பொதுமக்களை சைபர், பொருளாதார குற்றங்களிலிருந்து காப்பாற்றவும், பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பெறவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், 30 சைபர் குற்ற செயல்முறைகள் குறித்து எளிதில் புரியும்படியான விளக்கப் படங்களுடன் கூடிய "முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற பெயரில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
அந்த புத்தகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் வெளியிட்டுள்ளார்.
புத்தகம்: "முத்துவும் முப்பது திருடர்களும்" - கிளிக் செய்து படித்து பயன்பெறவும்
இந்த சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை பொதுமக்கள் அனைவரும் படித்து, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சைபர் விழிப்புணர்வு புத்தகத்தை QR Code மூலமாகவும், இணையவழி Link மூலமாகவும். கணினி, செல்போன் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக