மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கோல்டன் இயர்ஸ் எஃப்.டி திட்டத்தின் சிறப்பம்சங்கள்

.சி..சி. பேங்க் (ICICI Bank),  மூத்த குடிமக்களுக்காக சிறப்பு நிலையான வைப்பு (எஃப்.டிதிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. ‘.சி..சி. பேங்க் கோல்டன் இயர்ஸ் எஃப்.டி’ (ICICI Bank Golden Years FD) என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம்மூத்த குடிமக்களுக்கு ரூ.2 கோடி வரை வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 6.55% வட்டி விகிதம் வழங்குகிறது. இதன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையாகும்



திட்டத்தின் சிறப்பம்சங்கள்  (Highlights of the scheme):
·         மேம்படுத்தப்பட்ட வட்டி விகிதங்கள் (Enhanced interest rates): இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் எஃப்.டி.களில் அதிக வட்டி விகிதத்தை, 5 ஆண்டுகள் 1 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்துக்கு  பெறுவார்கள். இது ரூ. 2 கோடிக்கும் குறைவான ஒற்றை எஃப்டிக்கு (single FD) பொருந்தும்.
·         முதலீட்டுக் காலம் (Period): இந்தத் திட்டத்தில் 2020 மே 20 முதல் செப்டம்பர் 30 வரை முதலீடு செய்யலாம்.
·         புதிய மற்றும் பழைய எஃப்.டி.க்களுக்கு (For new and old FDs): இந்தத் திட்டம் புதிய எஃப்.டி.கள் மற்றும் அத்துடன் புதுப்பிக்கப்படும் பழைய எஃப்.டிகளுக்கு பொருந்தும்..
·         எஃப்டிக்கு எதிரான கடன் (Loan against FD):  வாடிக்கையாளர்கள் தங்கள் எஃப்.டி அசல் மற்றும் சேர்ந்திருக்கும் வட்டியில் 90%  கடன் பெறலாம்
·         எஃப்டிக்கு க்கு எதிரான கடன் அட்டை (Credit card against FD): வாடிக்கையாளர்கள் வங்கி மூலம் தாங்கள் போட்டிருக்கும் எஃப்.டி.க்கு எதிராக கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் வங்கியின் இணைய தளம் மூலம் வசதியாக மற்றும் உடனடியாக தாங்கள் போட்டிருக்கும் எஃப்.டி.க்கு எதிராக கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்அல்லது அருகிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ கிளை மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

*: 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை காலவரையறை கொண்ட எஃப்.டி.க்கள் மற்றும் ரூ .2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகை. இது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பொருந்தும் . இந்தத் திட்டம் 2020 மே 20 முதல் செப்டம்பர் 30 அமலில் இருக்கும்.

ஐசிஐசிஐ பேங்க் இணைய வங்கியில் உள்நுழைக:

Download ICICI Bank iMobile app by visiting:

புதிய திட்டத்தைப் பற்றி மேலும் அறியபார்வையிடவும்:  https://www.icicibank.com/interest-rates.page

செய்தி மற்றும் புதிய தகவல்களுக்குபார்வையிடவும் www.icicibank.com மற்றும் ட்வீட்டரில் பின் தொடர

ஐசிஐசிஐ பேங்க் பற்றி  (About ICICI Bank): ஐசிஐசிஐ பேங்க் லிமிடெட் (BSE: ICICIBANK, NSE: ICICIBANK and NYSE: IBN), இந்தியாவின் முன்ன்ணி தனியார் வங்கிஇந்த வங்கியின் ஒருங்கிணைந்த மொத்த சொத்துகள்,  மார்ச் 31, 2020 -ல்ரூ. 13,77,292 கோடியாக உள்ளது.சி..சி. வங்கியின் துணை நிறுவனங்களில், இந்தியாவின் முன்னணி தனியார் துறை காப்பீடுசொத்து மேலாண்மை மற்றும் பத்திர தரகு (insurance, asset management and securities brokerageநிறுவனங்கள் அடங்கும்இது இந்தியா உட்பட 15 நாடுகளில்  இயங்கி து



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500, நிஃப்டி மிட் ஸ்மால் ஃபைனான்சியல் சர்வீசஸ் டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸ் ஃபண்ட் Motilal Oswal Nifty Mid Small Financial Services Total Return Fund

திரு .  ஆர் .   வெங்கடேஷ் , குருராம் ஃபைனான்சியல்   சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்     குறைந்தபட்ச முதலீடு ரூ . 500, நிஃப்டி மிட் ஸ்மா...