மொத்தப் பக்கக்காட்சிகள்

மே 31 -க்கு பிறகும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது. ஏன்? - பொருளாதார நிபுணர் உமா மகேஸ்வரன்


பொருளாதார  நிபுணர்  உமா மகேஸ்வரன் 

மே 31 -க்கு பிறகும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது.



ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த அளவுகோல்கள் மொத்தமாக மாறும்.  கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது.  இதுவரை உங்களுக்கு ஆதரவாக, சம்பளம்  கொடுத்து வருவதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி பணி நீக்கம் எனும் அத்தியாயங்களை தொடங்குவார்கள்.; தொடங்கி விட்டார்கள். 

ஆட்குறைப்பு (Downsizing) விளையாட்டில் காவு வாங்கப்படவிருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஊகிக்கவே முடியவில்லை.


இதில் பெருத்த அடி வாங்கப் போவது   தகவல் தொழில்நுட்ப (IT)  நிறுவனங்கள், எரிசக்தி பெட்ரோலிய நிறுவனங்கள், சுற்றுலா துறையும் அதை சார்ந்த பல துறைகள் (ஹோட்டல்கள்) போன்றவை. மறுசுழற்சி துறைகள் நொண்டுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில், அச்சு இதழ்களையும் சேர்த்துக்கொள்ளலாம். 

கடைசியாக, இந்த மொத்த களேபரத்தின்  முதல் பலி 30 - 45 வயதுடைய  நடுத்தர வயது பொதுமக்கள் (மிடில் கிளாஸ் காமன் மேன்) தான்.  கையில் காசு, வாயில் தோசை, சேமிப்பு என்பது கானல் நீர். வேலை பாதுகாப்பு என்பது இனி பகல் கனவு. எந்நேரமும்  முடிக்கப்படலாம் என திவாலாக காத்திருக்கும் நிறுவனங்கள்.

இப்படி நடு தட்டு ஏழைகள் (middle class paupers) உருவாகுவார்கள்.  இதர நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கொரோனா தான் மிகப்பெரிய பேரிடர்.

2008 - 09 காலக் கட்டத்தை கடந்தப் பின்னர் அவர்களது பொருளாதாரம் சீரானது. இங்கே நாம்  அடி வாங்கும் நிலையில் தான் உள்ளோம். இங்கே நிலைமை இது தான்.   கொரோனாவுக்கு முன்பாகவே, நமது பொருளாதாரத்தை சூறையாடிய, "மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பேரழிவு" (Man made crisis) என்றால் அது பண மதிப்பிழப்பு நடவடிக்கை (demonization) மட்டுமே.  பண மதிப்பிழப்பு...


தொழில் துறையில் சிறு குறு தொழில்கள், குடிசை தொழில்கள், தொடக்க நிறுவனங்கள், சுய தொழில்கள், மைக்ரோ வணிகம் ஆகியவற்றை (small players, startups, cottage Industries, self reliant micro business) கொத்தாக கபளீகரம் செய்து முடித்தது.

குத்துயிரும் கொலை உயிருமாக இயங்கிய மீதி தொழில்களை சரக்கு மற்றும் சேவை வரி (GST)  சோலி முடித்துவிட்டது.

இப்பொழுது இருப்பதாக காட்டப்படும் பொருளாதாரம் (economy) ஒரு திரிசங்கு சொர்க்கம் (quasi steady state) என்றால் அது மிகையே இல்லை...


 பிரதமர் நரேந்திர மோடி  சொன்ன "Trillion dollar economy" என்றால் என்ன ?

அது சாத்தியமா? என்று மெத்தப் படித்த பொருளாதார நிபுணர்களிடம் (social economist) கேட்டுப் பாருங்கள்.

 சிரித்தே செத்து விடுவார்கள்...  இப்படி இந்தியா என்ற கட்டமைப்பையே மொத்தமாக காலி செய்ய, வைரசை விட ஒன்று காத்திருகிறது. அது தான் சீர்கெட்ட பொருளாதாரம். 

கடந்த 1920 களில் ஹெர்பட் ஹூவரின் அமெரிக்கா வாங்கிய பொருளாதார அடியை விட, இந்திய பொருளாதாரம் வாங்கப் போகும் அடி ராஜ நொண்டலாக இருக்கும்.   இதையும் முதலில் கண்டு கொண்டவர்கள் சங்கிகள் தான். சொன்னால் நம்ம மாட்டீர்கள். ஆனால் அவர்களது திட்டமிட்ட செயல்பாடுகள் (modus operandi) அப்படித் தான் இருக்கிறது.



இதுவரை அதிக கடன் வாங்கி நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எதேச்சையாக வெளியேறவில்லை. பக்காவாக திட்டமிட்ட செயல் அது.  இங்கே இருப்பதை வாரி சுருட்டிக் கொண்டு திடமான பொருளாதாரம் கொண்ட ஊரில் அடைக்கலமாகுதல்.

எளிமையாக சொல்வதென்றால் பிரிட்டிஷ் காரர்கள் இங்குள்ள வளங்கள் எல்லாவற்றையும் அங்கே எடுத்து சென்று தங்களை வளமாக்கிக் கொண்டார்களே அந்த மாதிரி.
  
வங்கிகளில் கடன் வாங்கி வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வார்கள், அவர்கள் பெற்ற கடனை மட்டும் வாராக் கடனாக்கி தள்ளுபடி செய்து விட்டு என் போன்ற உங்களைப் போன்ற குப்பன் சுப்பனிடம் அய்யா!

 வாட்ஸ் அப். இவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்தே

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...