மொத்தப் பக்கக்காட்சிகள்

சாண்டில்யனின் புகழ்பெற்ற 41 நாவல்கள் இலவச டவுண்லோடு செய்ய...!

சாண்டில்யனின் புகழ்பெற்ற  41 நாவல்கள்

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் - ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி.

1929இல் ரங்கநாயகியை மணந்தார்.


கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஒரு சமயம் கல்லூரிப் பெண்கள் சிலர் சாண்டில்யனைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது ஒரு மாணவி, ‘‘சில வேளைகளில் உங்கள் நாவல்களில் அதிகமாகக்கூட (செக்ஸியாக) எழுதிவிடுகிறீர்களே’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘‘எந்த இடத்தில் அதிகம் என்று சொல்ல முடியுமா” என்று வினவியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி, ‘‘அதெப்படி முடியும்? பல இடங்களில் இருக்கின்றன’’ எனச் சொல்ல... ‘‘எந்த இடத்திலும் இலக்கிய வரம்பை மீறி, பண்பாட்டு வரம்பை மீறி, எதுவும் இருக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு. இலக்கியத்துக்கும் அப்படித்தான்’’ என்று பதிலளித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிருபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’, ஹிந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஹிந்துஸ்தான் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார்.

திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன் மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர் புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.

இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள்
 கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர். அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.

இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம். முக்கியமாக ‘குமுதத்தில் இவர் எழுதிய கன்னி மாடம், யவன ராணி, கடல் புறா போன்ற தொடர்கள் வெகு ஜன வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன.  சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார். இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கிய நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின.

நாட்டுடைமை சர்ச்சை

2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் முன்வந்தது. வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, சுந்தர ராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் கண்டனம் தெரிவித்தனர். சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.

கடல் புறா பாகம்-1 93.3 MB



கடல் புறா பாகம்-2 115.66 MB



கடல் புறா பாகம்-3 168.61 MB



யவன ராணி பாகம்-1 60.73 MB


யவன ராணி பாகம்-2 135.79 MB


ஜலதீபம் பாகம்-1 69.75MB



ஜலதீபம் பாகம்-2 56.68 MB



ஜலதீபம் பாகம்-3 83.84MB



ராஜ பேரிகை பாகம்-1 12.53 MB


ராஜ பேரிகை பாகம்-2 12.6 MB


ராஜ பேரிகை பாகம்-3 17.9 MB


ராஜ முத்திரை பாகம்-1 53 MB


ராஜ முத்திரை பாகம்-2 44 MB


ராஜ முத்திரை பாகம்-3 61 MB


விஜய மகாதேவி-1 71MB


விஜய மகாதேவி-2 70 MB


விஜய மகாதேவி-3 117 MB


அவனி சுந்தரி 20.51 MB



சந்திரமதி 4.11 MB



சேரன் செல்வி 45.64 MB



சித்தரஞ்சனி 83.31 MB



இளைய ராணி 19.67 MB



இந்திர குமாரி 67.32 MB



ஜீவபூமி 13.96MB



கடல் வேந்தன்  26.31 MB



கடல் ராணி 46.55 MB



கன்னி மாடம்  101.7 MB



கவர்ந்த கண்கள் 112.88 MB



மாதவியின் மனம்  6.07 MB



மது மலர் 77.64 MB



மலை அரசி 13.31 MB



மஞ்சள் ஆறு 112.36 MB



மலை வாசல் 92.23 MB



மங்கள தேவி 10.67 MB


மன்னன் மகள் 167.36 MB



மண்மலர்


மோகன சிலை 79.39 MB


மோகினி வனம் 19.18 MB


மூங்கில் கோட்டை 188.65 MB


நாக தீபம் 55.62 MB


நாக தேவி 170.12 MB


நங்கூரம் 20.33 MB


நீல ரதி 10.44 MB


நீல வள்ளி 9.11 MB


நீள் விழி  9.23 MB


பல்லவ பீடம் 59.49 MB


பல்லவ திலகம் 33.86 MB


பாண்டியன் பவனி 24.17 MB


ராஜ யோகம் 12.44 MB


ராணா ஹமீர் 37.74 MB


துறவி 16.27 MB


உதய பானு 66.91 MB


இந்துமத நூல்களையும், ஆன்மீகப் பெரியோர்களின் சொற்பொழிவு காணொளிகளையும் பரிமாறிக் கொள்ளவும் HINDUTVA FOLLOWERS முகநூல் குழுவில் கீழ்க்கண்ட தொடுசுட்டியின் மூலம் https://www.facebook.com/groups/368176627454194/ இணைத்திடுங்கள். எங்களது HINDUTVA FOLLOWERS டெலிகிராம் குழுவில் சேர https://t.me/hindutvafollowers மூலம் இணைத்திடுங்கள்.

TLS TAMIL BOOKS BANK Telegram Group:


TLS TAMIL MEDICAL BOOKS BANK Telegram Group: https://t.me/joinchat/HZyPlBOtF5xXE0sOUhELrA

TLS SANSKRIT BOOKS BANK TELEGRAM CHANNEL Invite Link: t.me/TLS_SanskritBooks

TLS AYURVEDA & HOLISTIC MEDICINE BOOKS BANK Telegram Group: https://t.me/joinchat/HZyPlBFsiwzH3CHA5BdtyA



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...