நிதி முதலீடு : Economics

Showing posts with label Economics. Show all posts
Showing posts with label Economics. Show all posts

Tuesday, May 26, 2020

சிகைக்காய்  பொடியுடன் எண்ணெய் குளியல் எடுப்பதின் முக்கியத்துவம்..!

சிகைக்காய் பொடியுடன் எண்ணெய் குளியல் எடுப்பதின் முக்கியத்துவம்..!


1990 ஆம் ஆண்டுகளில் மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான ‘வெள்ளிக் கிழமை’ விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பி அந்த சிறப்பான கடந்த காலத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் மீரா சிகைக்காய்

இந்த விளம்பரம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுவது குறித்து பேசிய மீரா பிராண்ட்-ன் மூத்த மேலாளர் – மார்கெட்டிங்,  திருமதி காயத்ரி கபிலன் கூறியதாவது: “நமது சமூகத்தின் பாரம்பரிய நடைமுறைகள் இன்றைய தலைமுறையினராலும் பரவலாக ஆர்வத்தோடு பின்பற்றப்படுவதை நாங்கள் காணத் தொடங்கியிருக்கிறோம். ஆகவே, கடந்த கால பாரம்பரிய வழிமுறையில் மீரா சிகைக்காய்  பொடியுடன் எண்ணெய் குளியல் எடுப்பதின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த இது சரியான நேரமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். மீராவின் ‘வெள்ளிக்கிழமை’ விளம்பரமானது தமிழ்நாடு எங்கும் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்தகால பாரம்பரியத்தோடு இதனையும் சிறப்பாக நுகர்வோர்களால் இணைத்துப்பார்க்க ஏதுவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மனதில் ஆழமான இடம்பிடித்த கிளாசிக் நெடுந்தொடர்கள், 1990-களில் வெளிவந்த திரைப்படங்கள் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு இடையே இந்த விளம்பரமும் ஒளிபரப்பாகிறது. இந்த கடந்தகால பிரபல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான அந்த காலகட்டத்திலும் அதிகமாக விளம்பரம் செய்த பிராண்டாக நாங்கள் இருந்திருப்போம் மற்றும் அதே நிகழ்ச்சிகளை நுகர்வோர்கள் மீண்டும் தொலைக்காட்சியில் பார்க்கும்போது எமது விளம்பரத்தோடு அவர்களால் அதை தொடர்புபடுத்தி பார்க்கவும், அத்தகைய நேரத்தில் இந்த பாரம்பரிய எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை சரியாக உணரவும் முடியும். ஒரு பிராண்டாக மீரா எப்போதுமே தென்னிந்திய நுகர்வோர்களோடும் மற்றும் அவர்களோடு பின்னிப்பிணைந்த சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களோடும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக வலுவான பிணைப்பினை கொண்டு இருக்கிறது. கடந்தகால திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர் நிகழ்ச்சிகளை நுகர்வோர்கள் இப்போது பார்க்கும்போது அந்த உணர்வை முழுமையாக்குவதற்கு மீரா போன்ற கடந்தகால பிரபல விளம்பரங்களைவிட வேறு எது வலு சேர்க்கமுடியும்?”.

இந்தத் தொலைக்காட்சி விளம்பரப்படமானது, சித்தி, மெட்டி ஒலி மற்றும் 1990-களில் பிரபல வெற்றிபெற்ற வேறு பிற நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்படுகிற நேரத்தில் சன் டிவி போன்ற முதன்மையான அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும்.

விளம்பர இணைப்பு: https://youtu.be/ChB2oD6p6CE

சமூக ஊடக இணைப்பு: https://www.instagram.com/worldofmeera/?hl=en
                                  https://www.facebook.com/WorldOfMeera

மீரா குறித்து: ஆரோக்கியமான மற்றும் வலுவான கேசத் உறுதிசெய்கிற செயல்பாட்டில் 28வது ஆண்டில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் மீரா, கவின்கேர் குழுமத்தின் முதன்மையான பிராண்டுகளுள் ஒன்றாகும். தலைமுடி / கேசத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தினை உறுதிசெய்வதற்காக ஷாம்பு, மூலிகைப் பொடி, தேங்காய் எண்ணெய், மூலிகை எண்ணெய், கன்டீஷனர் மற்றும் ஹேர் வாஷ் பேஸ்ட் போன்ற பல தயாரிப்புகளின் தொகுப்பினை மீரா கொண்டிருக்கிறது. 


பாரம்பரியமான இந்திய நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் மீதான ஆழமான புரிதலிலிருந்து இந்த பிராண்ட் தனக்கான பலத்தை பெற்றிருக்கிறது மற்றும் எளிதில் பயன்படுத்தத்தக்க தற்காலத்திய வடிவங்களில் நுகர்வோர்களுக்கு அதை தயாரிப்பு பொருட்களாக வழங்குகிறது. ‘மீரா’ என்ற பிராண்ட், நுகர்வோர்கள் மற்றும் ரீடெய்லர்கள் ஆகிய இரு தரப்பினர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையையும் எழுப்புகிறது. தென்னிந்தியாவில் ஏறக்குறைய அனைத்து குடும்பங்களாலும் முழுமையாக நம்பப்படுகிற பிராண்டுகளுள் ஒன்றாக மீரா திகழ்கிறது.

கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து:

கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள, நொறுக்குத்தீனிகள், உணவுகள் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக் கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள  ஒரு எஃப்.எம்.சி.ஜி (FMCG) பெருநிறுவனமாகும்.

இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும்.

இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்க மையமானது (R&D), இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. கவின்கேர், குறிப்பிடத்தக்க பல மைல்கற்களை எட்டி சாதனைகள் படைத்திருக்கிறது. தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றுவதற்காக மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் இந்நிறுவனம், மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கிறது.

‘வாடிக்கையாளர்களுக்கு மிக அதிக அளவிலான திருப்தியை வழங்குகிற தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் நாங்கள் வளர்ச்சியை எட்டுவோம் மற்றும் இதன்மூலம் ஒரு முன் மாதிரி (ரோல் மாடல்) ஆக திகழ்வோம்’ என்ற இதன் கார்ப்பரேட் செயல்திட்டத்தை வலுவாக சார்ந்தே கவின்கேரின் வெற்றி அமைந்திருக்கிறது.

ஒருவரது வாழ்க்கையில் வெற்றிக்கான தங்களது அளப்பரிய பங்களிப்புக்காக பெண்களை அங்கீகரித்து பாராட்டி மகிழும் நடவடிக்கைகளிலும் கவின்கேர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
 மீரா சிகைக்காய் : மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான வெள்ளிக் கிழமை விளம்பரம் மீண்டும் ஒளிபரப்பு..

மீரா சிகைக்காய் : மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான வெள்ளிக் கிழமை விளம்பரம் மீண்டும் ஒளிபரப்பு..1990 ஆம் ஆண்டுகளில் மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான ‘வெள்ளிக் கிழமை’ விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பி அந்த சிறப்பான கடந்த காலத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் மீரா சிகைக்காய்

சென்னை,  மே 26, 2020: இதற்கு முன்பு ஒருபோதும் சந்தித்திராத கோவிட்-19 தொற்றுப் பரவலின் இக்கட்டான சூழலில். நாளின் பெரும்பகுதியை நமது வீடுகளுக்குள்ளேயே செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிற நிலையில் இந்த நெருக்கடியான, நிச்சயமற்ற தன்மையின் காரணமாக உருவாகிற மன அழுத்தத்தை சமாளிப்பதில் சிரமம் அதிகமானதாக மாறிவருகிறது.

பாரம்பரியம் என்பது அனைத்தையும் தனக்குள் உள்ளடக்கியிருக்கிறது என்றும் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும் அது உறுதுணையாக இருக்கும் என்றும் கவின்கேர் குழுமத்தின் பிரபலமான முதன்மை பிராண்டுகளுள் ஒன்றான மீரா உறுதியாக நம்புகிறது.

இருகரம் கூப்பி வணக்கம் என்று சொல்லி வரவேற்பதில் தொடங்கி வெளியிலிருந்து வீட்டிற்குள் வருகிறபோது கைகளையும், கால்களையும் சுத்தம் செய்வது வரை நமது பாரம்பரியமான நடைமுறையின் முக்கியத்துவத்தை இந்த உலகம் மெதுவாக உணர தலைப்படுகிற நிலையில் மற்றொரு மிக முக்கியமான நமது பாரம்பரிய வழக்கம் ஒன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்த பிராண்ட் மீரா முடிவு செய்திருக்கிறது. சிகைக்காய் (பேச்சு வழக்கில் சீயக்காய்) பயன்படுத்தி எண்ணெய் தேய்த்து குளிக்கிற வழக்கம்தான் அது. 1990களின் காலகட்டத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்த அந்த இனிய நினைவுகளை மீண்டும் கொண்டுவருவதற்காக தங்களது மிகப் பிரபலமான ‘வெள்ளிக்கிழமை’ விளம்பர படத்தை மறு ஒளிபரப்பு செய்யவிருப்பதாக மீரா அறிவித்திருக்கிறது.ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இல்லமுமே இந்த விளம்பரப்படம், அதன் அற்புதமான இசை மற்றும் இனிய, பாரம்பரியமான சடங்குகளோடு வலுவாக தொடர்புபடுத்தி பார்ப்பார்கள் என்பது நிச்சயம். தனது மகளுக்கு ஓர் அம்மா பாசத்தோடு ரிலாக்ஸ் செய்யும் எண்ணெய் மசாஜ் செய்கிறார் என்பதையும், அதைத் தொடர்ந்து 11 இயற்கையான மூலிகைகளின் கலவையான மீரா மூலிகைப் பொடியின் மூலம் தலைக்கேசத்தை தூய்மையாக்குவதை எப்படி செய்கிறார் என்பதையும் இனிய இசையோடு கூடிய அந்தக் காட்சி சித்தரிப்பு அழகாக எடுத்துக்காட்டியிருந்தது. அளவுக்கு அதிகமான உடல்வெப்பமானது, குறிப்பாக சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில் தலைவலி, முடி உதிர்வு, முறையான தூக்கம் வராமை போன்ற பல பிரச்னைகளை விளைவிக்கக்கூடும். மீரா சிகைக்காய் பொடியுடன் உடலுக்கு புத்துயிரூட்டி புத்துணர்வு தரும் எண்ணெய் மசாஜ் குளியல் இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் வராமல் தடுப்பதோடு எண்ணற்ற பிற ஆரோக்கிய பலன்களையும் உங்களுக்கு வழங்குகிறது.

Sunday, May 24, 2020

இந்தியாவில் பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உருவாக்கிய, விற்ற பிரதமர்கள் முழுமையான பட்டியல்....

இந்தியாவில் பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உருவாக்கிய, விற்ற பிரதமர்கள் முழுமையான பட்டியல்....

இந்தியாவில் பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உருவாக்கிய பிரதமர்கள்.

ஜவஹர்லால் நேரு: 33 நிறுவனங்கள்

லால் பகதூர் சாஸ்திரி  5

இந்திரா காந்தி  66

மொராஜி தேசாய்  9

ராஜீவ் காந்தி  16

வி.பி.சிங்  2

நரசிம்மராவ் 14

தேவகவுடா & குஜ்ரால் 3
வாஜ்பாய் 7

மன்மோகன்சிங் 21
நரேந்திர மோடி  0.

பொதுத்துறை அரசு நிறுவனங்களை தாரை வாா்த்த (அ) விற்ற பிரதமர்கள்.

வாஜ்பாய் 7

மன்மோகன்சிங்  3

நரேந்திர மோடி 23...

இதில் சிறப்பம்சம் என்னவெனில், ஒன்றுமே உருவாக்காத ஒருவர் 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்த்தது தான்!...

- Alfred Noble

Monday, May 4, 2020

சோசியலிசம், கம்யூனிசம், ஜனநாயகம், முதலாளித்துவம், நாசிசம், பாசிசம் எளிய விளக்கம்

சோசியலிசம், கம்யூனிசம், ஜனநாயகம், முதலாளித்துவம், நாசிசம், பாசிசம் எளிய விளக்கம்


Economics SOCIALISM COMMUNISM DEMOCRACY
சோசியலிசம், கம்யூனிசம், ஜனநாயகம், முதலாளித்துவம், நாசிசம், பாசிசம் எளிய விளக்கம்


சோசியலிசம்

இரண்டு மாடு வைத்திருப்பவன் ஒன்றை அடுத்தவனுக்கு கொடுத்தால் அது #சோசியலிசம் (#SOCIALISM)

கம்யூனிசம்

இரண்டு மாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு தேவையான பாலை மட்டும் வாங்கி கொண்டால் அது #கம்யூனிசம் (#COMMUNISM)

ஜனநாயகம்

இரண்டு மாடுகளிலும் பால் கரந்து தானே பயன்படுத்தினால் #ஜனநாயகம் (#DEMOCRACY)

முதலாளித்துவம்

ஒரு மாட்டை விற்று காளை வாங்கி குட்டி போட வைத்து பண்ணையாக்கினால் #முதலாளித்துவம் (#CAPITALISM)


நாசிசம்

அதே இரண்டு மாட்டை அரசாங்கம் பிடுங்கி கொண்டு வைத்திருந்த  உரிமையாளரை (Owner) கொன்று விட்டால் அது #நாசிசம் (#NAZISM)

பாசிசம்

இரண்டு மாட்டையும் அரசு பிடுங்கிக் கொண்டு அவனிடமே அந்தப் பாலை விற்றால் அது #பாசிசம்(#FASCISM)*


 இவ்வளவு பெரிய அரசியலை இவ்வளவு எளிமையாக விளங்கியவர்

பாவேந்தர் பாரதிதாசன்


Friday, December 27, 2019

உலக அளவில் இந்தியாவுக்கு முதல் இடம் வங்கிகளின் வாராக் கடன்

உலக அளவில் இந்தியாவுக்கு முதல் இடம் வங்கிகளின் வாராக் கடன்

வங்கிகளின் வாராக் கடன்
உலக அளவில் இந்தியாவுக்கு முதல் இடம்இந்தியா 9.2%
சீனா 1.8%

இதுவே இந்தியப் பொருளாதாரம் 
எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது 
என்பதற்கு சிறந்த உதாரணம். 
இதை சரி செய்ய மத்திய அரசு எடுத்து வரும் பெரு நிறுவன வரி (கார்ப்பரேட் டேக்ஸ்) போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. 


2019 இரண்டாம் காலாண்டு நிலவரம் 
BANK NPA WORLD

Sunday, October 13, 2019

பி.எஸ்.என்.எல்  பிரச்னைக்கு தீர்வு உங்கள் கைகளில்தான்

பி.எஸ்.என்.எல் பிரச்னைக்கு தீர்வு உங்கள் கைகளில்தான்

பி எஸ் என் எல் –  இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் ஆழ்த்தி விட்டார்,

இழுத்து மூடப் போகிறார்,  அம்பானிக்கு சாமரம் வீசுகிறார் –

அரசு துறைகளை இழுத்து மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்,

நாட்டையே தனியார் கார்ப்பொரேட்டுகளுக்கு விற்று விடுவார் –

இப்படியெல்லாம் பிரதமர் மோடியைப் பற்றிய ஒரு குற்றச்சாட்டு நடமாடிக் கொண்டிருக்கிறது.

ஆச்சரியம் என்னவென்றால்  கம்யூனிஸ்டுகள் தவிர இந்தக்   குற்றச்சாட்டுகளை வீசுபவர்கள் யாரென்று பார்த்தால் அது தமிழ்நாட்டு மீம்ஸ் புலிகள் மட்டுமே.

 ஏனென்றால் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்தபடியாக எந்த ஒரு விஷயத்தையும்  அதன் அடிப்படை என்னெவென்று கூடப் புரிந்து கொள்ளாமல் மணிக்கணக்கில் எதிர்த்துப் பேசிக்கொண்டேயிருக்கக் கூடிய திறமை இந்த மீம்ஸ் புலிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும்தான் உண்டு.

2004-05ம் ஆண்டுகளில் பி எஸ் என் எல்லின் நிகர லாபம் 10,183 கோடிகள்.அதாவது அதுவரைக்கும் பி எஸ் என் எல் நிறுவனம் லாபம் ஈட்டும் நிறுவனமாகத்தான் இருந்து வந்தது.

 2004 மே மாதம் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார்.

2009 தேர்தலுக்குப் பின்னும் அவரே பிரதமரானார்.

  2009-10ல் முதல் முறையாக 1.823 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது.

2010-11ல்  நிகர நஷ்டம் 6,386 கோடிகளானது.

2011-12ல் நிகர நஷ்டம் 8,851 கோடிகள் ஆனது.

2012-13ல் நிகர நஷ்டம் 8,198 கோடிகள் ஆனது.

இந்த கால கட்டத்தில் மோடி பிரதமர் இல்லை என்பதை மீம்ஸ் புலிகள் மறந்து விட்டார்கள்.

அடுத்தது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் தொழிலாளர் ஊதியம் என்ற வகையில் அவர்கள் செலவிடுவது அதிகபட்சம் 7% மட்டுமே.

ஆனால் அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லில் சம்பளமாக மட்டுமே 60% வரைக்கும் செலவாகிறது.

நீங்களே யோசித்துப் பாருங்கள் –  நீங்களும் உங்கள் நண்பரும் விவசாயிகள்.  நீங்கள் 60 ரூபாய் கொடுத்து கூலிக்கு ஆளை வைத்து விவசாயம் செய்கையில் உங்கள் நண்பர் 7 ரூபாய் கூலி கொடுத்து ஆளை இறக்குகிறார்.  யாருக்கு லாபம் கிடைக்கும்?

இது சம்பளம் மட்டுமல்ல – உங்கள் நண்பர் 10 பேரை வைத்து அறுவடை செய்து விடுகிறார், ஆனால் நீங்கள் 100 பேரை வைத்து அறுவடை செய்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் நெல்லுக்கு நீங்கள் சொல்லும் விலை எவ்வளவு இருக்கும்? உங்கள் நண்பர் சொல்லும் விலை எவ்வளவு இருக்கும்?

 கட்டாயமாக உங்களை விட பல மடங்கு குறைவாகத்தான் உங்கள் நண்பரின் விலை இருக்கும், அப்படியும் அவருக்கு லாபம் கிடைக்கும்.

கடைசியில் உங்கள் நெல்லை நீங்களே அரிசியாக்கித் தின்ன வேண்டியதுதான். எவ்வளவு நாள்?  கூலி கொடுக்கக் கூட பணமில்லாமல் நீங்கள் விவசாயத்தை நிறுத்த வேண்டியதுதான். இல்லையென்றால்  வேறு வியாபாரம் அல்லது தொழில் செய்து அதிலே லாபம் வந்தால் அதனை இந்த நஷ்டத்தில் ஈடுகட்ட வேண்டியதுதான்.

கஷ்டப்பட்டு தொழில் செய்து லாபம் ஈட்டி அதனை இந்த நஷ்டத்திலே போட வேண்டுமென்றால் வீட்டிலே எல்லாரும் சும்மா இருப்பார்களா?

இதுதான் ஏர் இண்டியா விஷயத்திலும் நடந்தது.

போட்டியில்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவரை ஒன்றும் தெரியவில்லை. தனியார் விமான கம்பெனிகள் வந்ததும் ஏர் இண்டியாவின் ஆதிக்கம் சரிந்தது.

மேலே சொன்ன விவசாயம் மாதிரிதான்.

 சம்பளம் கூடுதல், ஊழியர்களும் அதிகம், அதனால் கட்டணங்களும் அதிகம்.

ஆனால் இதைவிட பாதி கட்டணத்தில் தனியார் விமானங்கள் சேவை அளிக்கையில் ஏர் இண்டியா படுத்து விட்டது.

 எத்தனை வருடம்தான் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சகித்துக் கொள்வது?

தனியார் துறைக்குத் திறந்து விடப்பட்ட எல்லா அரசு நிறுவனங்களின் நிலையும் இதுதான்.  மாற்றமேயில்லை.

 தனியார் துறையில் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலையும் நிரந்தரம், சம்பளமும் கூடிக் கொண்டே இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.

வேலைத் திறன் குறைந்தால் கல்தா என்ற நிலையில் சோம்பித் திரிய முடியாது.


ஒன்று பி எஸ் என் எல் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும், அவர்களது ஊதியமும் குறைய வேண்டும்,

அல்லது தனியார் துறையில் சம்பளம் அதிகரிக்க வேண்டும்.  நடக்கிற காரியமா?சரி, அடுத்த விஷயத்துக்கு வருவோம்.

 தபால் துறை கூடத்தானே நஷ்டத்தில் இயங்குகிறது? அப்படி இருக்க அதனை மூடலாமே?  இதுவும் இன்னொரு அதிமேதாவித்தனமான கேள்வி.

தபால் துறையை இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் கோடிக்கணக்கான இந்தியர்கள் இன்றும் பயன்படுத்துகிறார்கள்.

தபால் துறையை இழுத்து மூடினால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள்.  அதே சமயத்தில் தபால் துறையின் சேவையை தனியாரால் கொடுக்க முடியாது.

இப்போது இதை மனதில் கொண்டு பி எஸ் என் எல்லைப் பார்ப்போம்.

எத்தனை தனியார் கொரியர்  நிறுவனங்கள் வந்தாலும் தபால் துறையின் பங்கு குறையவில்லை.

கொரியர் நிறுவனங்களால் தபால் துறை அளவுக்கு சேவை அளிக்க முடியாது. அதே சமயம் தபால் துறையை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்கு அபாயகரமாகக் குறையவில்லை.  எந்த அளவுக்கு என்று கேட்கிறீர்களா?


இன்றைக்கு பி எஸ் என் எல் லை உபயோகிப்பவர்களின் சதவீதம் என்ன தெரியுமா?

பத்து சதவீதத்துக்குக் கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான்.

 கொஞ்சம் நில்லுங்க.

2013-14லேயே அது 13% க்கு வந்து விட்டது,

 அதனால இதுவும் அம்பானி–அதானின்னு கூத்தடிக்காதீங்க டோலர்ஸ்.

இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன்.  பி எஸ் என் எல் லை மூடக்கூடாது என்று குதிக்கும் மூடர்கூட்டமே  நீங்கள் பி எஸ் என் எல் சிம் வைத்திருக்கிறீர்களா?

இவிங்க மட்டும் பி எஸ் என் எல் லை உபயோகிக்க மாட்டார்களாம், ஆனால் பி எஸ் என் எல் நிறுவனம் மட்டும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க வேண்டுமாம்,

அட மூடர் கூடமே அந்த நஷ்டத்தை அரசாங்கம்தான் ஈடு செய்ய வேண்டும், அந்த கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் என்பது நீயும் நானும் கட்டும் வரியில்தான் ஈடு செய்யப்படும்,

அது சரி, நேர்மையா வரி கட்டுறவனுக்குத்தானே கஷ்டம்….

முகேஷ் அம்பானி இலவசமாக் கொடுத்து எல்லாத்தையும் இழுத்து மூடிட்டார்.  சரி,  இது ஒண்ணும் புதுசு இல்லே டுமீல்ஸ்.

சுமார் 50 வருஷத்துக்கு முன்னாடியே கும்பகோணம் – திருவாரூர் ரூட்டுல தனியார் பஸ்ஸுல போட்டியை சமாளிக்க போட்டி போட்டிக்கிட்டு டிக்கெட் விலையைக் குறைச்சு எங்க பஸ்ஸில வந்தா ஃபில்டர் காபி இலவசம்னு எதிர் கம்பெனியை இழுத்து மூட வெச்ச கதையெல்லாம் தெரியுமா?

முன்னாள் நிதியமைச்சர் மற்றும் நிரந்தர நம்பர் 2

நாவலர் நெடுஞ்செழியன் ஒரு முறை வருத்தப்பட்டார் –

நாலஞ்சு பஸ்ஸு வெச்சிருக்கற முதலாளியெல்லாம் லட்சாதிபதியா இருக்கான், ஆனா ஆயிரக்கணக்குல பஸ்ஸு வெச்சிருக்க கவர்மெண்டு மட்டும் நஷ்டத்துலயே ஓடுது?

யோசிச்சுப் பார்த்தா உண்மை புரியும்.

அரசு  நிறுவனங்கள் எதுவானாலும், தனியார் துறையில் அதே வேலையை செய்ய வைத்திருக்கும் ஆட்களை விடவும் பலமடங்கு அதிக ஊழியர்கள்,

தனியார் துறையை விடவும் பலமடங்கு அதிக சம்பளம்.

ஆனால் தனியார் துறை ஊழியர்களை விடவும் குறைந்த அளவு பணி.

இதுக்கு மேலே என்னத்த சொல்ல?

2015 பெருவெள்ளத்தின் போது சென்னை மாநகரமே மின்சாரம் இன்றித் தவித்தாலும் தொடர்ந்து ஜெனரேட்டர்களை இயக்கி மொபைல் தொடர்பு குலையாமல் வைத்திருந்தது பி எஸ் என் எல் நிறுவனம்தான்.  தனியார் மொபைல் எல்லாம் காணாமல் போன பிறகும் சிக்னல் இருந்தது பி எஸ் என் எல் மட்டும்தான்.  பி எஸ் என் எல்லின் தரைவழித் தொலைபேசி சேவைகள் மட்டுமே அந்த வெள்ள காலத்திலும் இயங்கிக் கொண்டிருந்தது.  இதையெல்லாம் மறுக்கவில்லை.

 இதனை தனியார் நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.ஆனால்

 தொடர்ந்து ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் என்றால் அது மக்களின் வரிப்பணம்தானே?

 இன்னும் கொஞ்சம் யோசித்தால் இந்த ஆயிரக்கணக்கான கோடிகளில் பெரும்பங்கு ஊழியர்களின் சம்பளமாகத்தான் போகிறது.

 சில லட்சம் பேர் சம்பாதிக்க கோடிக்கணக்கானவர்களின் வரிப்பணம் வீணாகலாமா?

திருவாரூருக்கு அருகில் கூத்தூர் என்று ஒரு ரயில் நிலையம் இருந்தது.  ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால் அதிகம்.  அதனால் ரயில்வே நிர்வாகம் அந்த ரயில் நிலையத்தை மூடலாம் என்று முடிவெடுத்தது. உடனே ஊர்மக்கள் போராட்டம் ஆரம்பித்தனர்.  நிர்வாகம் பொதுமக்களை அழைத்துப்பேசியது.

நீங்க யாரும் ரயிலிலே போக மாட்டீர்கள், ஆனால் ரயில் மட்டும் உங்கள் ஊரில் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?

 யாருமே ஏறாத போது, நாலைந்து பேருக்காக மட்டும் ஒரு நாளைக்கு நாலு ரயில் இந்த ஊரில் நிற்க வேண்டுமா?

என்று கேட்டதும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இனிமேல் எல்லோரும் தினமும் ஒரு முறை ரயிலில் ஏறி திருவாரூர் அல்லது நாகப்பட்டினம் சென்று வர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு

 ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு டிக்கெட் விற்க ஆரம்பித்தது – 1992ல்.  இதனால் ரயில் நிலையத்தை மூடும் திட்டம் கைவிடப்பட்டது.

அப்படியே பி எஸ் என் எல் மூடப்படக்கூடாது என்று நினைத்தால் அது அரசின் கையில் இல்லை. உங்கள் கைகளில்தான் உள்ளது.

 புரியவில்லையா?

இன்றைக்கு எல்லா மொபைலிலும் இரண்டு சிம் வசதி இருக்கிறது.  ஒன்று உங்களுக்குப் பிடித்த தனியார் சிம்மாக இருக்கட்டும். இன்னொன்று பி எஸ் என் எல் ஆக இருக்கட்டும்.  அவுட்கோயிங் கால் எல்லாம் தனியார் சிம்மில் செய்யுங்கள்.  இன்கமிங் கால் என்பது பி எஸ் என் எல் எண்ணில் மட்டுமே என்று எல்லோருக்கும் கூறுங்கள்.

 ஆபத்து காலத்தில் உதவுமே என்று ஒரு தரைவழி தொலைபேசி இருப்பதிலேயே குறைந்த கட்டணத்தில் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.  மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டைத் தொடர்பு கொள்ள அதுதானே சிறந்த வழி!

ஆனால் நான் மீம்ஸ் மட்டுமே போடுவேன், விவரங்களை விளங்கிக் கொள்ளாமல் கருத்து மட்டுமே கூறுவேன் என்று புரளும் டோலர்களுக்கு இது கஷ்டமாகத்தான் இருக்கும்.


ஒன்றே ஒன்று கேட்கிறேன் –  பி எஸ் என் எல் தொலைபேசி சேவையில் உங்களுக்கு முழு திருப்தி உள்ளதா?

ஊழியர்களால் உங்களுக்கு பிரச்சினையில்லாமல் இருக்கிறதா?

 ஏதேனும் தடங்கல் என்றால் பிரச்சினை உடனே சரி செய்யப்படுகிறதா?

 வாடிக்கையாளர் சேவை நன்றாக இயங்குகிறதா?

 இதற்கெல்லாம் ஆமாம் என்று சொல்ல முடிந்தால் ஸேவ்பிஎஸ்என்எல் என்று  சொல்ல நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.

- யாரோ

Monday, September 9, 2019

இந்தியா -  புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் மதிப்பு

இந்தியா - புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் மதிப்பு

இந்தியா -  புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் மதிப்பு

இந்தியா
புழக்கத்தில் உள்ள
ரொக்கப் பணத்தின்
மதிப்பு


4 நவம்பர் 2016
 ரூ. 17.97 லட்சம் கோடி

ஏப்ரல் 28, 2017
ரூ. 14.32 லட்சம் கோடி


26 ஆக., 2017

Tuesday, August 13, 2019

செலவு செய்வதில் கூடுதல் கவனம்.. கடுமையான நிதி, பொருளாதார நெருக்கடி காலங்கள் பராக்..!

செலவு செய்வதில் கூடுதல் கவனம்.. கடுமையான நிதி, பொருளாதார நெருக்கடி காலங்கள் பராக்..!

செலவு செய்வதில் கூடுதல் கவனம்.. கடுமையான நிதி, பொருளாதார நெருக்கடி காலங்கள் பராக்..!

இந்தியாவில் அறிவிக்கப்படாத நிதி  மற்றும்  பொருளாதாரநெருக்கடி நிலை  தற்போது நிலவி வருகிறது. 

 பொதுமக்களுக்கு இதன் தாக்கம் மிக மெதுவாகத்தான் தெரியவரும். தொடர்ந்து வரவிருக்கும் பெரும் நெருக்கடிகளுக்கு இது ஒரு சாம்பிள் 

 வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிக்கின்றன என்றால் என்ன அர்த்தம்.? புதிய முதலீடுகள் வரவில்லை என்று அர்த்தம்..? 

திவாலானதாக அறிவிக்கும் முறைகள், மற்றும் இந்த கார்ப்பரேட்டுகளின் தொடர்ந்த ஊழல்களால் இது நடக்கிறது.

 கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகள் விலை போகவில்லை. வாங்க யாரும் வரவில்லை.. இதன் பொருள் ஸ்டீல், சிமெண்ட்,. பாத்ரூம் ஃபிட்டிங்குகள், கட்டுமானங்கள் ஆகியவை பெரும் சரிவை சந்திக்கப் போகின்றன. 

இதன் காரணமாக வங்கிகளின் வாராகடன்கள் நிச்சயம் மிக மிக அதிகரிக்கப் போகின்றன. 
வெறும் கம்பெனிகள் மட்டுமில்லாமல் தனிப்பட்ட நபர்களும் கடனை கட்ட முடியாமல் வாராக்கடன் பட்டியலில் சேரும் நிலைமை அதிகரிக்கப் போகிறது. ஆக சிக்கல் மேலும் அதிகரிக்கப் போகிறது.

வாகன விற்பனையும் சரிந்து வருகிறது. இந்த நிமிடத்தில் பார்த்தோம் என்றால் இந்திய வரலாற்றில் முதன் முறையாக இரு சக்கர வாகன விற்பனை விகிதம் மைனசில் போய்க் கொண்டிருக்கிறது.
மாருதி தனது உற்பத்தியை 50% குறைத்துவிட்டது. பல வாகன விற்பனையாளர்கள் தங்கள் ஷோரூம்களை மூடி வருகிறார்கள். இதன் விளைவாக ஸ்டீல், டயர்கள் மற்றும் அக்சசரிகளின் விற்பனை படுபயங்கரமா வீழ்ச்சியை சந்திக்கும்.

 மேற்சொன்ன மூன்று காரணங்களின் மூலமாகவே கோடிக்கணக்கான வேலை இழப்புகள் வரப் போகின்றன. 

முக்கியமாக அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் கணிசமான அளவுக்கு குறையப்போகிறது. வருவாய் குறைந்தால் அரசு சும்மா இருக்குமா.? இழந்த வருவாயை சரி செய்ய மேலும் மேலும் வரிகளைப் போட்டு மக்களின் முதுகை ஒடிக்கப் போகிறது. 

வரும் வருமானம் அனைத்தையும் அரசு தனியார் கம்பெனிகளிடம் அப்படியே தூக்கிக் கொடுத்து விடுகிறது. வரும் பற்றாக்குறைக்கு மட்டும் மக்கள் மீது வரி போட்டு சுரண்டுகிறது. இந்த மாதிரி பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் இந்த அரசு என்ன செய்யும்.. 

அரசின் சொத்துகள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கத் துவங்கும். அரசின் நஷ்டம் மேலும் மேலும் அதிகரிக்கத் துவங்கும்.

இந்த பொருளாதார சரிவின் தாக்கத்தை பொதுமக்கள் 2020 மார்ச் வாக்கில் உணரத் துவங்குவார்கள். ஏனென்றால் தற்போது சாமானிய இந்தியர்கள் யாருக்கும் இதன் தாக்கம் இன்னமும் உறைக்கவில்லை. 

அன்றாட தேவைகளான குளியல் சோப்பு, ஷாம்பூ, சோப் பவுடர்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட விற்க முடியாத நிலை அல்லது அதை மக்கள் வாங்க முடியாத நிலையும் சீக்கிரம் வரப் போகிறது. 

 கடந்த சில வருடங்களாகவே இந்த FMCG எனப்படும் அன்றாடம் விற்பனையாகும் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை டிவியில் விளம்பரம் வருமே.. 

அந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களுக்கான விளம்பரங்களை கடைசியாக நீங்கள் டிவியில் எப்போது பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா.? 

இரண்டு வருடங்களுக்கு முன்பு பதஞ்சலி டிவி விளம்பரங்களில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாகவே பதஞ்சலி இறங்கு முகத்தில் இருக்கிறது. அரசின் சப்போர்ட்டோடு படு வேகமாக முன்னேறி வந்த பதஞ்சலியே வீழ்ச்சியை சந்திக்கிறது என்பதுதான் அபாயத்துக்கான அறிகுறி. 

அன்றாடப் பொருட்களை விடுங்கள்.. பதஞ்சலி ஆயுர்வேதா எனப்படும் பதஞ்சலி மருந்துகளின் விற்பனையே 2018 ல் இருந்து பத்து சதவீதம் வீழ்ச்சியில்தான் இருக்கிறது. பதஞ்சலி போன்ற கம்பெனிகள் மட்டுமல்ல.. ராட்சத நிறுவனமான ஹிந்துஸ்தான் லீவரின் விற்பனையே இறங்குமுகத்தில்தான் உள்ளது. நகர்ப்புறங்களில் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களான சோப்பு, டூத் பேஸ்ட், தலைக்குத் தேய்க்கும் எண்ணை, பிஸ்கட்டுகள் போன்ற எண்ணற்ற பொருட்களின் விற்பனை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. 

விற்பனை சரிவதால் கம்பெனிகளின் லாபமும் சரிந்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்குள்தான் அன்றாட தேவைப் பொருட்களோடு, இரு சக்கர வாகனங்கள், குறைந்த விலை கார்கள் ஆகியவை வருகின்றன.

இப்போது அடுத்த பிரச்னையான போக்குவரத்து வருகிறது. இந்திய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்..

 நவம்பர் 2018 க்கு மேல் வாடகை லாரிகளின் வருமானம் 15% சரிந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. பெருமளவு இடமாற்றம் செய்யும் fleet வகை போக்குவரத்து அதை விட அதிகமான சரிவைச் சந்தித்திருக்கிறது. 

 அனைத்து 75 தேசிய வழித் தடங்களிலும் போக்குவரத்து சொல்லத்தக்க அளவு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் பெருமளவு போக்குவரத்தான fleet transportation கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 25% முதல் 30% வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்றால் நிலைமையின் தீவிரத்தை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். 

ஆக லாரி ஓனர்களின் வருவாயும் 30%  சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 

ஆக அடுத்த காலாண்டில் பெரிய பாதிப்பு காத்திருக்கிறது. பெருமளவு இடமாற்றம் செய்யும் பல போக்குவரத்து அதிபர்கள் தங்கள் மாதாந்திர தவணையை கட்ட முடியாமல் போகக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது. அது மேலும் ஒரு வீழ்ச்சிக்கு வித்திடப் போகிறது.

 சரக்கு இட மாற்றத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த பெரும் வீழ்ச்சிக்கு காரணம் தொழில்ரீதியான உற்பத்தி பெரும் சரிவை சந்தித்திருப்பதுதான். அதாவது தேவைகள் குறைந்துவிட்டதால் உற்பத்தி குறைந்துவிட்டது. உற்பத்தி இல்லாததால் லாரி போக்குவரத்தின் தேவையும் குறைந்துவிட்டது. அவ்வளவுதான். 

நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி, நுகர்வோர் (consumers) தங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய உற்பத்தியும் மிக மிக மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரலுக்குப் பிறகு விவசாயப் பொருட்களின் தேவை கூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். பழம் மற்றும் காய்கறிகளின் தேவை கூட 20% குறைந்துவிட்டது. 


இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் போகப் போக ஒவ்வொரு துறையாக அடி வாங்கப் போகின்றன. 
ஆகவே மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராக இருங்கள் நண்பர்களே..

Wednesday, July 31, 2019

நரேந்திர மோடி புதிய  அமைச்சரவை பட்டியல்: 55 அமைச்சர்கள் முழு விவரம்

நரேந்திர மோடி புதிய அமைச்சரவை பட்டியல்: 55 அமைச்சர்கள் முழு விவரம்


நரேந்திர மோடி புதிய  அமைச்சரவைபட்டியல்: 55 அமைச்சர்கள் முழு விவரம்

திரு. நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமராக பதவியேற்றார்.
அவருடன் சேர்ந்து கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல்

1. பிரதமர் நரேந்திர  மோடி

பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. வாரணாசி தொகுதியில் காங்கிரஸின் அஜய் ராயை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


2. ராஜ்நாத்சிங்

உள்த்துறை அமைச்சராக கடந்த ஐந்தாண்டுகளில் பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங் ஆவார். உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். அங்கு இருக்கும் 80 மக்களவைத் தொகுதியில் ஒன்று தான் லக்னோ. இங்கு போட்டியிட்டு கடந்த முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டார்.
பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்த இவர் கோரக்பூர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இம்முறையும் லக்னோவில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் இவரை எதிர்த்து ஆச்சரியா ப்ரமோத் கிருஷ்ணம் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் + சமாஜ்வாடி கூட்டணி சார்பில் இவரை எதிர்த்து பூனம் சின்ஹா போட்டியிட்டார். 6,33,206 வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.

3. அமித்ஷா

மாநிலங்கள் அவையின் உறுப்பினராக இருந்தவர், எல்.கே. அத்வானியின் தொகுதியான குஜராத் காந்தி நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

4. நிதின்கட்கரி

மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக கடந்த ஆட்சியில் பணியாற்றி வந்தவர். 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருக்கும் நாக்பூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு அதில் வெற்றியும் கண்டவர். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு 6,60,221 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.

5. சதானந்தகவுடா

புள்ளி விபரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சராகவும், ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறையின் அமைச்சராகவும் அவர் பதவி வகித்து வந்தார்.

6. நிர்மலாசீதாராமன்

இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையப் பெற்றவர் நிர்மலா சீதாராமன் ஆவார். கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், மனோகர் பரிக்கர் கோவாவின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு 2017 ல் ராணுவ அமைச்சராக பதவி ஏற்றார்.

