத்தவரை செப்டம்பர் 30 வரை முடிந்த 2வது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.15,092 கோடியாக உள்ளது

 

மும்பை / சென்னை, அக். 19- இந்தியாவில் வங்கி அல்லாத நிதி சேவை வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் 30-ல் முடிவடைந்த 2வது காலாண்டில் இதன் வரிக்கு பிந்தைய லாபமானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.696 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கடன் வழங்கிய தொகையானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 28 சதவீதம் அதிகரித்து ரூ. 88,975 கோடியாக உள்ளது.

 

இது குறித்த விவரம் வருமாறு:-

 

எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளைப் பொறுத்தவரை மொத்த கடன் வழங்கிய தொகையானது நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் தற்போது 2வது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. சில்லறைக் கடனைப் பொறுத்தவரை 2வது காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.15,092 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் ஆன்லைன் சேவையைப் பொறுத்தவரை இதன் பிளானட் செயலியை இன்றைய தேதி வரை கிராமப்புறங்களை சேர்ந்த 13.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் மொத்தம் 1.25 கோடி பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். வழங்கப்பட்ட கடன் தொகையில் ஆன்லைன் செயலி மூலம் ரூ.2,400 கோடியை இந்நிறுவனம் வசூல் செய்துள்ளது.

 

இது குறித்து எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சுதிப்தா ராய் கூறுகையில், சிறப்பான செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தியது மற்றும் கடன் வசூலில் பல்வேறு புதிய யுத்திகள் ஆகியவற்றின் காரணமாக நாங்கள் நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளோம்.  நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டைப் பொறுத்தவரை பல துறைசார்ந்த தலையீடுகள் மற்றும் நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக மிகவும் சவாலாக இருந்தது.

இந்த நிலையில் முன்னோக்கிப் பார்க்கும்போது, அடுத்த இரண்டு காலாண்டுகளுக்குத் துறை சார்ந்த சவால்கள் தொடர வாய்ப்பு உள்ளது. அதே சமயம், வரும் காலாண்டுகளில், நிர்வாக வளர்ச்சியின் கீழ் உள்ள சொத்துக்களை விட நேர்மறையான கடன் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, வரவிருக்கும் காலாண்டுகளில் எங்கள் வர்த்தகத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். செப்டம்பர் 30-ல் முடிவடைந்த காலாண்டில் எங்களின் அடுத்த தலைமுறை கடன் வழங்கும் திட்டமான 'ப்ராஜெக்ட் சைக்ளோப்ஸ்', என்னும் நிதி திட்டம் மோட்டார் சைக்கிள் கடன் வழங்கும் பிரிவில் செயல்படுத்தப்பட்டது. அதை நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் எங்களின் பிற முக்கிய கடன் திட்டங்களுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

 

 

 செப்டம்பர் 30, 2024-ல் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் வழங்கப்பட்ட சில்லறை கடன் மற்றும் மொத்த கடன் தொகை குறித்த விவரம் வருமாறு:-

 

·        கிராமப்புற வணிக கடன் உதவி:

·         துறைசார் தலையீடுகள் இருந்த காரணத்தால், இந்த கடன் வினியோகமானது ரூ.5,741 கோடியிலிருந்து, 5 சதவீதம் குறைந்து ரூ.5,435 கோடியாக உள்ளது.

·         இதன் மொத்த கடன் வழங்கிய தொகையானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 22 சதவீதம் அதிகரித்து ரூ.21,672 கோடியிலிருந்து ரூ.26,539 கோடியாக உள்ளது.

·         திறமையான ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த கண்காணிப்பு ஆகியவற்றின் காரணமாக நடப்பு காலாண்டில் கடன் வசூலானது 99.45 சதவீதமாக உள்ளது.  

 

·        விவசாயிகள் கடன்:

·         விவசாயிகள் கடனைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 16 சதவீதம் அதிகரித்து ரூ.1,534 கோடியிலிருந்து ரூ.1,782 கோடி வழங்கப்பட்டுள்ளது.

·         ஆண்டுக்கு ஆண்டு மொத்த கடன் வளர்ச்சியானது 9 சதவீதம் அதிகரித்து ரூ.13,351 கோடியிலிருந்து ரூ.14,488 கோடியாக உள்ளது.

·         நல்ல பருவமழை பெய்தது, காரீப் பயிர் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

 

·        மோட்டார் சைக்கிள் கடன்:

·         ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் 32 சதவீதம் அதிகரித்து ரூ.1,817 கோடியிலிருந்து ரூ.2,393 கோடி வழங்கப்பட்டுள்ளது

·         இதன் மொத்த கடன் அளவானது 33 சதவீதம் அதிகரித்து ரூ.9,518 கோடியிலிருந்து ரூ.12,669 கோடியாக உள்ளது.

·         முதன்மையான வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக இந்த வளர்ச்சியானது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

·        தனிநபர் கடன்கள்:

·         ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 4 சதவீதம் அதிகரித்து ரூ.1308 கோடியிலிருந்து ரூ.1,361 கோடி வழங்கப்பட்டுள்ளது.

·         மொத்த கடன் வழங்கிய விகிதத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 11 சதவீதம் அதிகரித்து ரூ. 6,481 கோடியிலிருந்து ரூ7,178  கோடியாக உள்ளது

 

·        வீட்டு கடன்கள் மற்றும் சொத்துக்கு எதிரான கடன்கள்:

·         ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் 46 சதவீதம் அதிகரித்து ரூ.1,734 கோடியிலிருந்து ரூ. 2,531 கோடியாக வழங்கப்பட்டுள்ளது'

·         மொத்த கடன் வழங்கிய விகிதத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 42 சதவீதம் அதிகரித்து ரூ.15,254 கோடியிலிருந்து ரூ. 21,731 கோடியாக உள்ளது

·         பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்கப்பட்டதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

·        சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்:

·         ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகித அடிப்படையில் 43 சதவீதம் அதிகரித்து ரூ.872 கோடியிலிருந்து ரூ.1,244 கோடியாக வழங்கப்பட்டுள்ளது.

·         மொத்த கடன் வழங்கிய விகிதத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 115 சதவீதம் அதிகரித்து ரூ.2,413 கோடியிலிருந்து ரூ.5,190 கோடியாக உயர்ந்துள்ளது.

·         ஏற்கனவே உள்ள துறைகள் அல்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தியதால் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஜாக்கிரதை டிஜிட்டல் கைது

MINISTRY OF HOME AFFAIRS IC Indian Cybor Orme Coordination Contre ஜாக்கிரதை டிஜிட்டல் கைது இது எப்படி நடக்கிறது? மோசடி செய்பவர்கள், உங்கள் ப...