மொத்தப் பக்கக்காட்சிகள்

கொரானாவுக்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் மீண்டு விடுமா? - பொருளாதார நிபுணர் உமா மகேஸ்வரன்


கொரானாவுக்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் மீண்டு விடுமா?

பொருளாதார நிபுணர் உமா மகேஸ்வரன்  

கொரோனா மருத்துவம் பார்க்க பிச்ச போடுங்கைய்யா என்று நம்மிடம் பிச்சை கேட்கிறார்கள். அவர்களுக்கு பிச்சையிட நம்மை பிச்சையெடுக்கவும் விட்டிருக்கிறார்கள்.  அடுத்த பஞ்சாயத்து 20 - 30 வயதுடையோர். அவர்கள் படிப்புக்கேற்ற வேலையில் (professional job) சேர இயலாத சூழல்.

படித்த இளைஞர்கள் "ஊபர் - ஓலா, சுவிக்கி - சொமாட்டோ டெலிவரி பாய் தலைமுறை"

ஒன்று (DSLR/ Ola driver/ Swiggy delivery boy generation) உருவாகியிருப்பதை நாம் கண் கூடாகவே காண முடிகிற உண்மை நிலை.   10 வருடம் முன்பு நான் UPSC aspirant என்று சொன்ன கூட்டத்தில் கணிசமான அளவில் இன்று நான் ஒரு Swiggy டெலிவரி செய்யும் இஞ்சினியர் என்று சொல்லத்தக்க ஒரு கூட்டமாக ஆகியிருக்கிறது.  

இவர்களால் கொரோனாவுக்கு பின்னர் ஏற்படப்போகும் அந்த இடைவெளியை நிரப்ப முடியாது. தாங்க மாட்டார்கள்.  அந்த 30 - 45 வயதினர் வீட்டுக்கு அனுப்பப்படும் போது அவர்களுக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ள திறமையான தொழிலாளர்கள் (skilled workforce) இங்கே இல்லை.


மேலும் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் ஆட்களுக்கு இங்கே வந்தாலும் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. மேலும் இத்தனை காலம் அன்னிய செலாவணி அள்ளி கொடுத்த அவர்கள் இனிமேல் நமக்கு பாரம் தான். 

இந்தச் சூழலைத் தான் கடந்த 6 வருட ஆட்சி நமக்கு கொடுத்திருக்கிறது. "அச்சே தின்" (Ache dhin) என்பது எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டம் இது.  

மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடும் எலிகளை போல (Rats fleeing the sinking ship) என்பதுபோல், இவர்கள் மூழ்கடித்த இந்திய பொருளாதாரத்தை நரி பேர்லே எழுது, ஓட்டேரி நரி பேர்லே எழுது என்பதுபோல் கொரோனா மேல் எழுதி விட்டு பதமாக நகர்வார்கள்.
நகர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். 

கொரோனாவுக்குப் பின் பீடு நடை போடப்போகும் தொழில் என்று எதையுமே சொல்ல முடியாது. ஆகவே சங்கிகள் இன்னும் அதிகமாக தேசபக்தி பாடல்கள் பாடுவார்கள்.  விளக்கேற்றுவார்கள், பாத்திரம் தட்டுவார்கள், பெரிய ராமர் கோயில், வானுயர அனுமார் சிலை, ஜடாயு, ஜாம்பவான் கோயில் கட்டுவார்கள்.

ஆனால் மறந்தும் பொருளாதார மீட்சி குறித்து பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.  அச்சே தின், பொச்சே தின் என்று கதைவிடலாம்.

ஆனால் அதை கொண்டு வருவது என்பது குதிரைக் கொம்பு என்று அவர்களுக்குத் தெரியும்.  எரியும் வீட்டில் ஒரு டம்பளர் கொண்டு உங்களை தீயணைக்க சொல்லி விட்டு, அவர்கள் அடுத்த வீட்டுக்கு தங்கள் பெட்டிப் படுக்கையை தயார் செய்வார்கள். 

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டதில் ஹிட்லர் ரஷியாவை ஆக்கிரமிப்பு செய்தபோது, பின்வாங்கி வெளியேறிய ரஷ்யப்படை ஒரு காரியம் செய்தது. அவர்கள் வெளியேறும் நகரங்களின் வயல்வெளிகள், வணிக நிலையங்கள், வருவாய் தரும் எல்லாவற்றையும் கொளுத்தி விட்டு கிளம்பினார்கள்.  

ஹிட்லரின் படைகளுக்கு காய்ந்து கருவாடாகிப் போன  சுடுகாட்டு ஊர்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அதிலிருந்து அவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் உணவுக்கு வழியின்றி வாடி வதங்கி ஹிட்லரின் போர் படையினர்  மடிந்தார்கள்.

 அதே போன்றே இந்தியாவை சூறையாடி விட்டு நமக்கு சுடுகாட்டை மட்டும் விட்டு விட்டு கிளம்புவார்கள் சங்கிகள். நமக்கு ஒரு பெரிய சைஸ் திருவோடும், தம்தூண்டு உடைந்த அகல் விளக்கும் மட்டுமே கிடைக்கும்.  

அதை வைத்து கம் எகானமி கம், கம் எகானமி, கம் பாசிடிவ் எகானமியே வா வா வா, ஜெய் எகானமி என்று ஒரு 110 வருடம் கத்தினால் போதும். நமக்கு எகானமி கிடைத்துவிடும்.  நாம் வல்லரசாகி விடுவோம்!. 

கொடூரமான காலம் காத்திருக்கிறது. மிக மிக அண்மையில்...      
                       
வாட்ஸ் அப். இவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்தே…


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஜாக்கிரதை டிஜிட்டல் கைது

MINISTRY OF HOME AFFAIRS IC Indian Cybor Orme Coordination Contre ஜாக்கிரதை டிஜிட்டல் கைது இது எப்படி நடக்கிறது? மோசடி செய்பவர்கள், உங்கள் ப...