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி வந்தவர். ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் நிதி அமைச்சரவையின் கீழே வரும் ஃபினான்ஸ் மற்றும் கார்ப்பரேட் அஃபெர்ஸ் அமைச்சராக பதவி வகித்து வந்தவர். 2017ம் ஆண்டு கர்நாடகாவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

7. ராம்விலாஸ்பஸ்வான்

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராவார். இவர் இம்முறை எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும், இவருடைய மகன் சிராக் பஸ்வான் ஜமுய் தொகுதியில் (பிகார்) வெற்றி பெற்று மக்களவை செல்கிறார். தந்தை மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதோடு தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த ஆட்சியில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

8. நரேந்திரசிங்தோமர்

ஊரக மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களின் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் நரேந்திர சிங் தோமர். கடந்த முறை குவாலியரில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தன்னுடைய சொந்த ஊர் அமைந்திருக்கும் மொரேனா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

9. ரவிசங்கர்பிரசாத்

சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்தார். பிகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாஹிப் என்ற தொகுதியில் இவர் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், தன்னுடைய ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர்.

10. ஹர்சிம்ரத்பாதல் (அகாலி தளம்)

உணவு பதனிடும் தொழிற்துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றிருந்தார். சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து தெற்கு பஞ்சாப்பில் அமைந்திருக்கும் பதிண்டா தொகுதியில் அம்ரிந்தர் சிங் ராஜா என்ற காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்தும், ஆம் ஆத்மியின் பால்ஜிந்தர் கவுர் என்ற வேட்பாளரையும் எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.

11. தாவர்சந்த்கெலோட்

சமூக நீதி மற்றும் மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சராக பணியாற்றி வந்தார். மத்தியப் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

12. ஜெய்சங்கர்

தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட எஸ். ஜெய்சங்கர் முன்னாள் வெளியுறவு பாதுகாப்புத்துறை செயலாளராக பதவி வகித்தவர். திருச்சியில் பிறந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பினை முடித்தது குறிப்பிடத்தக்கது.

13. ரமேஷ் பொக்ரியால்

14. அர்ஜூன்முன்டா

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் இவர். முன்பு பழங்குடி மக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

15. ஸ்மிரிதிஇரானி

காங்கிரஸ் கட்சியின் குடும்பத் தொகுதியான அமேதியில் கடந்த முறை ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். ஆனால் இம்முறை மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கின்றார்.
16. ஹர்ஷவர்தன்

17. பிரகாஷ்ஜவடேகர்

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தல்களை சந்திக்காமல் பதவி ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

18. பியூஷ்கோயல்

இந்த ஆண்டு பாஜக அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டை தாக்கலின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் பியூஷ் கோயல். இந்தியாவின் நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சராக 2017ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக பதவி வகித்த இவர் கடந்த முறை மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்பட்டார்

முன்னாள் மத்திய அமைச்சர் வேத் ப்ரகாஷ் கோயலின் மகனான இவருக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே ரயில்வே, நிதி, எரிசக்தி, நிலக்கரி போன்ற துறைகளின் அமைச்சராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.

19. தர்மேந்திரபிரதான்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையின் அமைச்சராக கடந்த 5 ஆண்டுகள் பதவி வகித்தார். பிகாரின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு புதிய பொறுப்புகள் அன்று வழங்கப்பட்டது.

20. முக்தார்அப்பாஸ் நக்வி

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆவார். ஜூலை 8, 2016ம் ஆண்டு முதல் ஜார்கண்ட்டின் ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார்.
21. பிரகலாத் ஜோஷி

22. மகேந்திரநாத்பாண்டே

23. அரவிந்த்சாவந்த்

24. கிரிராஜ்சிங்

பிகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் போட்டியிட்டு 4,22,217 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாவர் இவர். இவரை எதிர்த்து இந்த தொகுதியில் போட்டியிட்டவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் ஆவார்

சி.பி. சார்பில் அவர் போட்டியிட்டார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் அமைச்சராக அவர் கடந்த முறை பணி புரிந்து வந்தார்.

25. கஜேந்திரசிங்ஜெகாவத்

கடந்த முறை விவசாயிகள் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சராக பதவி பொறுப்பேற்றவர் இவர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜோத்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் இவர். இவருக்கு எதிராக இம்முறை, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாத்தின் மகன் வைபவ் கெலாத் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
26. சந்தோஷ்குமார் கங்வால்
27.
இந்திரஜித் சிங்

28. ஸ்ரீபத்யெஸ்ஸோ நாயக்

ஆயுர் வேதம், யோகக்கலை, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் அமைச்சராக பதவியேற்றிருந்தார். வடக்கு கோவாவில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் ராயா சோதன்கரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ரவி எஸ் நாயக்கை தோல்வியுற செய்தவ்ர் என்பது குறிப்பிடத்தக்கது.
29. ஜிதேந்திர சிங்

30. கிரன்ரிஜிஜு

இவர் மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அருணாச்சலம் மேற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

31. பிரகலாத் சிங் படேல்
32. ராஜ்குமார் சிங்
33. ஹர்தீப்சிங் பூரி
34. மன்சூக் மண்டோலியா
35. பஹன் சிங் குலஸ்தே

36. அஸ்வினிகுமார் சவுபே

2014 தேர்தலில் தெற்கு பிகாரில் அமைந்திருக்கும் புக்சார் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.

37. அர்ஜூன்ராம் மெக்வால்
38. வி.கே.சிங்
39. கிரிஷன் பால் குர்ஜார்
40. கிஷன் ரெட்டி
41. புருஷோத்தம் ரூபாலா

42. ராம்தாஸ்அத்வாலே

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் தலைவராக பதவி வகித்தவர் இவர்.

43. சாத்வி நிரஞ்சன் சோதி
44. சஞ்சீவ் பால்யன்
45. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே
46. அனுராக்சிங் தாகூர்
47. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா
48. நித்யானந்த் ராய்
49. ரத்தன்லால் கட்டாரியா
51. சோம் பர்காஷ்
52. ராமேஷ்வர் டெலி
53. பிரதாப் சந்திர சாங்கி
54. கைலாஷ் சவுத்ரி
55. தீபஸ்ரீ சவுத்ரி


arrow_upward